For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மிக மிக மோசமாக டிவிட் செய்த ஐசிசி.. கடும் விமர்சனத்தால் டெலிட்.. யாரைப் பற்றி தெரியுமா?

ஐசிசியின் உலகக் கோப்பை போட்டிக்கான டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட புகைப்படம் ஒன்று பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

லண்டன்: ஐசிசியின் உலகக் கோப்பை போட்டிக்கான டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட புகைப்படம் ஒன்று பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. மிக முக்கியமான போட்டிகள் வரிசைகட்டி காத்துக் கொண்டு இருக்கிறது.

தற்போது வர நடந்த போட்டிகள் எல்லாம் பெரிய அளவில் பரபரப்பு, விறுவிறுப்பு இல்லாமல் நடந்து முடிந்துள்ளது. பெரிதாக எந்த போட்டியும் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தவில்லை.

அவருக்கு அப்படி நடந்திருக்க கூடாது.. ஐஸில் வைக்கப்பட்ட விரல்.. கோலிக்கு ஏற்பட்ட காயத்தால் அதிர்ச்சி அவருக்கு அப்படி நடந்திருக்க கூடாது.. ஐஸில் வைக்கப்பட்ட விரல்.. கோலிக்கு ஏற்பட்ட காயத்தால் அதிர்ச்சி

என்ன போட்டி

என்ன போட்டி

நேற்று ஆஸ்திரேலியாவிற்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையில் கிரிக்கெட் போட்டி நடந்தது. மிகவும் அதிரடியாக ஆடிய, ஆப்கானிஸ்தான் 38.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 207 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி நன்றாக விளையாடினாலும் பெரிதாக அந்த அணியால் ஆஸ்திரேலியா பவுலிங்கை தாக்கு பிடிக்க முடியவில்லை.

ஆஸ்திரேலியா பவுலிங்

ஆஸ்திரேலியா பவுலிங்

ஆப்கானிஸ்தானில் ரஹ்மத் ஷா, ரஷீத் கான், நஜிபுல்லா, குல்பதீன் ஆகியோர் மிக சிறப்பாக ஆடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த அணி எளிதாக 207 ரன்கள் எடுத்தது. ஆனாலும் அந்த அணியால் கடைசியில் வெற்றிபெற முடியவில்லை. இதற்கு ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு மிக முக்கிய காரணம்.

எப்படி வெற்றி

எப்படி வெற்றி

அதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா 34.5 ஓவரில் 3 விக்கெட்டிற்கு 209 ரன்கள் எடுத்து வென்றது. ஆஸ்திரேலியா அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடியது. ஆரோன் பின்ச் 66 ரன்கள் எடுத்தார். டேவிட் வார்னர் 89 ரன்கள் எடுத்தார். முக்கியமாக டேவிட் வார்னர் தொடக்கத்தில் இருந்து மிகவும் அதிரடியாக ஆடி வந்தார்.

டேவிட் வார்னர்

டேவிட் வார்னர்

வார்னர் 8 பவுண்டரி அடித்து 114 பாலில் 89 ரன்கள் குவித்தார். வார்னர் விக்கெட்டை எடுக்க ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் பல முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களால், வார்னர் விக்கெட்டை எடுக்க முடியவில்லை. இந்த நிலையில் அவர் ரன் அவுட் ஆவதற்கான வாய்ப்பு ஒரு முறை ஏற்பட்டது.

ரன் அவுட்

ரன் அவுட்

13வது ஓவரில் வார்னர் இரண்டு ரன்கள் ஓட முயன்ற போது, சரியாக ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பரை நோக்கி பந்து வீசப்பட்டது. அவர் அதை சரியாக பிடித்து இருந்தால் , கண்டிப்பாக வார்னர் விக்கெட்டை எடுத்து இருக்க முடியும். ஆனால் ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ஷாஷாத் பந்தை பிடித்துவிட்டு கீழே தவறி விழுந்தார்.

வைரல்

வைரல்

அவர் கீழே தவறி விழுந்ததால் வார்னர் விக்கெட்டை நழுவ விட்டார். அதே சமயம் அவர் கீழே விழுந்த புகைப்படம் பெரிய வைரலாகி உள்ளது. இதை ஐசிசியின் உலகக் கோப்பை போட்டிக்கான டிவிட்டர் பக்கம் ஷேர் செய்து, இதை மியூசியத்தில் வைக்க வேண்டும் என்று டிவிட் செய்துள்ளது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இது நிறைய விமர்சனங்களை சந்தித்தது. ஐசிசியின் உலகக் கோப்பை போட்டிக்கான டிவிட்டர் பக்கம் இப்படி டிவிட் செய்து இருக்க கூடாது. இது அவரின் உடலை கிண்டல் செய்வது போல இருக்கிறது என்று பலர் கூறினார்கள். இதனால் அந்த டிவிட்டை ஐசிசியின் உலகக் கோப்பை போட்டிக்கான டிவிட்டர் பக்கம் டெலிட் செய்துவிட்டது.

Story first published: Sunday, June 2, 2019, 13:20 [IST]
Other articles published on Jun 2, 2019
English summary
ICC trolls Mohammad Shahzad on Twitter only to delete it later after backfire.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X