
யார் அவர்
இந்த போட்டியில் இந்திய அணியின் டிரம்ப் கார்ட் என்றால் அது பண்ட்தான். ஆம் அவர் இன்று அணியில் எடுக்கப்பட்டதே இது போன்ற பெரிய ஸ்கோரை எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். இங்கிலாந்து அணிக்கு எதிராக இப்படி அதிரடியாக டி 20 பாணியில் ஆட கூடிய வீரர் வேண்டும் என்றே அவரை அணி நிர்வாகம் களமிறக்கி இறக்கி உள்ளது.

அனுமதி
அதனால்தான் பொறுமையாக ஆடும் விஜய் சங்கர் கழற்றிவிடப்பட்டு இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள். இதனால் தற்போது ரிஷப் பண்டிற்கு அதிரடியாக ஆட, முதல் பந்தில் இருந்தே பாண்டியா போல அதிரடி காட்ட அனுமதி அளித்துள்ளனர். 30-40 ஓவர்களுக்கு இடையில் இந்திய அணியின் ரன் ரேட் குறையாமல் இருக்க வேண்டும் என்பதே தற்போது பண்டின் வேலை.

ஆதரவு
தற்போது இந்திய அணி நிர்வாகத்தின் முழு ஆதரவு பண்டிற்கு இருக்கிறது. இதனால் அவர் எப்படி விருப்பப்படுகிறாரோ அப்படி ஆட முடியும். அதேபோல் ரசிகர்களும் இவருக்கு பெரிய அளவில் ஆதரவு அளிக்கிறார்கள். அதற்கு இன்று பண்ட் பெயரை கோலி சொன்ன போது ரசிகர்கள் எழுப்பிய கரகோஷமே சிறந்த உதாரணம் ஆகும்.

சூப்பர்
வெறும் 5 ஒருநாள் போட்டிகள் விளையாடிய எந்த ஒரு இளம் வீரருக்கும் ரசிகர்கள் இவ்வளவு ஆரவாரமாக வரவேற்பு அளித்தது கிடையாது. ஆனால் பண்டிற்கு அவ்வளவு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் அதிரடியாக ஆடும் அதே வேளையில் இவர் அவுட்டாகாமல் இருக்க வேண்டும் என்பதும் முக்கியம். அதுதான் இவரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.

ஆடினார்
இவர் இன்று நடக்கும் போட்டியில் நன்றாக ஆடி 50+ரன்களுக்கு மேல் அதிரடியாக எடுத்தால்தான் அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க முடியும். இதனால் இவர் அதிரடியாக ஆடும் வேளையில் பொறுப்பாக ஆட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார். கடந்த சில போட்டிகளில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் சொதப்பியது போல இனி சொதப்ப கூடாது என்பதே இவருக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் டாஸ்க் ஆகும்.


Click it and Unblock the Notifications