For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஏன் இப்படி செய்தீர்கள்.. இந்திய ஆட்டத்தின் ஆரம்பமே சர்ச்சை.. ஐசிசியிடம் கேள்வி கேட்கும் வல்லுநர்கள்!

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டியின் தொடக்கமே பெரிய சர்ச்சை நிகழ்ந்து இருக்கிறது.

லண்டன்: இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டியின் தொடக்கமே பெரிய சர்ச்சை நிகழ்ந்து இருக்கிறது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. இந்த தொடரில் இன்று நடக்கும் போட்டி மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இரண்டு அணிகளுமே வலுவான அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இன்றைய போட்டியை காண அதிக அளவில் மக்கள் அரங்கத்திற்கு வந்து இருக்கிறார்கள். இரண்டு நாட்டு வீரர்களும் களமிறங்க தயாராகி இருக்கிறார்கள்.

அந்த ஒரு இடம்.. 2 தமிழக வீரர்கள் போட்டி.. யாருக்கு லக்.. இப்படித்தான் வாய்ப்பு அளிக்கப்படுமாம்! அந்த ஒரு இடம்.. 2 தமிழக வீரர்கள் போட்டி.. யாருக்கு லக்.. இப்படித்தான் வாய்ப்பு அளிக்கப்படுமாம்!

என்ன நிலை

என்ன நிலை

ஆனால் தற்போது லண்டனில் மோசமான வானிலை நிலவி வருகிறது. அங்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தற்போது அங்கு மழை காலம் என்பதால், இன்னும் அதிகமாக மழை பெய்து வருகிறது. தற்போது மேட்ச் நடக்கும் டிரெண்ட்போல்ட் மைதானம் இருக்கும் இடத்திலும் மழை பெய்து வந்தது.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

ஏற்கனவே மழை காரணமாக இலங்கை வங்கதேசம், இலங்கை பாகிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று இந்தியா நியூசிலாந்து மோதும் போட்டிகளும் மழையால் பாதிக்கப்படும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். 80% மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறினார்கள்.

ஆனால் இல்லை

ஆனால் இல்லை

ஆனால் அந்த இடத்தில் இன்று திடீர் என்று வானிலை மாறியது. முதலில் 80% மழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறிய வானிலை மையம் 20% மட்டுமே மழைக்கு வாய்ப்புள்ளது என்று மாற்றினார்கள். இதனால் இந்திய அணி போட்டிக்கு தயாரானது. களத்தில் இருந்த திரைகளும் கூட போட்டிக்கு சில நிமிடத்திற்கு முன் அகற்றப்பட்டது.

ஆனால் சிக்கல்

ஆனால் சிக்கல்

ஆனால் டாஸ் போடப்படவில்லை. மழையே பெய்யவில்லை என்றாலும் டாஸ் போடாமல் நடுவர்கள் தாமதம் செய்துள்ளனர். 2.30 மணிக்கு போட வேண்டிய டாஸ் 2.55 மணி வரை போடப்படவே இல்லை. மழையே இல்லாமல் ஏன் போட்டியை தாமதப்படுத்துகிறீர்கள் என்று இதனால் பலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

விளக்கம் என்ன

விளக்கம் என்ன

கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் இந்த கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள். இதற்கு ஐசிசி தரப்பை சேர்ந்த சில வல்லுநர்கள் பதில் அளித்துள்ளனர். அதில், மழை பெய்யவில்லை என்றாலும் ஆடுகளத்தை ஆராய வேண்டும். அதற்காக டாஸ் போடுவதை தாமதம் செய்து இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

Story first published: Thursday, June 13, 2019, 15:17 [IST]
Other articles published on Jun 13, 2019
English summary
ICC World Cup 2019: Issue over the delay of the match between Ind vs NZ, ICC faces backfire.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X