For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடிக்கிற அடியில… பாருங்க… என்னைய உலக கோப்பை டீம்ல சேர்ப்பாங்க.. யாருப்பா அது?

மும்பை:ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் உலக கோப்பை இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பு கிடைக்கும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் அஜின்கயே ரகானே கூறியிருக்கிறார்.

4 மற்றும் 5வது இடங்களில் யாரை களமிறக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் அணி பல பரிசோதனைகளை செய்து பார்த்துவிட்டது.ஆனால்... எதிர்பார்த்த பலனோ கிடைக்கவில்லை.

ரகானே, ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வால், மணீஷ் பாண்டே ஆகியோர் உள்ளனர். ஆனால்.. அவர்களை டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகின்றனர்.

2019 </a></strong><a class=ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்களை தாண்டப் போகும் 3 இந்திய வீரர்கள் இவர்கள் தான்! " title="2019 ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்களை தாண்டப் போகும் 3 இந்திய வீரர்கள் இவர்கள் தான்! " />2019 ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்களை தாண்டப் போகும் 3 இந்திய வீரர்கள் இவர்கள் தான்!

அணியில் இருந்து நீக்கம்

அணியில் இருந்து நீக்கம்

அதிலும் ஜூனியர் டிராவிட் என்று அழைக்கப்படும் ரகானே ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் பெற்று வந்தார். அதன்பிறகு.. சில மாதங்களாக நீக்கப்பட்டுள்ளார்.

நீடிக்கும் குழப்பம்

நீடிக்கும் குழப்பம்

உலக கோப்பை போட்டி தொடர் தற்போது நெருங்கி வருகிறது. எனவே.. 4வது இடத்துக்கான பொருத்தமான வீரரை தேர்வு செய்வதில் இனியும் தாமதம் கூடாது என்று கிரிக்கெட் வல்லுநர்களும், ரசிகர்களும் கூறி வருகின்றனர்.

தொடர்ந்து ஆலோசனை

தொடர்ந்து ஆலோசனை

இதே கருத்தை தான் கங்குலி, லட்சுமண் ஆகியோர் கூறி வந்தனர். அவர்கள் ரகானேவை 4வது இடத்துக்குத் தேர்வு செய்யலாம் என்று ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

ரகானே கருத்து

ரகானே கருத்து

இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரகானே இந்திய அணியில் இடம் பெறுவது குறித்து சில கருத்துகளை கூறியிருக்கிறார். அவர் தெரிவித்திருப்பதாவது:

வாய்ப்பு தேடி வரும்

வாய்ப்பு தேடி வரும்

உலக கோப்பைக்கான அணியில் நான் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இன்னும் முடிந்துவிடவில்லை. அதற்கு காலம் இருக்கிறது. ஐபிஎல்லில் சூப்பராக ஆடி ரன்களைச் சேர்க்கும் போது இந்திய அணிக்கான வாய்ப்பு தேடி வரும்.

மிகுந்த கவனம்

மிகுந்த கவனம்

எனவே... தற்போது எனது கவனம் அனைத்தும் ஐபிஎல் தொடரை நோக்கி தான் உள்ளது. அந்த போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதில் கவனமாக உள்ளேன்.

வாய்ப்பு தானாக வரும்

வாய்ப்பு தானாக வரும்

அதிக ரன்களை அடித்தால் இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்து விடும். உலக கோப்பையை பற்றி யோசித்தால் தற்போது ஐபிஎல்லில் கவனம் செலுத்த முடியாது. ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடும்போது, உலக கோப்பை வாய்ப்பு தானாக வரும் என்று ரகானே கூறினார்.

Story first published: Saturday, March 16, 2019, 16:03 [IST]
Other articles published on Mar 16, 2019
English summary
If I perform in the IPL, the World Cup slot will automatically come says Rahane.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X