For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தலைகீழாக தான் குதிப்பேன்.. ஆஸி,யை சமதானப்படுத்திய பிசிசிஐ..தோல்விக்கு பின் நாக்பூரில் நடந்தது என்ன??

நாக்பூர்: பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணியின் திட்டத்தை இந்தியா சொதப்பிவிட்ட சூழலில் அதை விட சிறந்த வியூகம் ஒன்றை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகின்றனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா பரிதாபமாக தோற்றது.

எனவே 2வது போட்டியில் எப்படியாவது கம்பேக் கொடுத்தே தீர வேண்டும் என அந்த அணியின் வீரர்கள் முனைப்புடன் உள்ளனர். அதற்காக தான் முதல் போட்டி நடந்த நாக்பூர் மைதானத்தை 2 நாட்களுக்கு தருமாறு கேட்டிருந்தனர்.

 ஆஸ்திரேலியா செய்த மெகா 4 தவறுகள்.. தோல்விக்கு நறுக் காரணம்.. சரி செய்வார்களா ஆஸி ? ஆஸ்திரேலியா செய்த மெகா 4 தவறுகள்.. தோல்விக்கு நறுக் காரணம்.. சரி செய்வார்களா ஆஸி ?

நாக்பூரின் பிட்ச்

நாக்பூரின் பிட்ச்

நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி 3 நாட்களில் முடிவடைந்துவிட்டதால், அடுத்த ஓரிரு நாட்களுக்கு பயிற்சிக்காக கொடுக்குமாறு ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் கோரியிருந்தார். நாக்பூர் பிட்ச்-ல் சுழலை எதிர்கொள்வதில் அதிக சிரமம் இருந்ததால் அதில் பயிற்சி பெறுவதில் ஏதேனும் பலன் கிடைக்கும் என்ற திட்டத்துடன் அதனை கேட்டிருந்தனர்.

ஊழியர்கள் சொதப்பல்

ஊழியர்கள் சொதப்பல்

ஆனால் ஆஸ்திரேலியாவின் திட்டத்தில் மண்ணை அள்ளிப்போடுவதை போல அதிகாரிகள் நடந்துக்கொண்டனர். அதாவது அந்த அணி ஓட்டல் அறைக்கு சென்றுவிட்டு வருவதற்குள் பிட்ச்-ன் அனைத்து பகுதிகளிலும் தண்ணீரை விட்டு தன்மையை மாற்றினர். இதனால் பயிற்சி பெறுவது பயனில்லாத ஒன்றாக அமைந்தது. இந்த செயலுக்காக பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.

அடுத்த ப்ளான்

அடுத்த ப்ளான்

இந்நிலையில் இதனை கண்டுக்கொள்ளாமல் அடுத்த திட்டத்திற்கு நகர்ந்துள்ளனர் அந்த அணி வீரர்கள். அதாவது முதல் டெஸ்ட் நடந்த பிட்ச்-க்கு அருகே உள்ள மற்றொரு செண்டர் பிட்ச்-ஐ கேட்டு வாங்கிவிட்டனர். இந்த பிட்ச்-ம் கிட்டத்தட்ட அதே போல தான் இருக்கும் என உணர்ந்து வாங்கினர். ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் நினைத்ததை விட ஏகபோகத்திற்கு பந்து சுழன்று வருகிறது.

திவீர பயிற்சி

திவீர பயிற்சி

இதனையடுத்து பயிற்சியாளர் ஆண்ட்ரூவ் டாப் ஆர்டர் வீரர்கள் டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ட்ராவிஸ் ஹெட் போன்ற வீரர்களை கூடுதல் நேரம் பேட்டிங் பயிற்சி செய்ய அறிவுறுத்தியுள்ளார். இதே போல ஸ்பின்னர்கள் ஆஸ்டின் ஆகர், நாதன் லியோனும், நட்சத்திர ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனும் தீவிர பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆஸ்டின் விக்கெட்களை அள்ளி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Story first published: Tuesday, February 14, 2023, 14:24 [IST]
Other articles published on Feb 14, 2023
English summary
Australian Team getting heavy training in the Nagpur pitch after Curators Spoiled it ahead of 2nd Test match against India
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X