அவர் வந்துட்டாரா? பேட்ஸ்மேன்களை அலற வைக்கும் இந்திய வீரர்.. தெறிக்கவிடும் ரிவர்ஸ் ஸ்விங்!

IND VS BAN | Shami threatens batsmen in 2nd innings | பேட்ஸ்மேன்களை அலற வைக்கும் ஷமி

இந்தூர் : இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஷமி டெஸ்ட் போட்டிகளில் தனி முத்திரை பதித்து வருகிறார்.

"இரண்டாம் இன்னிங்க்ஸில் விக்கெட் வேண்டுமா? கூப்பிடு ஷமியை.." என கூறும் அளவுக்கு இரண்டாம் இன்னிங்க்ஸில் அவரது பந்துவீச்சு துல்லியமாக உள்ளது.

முகமது ஷமியின் டெஸ்ட் போட்டி பந்துவீச்சு குறித்த புள்ளிவிவரம் ஒன்று வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

ரிவர்ஸ் ஸ்விங்

ரிவர்ஸ் ஸ்விங்

டெஸ்ட் போட்டிகளின் இரண்டாம் இன்னிங்க்ஸில் ஆடுகளம் மந்தமாக இருக்கும் போது பேட்ஸ்மேன்கள் முகமது ஷமியின் ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சை கணிக்க முடியாமல் திணறி விக்கெட்டை பறிகொடுத்து வருகின்றனர்.

இரண்டாம் இன்னிங்க்ஸ் சிறப்பு

இரண்டாம் இன்னிங்க்ஸ் சிறப்பு

ஷமிக்கு இரண்டாம் இன்னிங்க்ஸில் அப்படி என்ன தான் இருக்கிறது? பந்து மற்றும் மந்தமான ஆடுகளம் தான் காரணம். ஆம், பழைய பந்தில்தான் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியும். அதிலும் மந்தமான ஆடுகளத்தில் தன் ஸீம் முறை பந்துவீச்சை வைத்து பேட்ஸ்மேன்கள் கணிக்க முடியாத அளவுக்கு லேசாக ஸ்விங் செய்கிறார்.

பேட்ஸ்மேன்கள் திணறல்

பேட்ஸ்மேன்கள் திணறல்

இரண்டாம் இன்னிங்க்ஸில் அவரது ரிவர்ஸ் ஸ்விங் மற்றும் பந்துவீச்சு வேகத்தை கணிக்க முடியாத பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை பறிகொடுத்து வருகின்றனர். இரண்டாம் இன்னிங்க்ஸில் ஷமி பந்தை கையில் எடுத்தாலே ரசிகர்கள் மட்டுமின்றி, பேட்ஸ்மேன்களும் விக்கெட் எடுத்து விடுவாரோ? என எண்ணும் நிலையை உருவாக்கி இருக்கிறார்.

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர்

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர்

குறிப்பாக, தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தான் தன் ரிவர்ஸ் ஸ்விங் மேஜிக்கை முழுமையாக நிகழ்த்திக் காட்டினார் ஷமி. அந்த டெஸ்டின் முதல் இன்னிங்க்ஸில் ஒரு விக்கெட் கூட எடுக்காத ஷமி, இரண்டாம் இன்னிங்க்ஸில் அதிக தன்னம்பிக்கையுடன் பந்து வீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

23 ஆண்டு சாதனை

23 ஆண்டு சாதனை

அவர் எடுத்த 5 விக்கெட்களில், 4 விக்கெட்கள் பவுல்டு அவுட் முறையில் கிடைத்தது. இந்தியா வேகப் பந்துவீச்சாளர் ஒருவர் 23 ஆண்டுகள் கழித்து டெஸ்ட் போட்டியின் இரண்டாம் இன்னிங்க்ஸில் 5 விக்கெட் வீழ்த்திய சாதனை அன்று நிகழ்த்தப்பட்டது.

வங்கதேச டெஸ்ட்

வங்கதேச டெஸ்ட்

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் இன்னிங்க்ஸில் 4 விக்கெட் வீழ்த்தினார் ஷமி. இந்தப் போட்டிக்கு பின் ஷமியின் புகழ் மேலும் உச்சத்தை எட்டி இருக்கிறது. இந்திய அணியின் மூத்த வீரர் இஷாந்த் சர்மா பேசும் போது, ஷமி எப்படி இது போல விக்கெட் எடுக்கிறார் என தெரியவில்லை. அவரிடம் அது பற்றி கேட்க வேண்டும் என கூறி அவரை பாராட்டி இருந்தார்.

அதிக விக்கெட்

அதிக விக்கெட்

கடந்த இரு ஆண்டுகளில் இரண்டாம் இன்னிங்க்ஸில் அதிக விக்கெட் வீழ்த்தும் வீரர்களில் ஷமி முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 20 இன்னிங்க்ஸில் 51 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் இருக்கிறார்.

அடுத்த இடங்களில் யார்?

அடுத்த இடங்களில் யார்?

அவருக்கு அடுத்த இடத்தில் டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் 48 விக்கெட்களுடன் இருக்கிறார். ரபாடா - 34, பும்ரா - 29, மிட்செல் ஸ்டார்க் - 28 விக்கெட்கள் வீழ்த்தி அடுத்த இடங்களில் உள்ளனர்.

ஸ்ட்ரைக் ரேட் குறைவு

ஸ்ட்ரைக் ரேட் குறைவு

இதில் மற்றொரு முக்கிய சாதனையாக ஷமியின் ஸ்ட்ரைக் ரேட் மற்ற பந்துவீச்சாளர்களை காட்டிலும் குறைவாகவே உள்ளது. ஷமி 32.2 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். கம்மின்ஸ் 36.6 வைத்துள்ளார். மற்ற பந்துவீச்சாளர்கள் 40க்கும் மேல் தான் ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளனர்.

அச்சுறுத்தும் வேகப் பந்துவீச்சாளர்

அச்சுறுத்தும் வேகப் பந்துவீச்சாளர்

இந்தியா என்றாலே சுழற் பந்துவீச்சாளர்கள் தான் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்ற நிலை இருந்தது. அதை உடைத்து இருகின்றனர் பும்ரா மற்றும் ஷமி. அதில் ஷமி தனித்துவமாக இரண்டாம் இன்னிங்க்ஸில் புதிய சகாப்தம் படைத்து வருகிறார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IND vs BAN : Mohammed Shami threatens batsmen in second innings. He took 51 wickets in 20 innings in the last two years.
Story first published: Sunday, November 17, 2019, 12:06 [IST]
Other articles published on Nov 17, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X