For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தம்பி பரத்.. இந்தா இதைப் பிடி.. நேற்று வந்த இளம் வீரருக்கு கேப்டன் கோலி அளித்த மறக்க முடியாத கௌரவம்!

கொல்கத்தா : இளம் வீரர் ஸ்ரீகர் பரத் கையில் வங்கதேச டெஸ்ட் தொடரின் வெற்றிக் கோப்பையை கொடுத்து கௌரவப்படுத்தினார் கேப்டன் கோலி.

இந்தியா - வங்கதேசம் இடையே ஆன டெஸ்ட் தொடரை இந்தியா 2 - 0 என கைப்பற்றியது.

இந்த வெற்றிக்கு பின் அளித்த கோப்பையை அணியின் புகைப்படம் எடுக்கும் போது நேற்று காலை அணியில் இணைந்த மாற்று விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் கையில் அளித்தார் கேப்டன் கோலி.

தொடர் வெற்றி

தொடர் வெற்றி

வங்கதேச அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது இந்திய அணி. இந்த தொடரின் இரண்டு போட்டிகளையும் இந்தியா ஒரு இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் வென்றது.

மாற்று வீரர்

மாற்று வீரர்

இரண்டாவது போட்டியின் முதல் நாள் முடிவில் அணியின் மாற்று விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் உள்ளூர் போட்டிகளில் ஆட வேண்டி, அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மாற்று விக்கெட் கீப்பராக ஸ்ரீகர் பரத் அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

ஸ்ரீகர் பரத் போட்டியின் இரண்டாம் நாள் காலை அணியுடன் இணைந்தார். இந்த நிலையில், டெஸ்ட் போட்டி மூன்றாவது நாளுடன் முடிவடைந்தது. இந்தியா இன்னிங்க்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

மகிழ்ச்சி சம்பவம்

மகிழ்ச்சி சம்பவம்

இந்த வெற்றிக்குப் பின் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கையில் வெற்றிக் கோப்பை அளிக்கப்பட்டது. அவர் கோப்பையை இளம் வீரர் ஸ்ரீகர் பரத் கையில் அளித்து மகிழ்ந்தார். இன்னும் ஒரு சர்வதேச போட்டியில் கூட ஆடி இராத பரத், இந்த நிகழ்வால் உற்சாகம் அடைந்தார்.

புதிய மரபு

புதிய மரபு

இந்திய அணியில் ஒவ்வொரு முறையும் தொடரின் வெற்றிக்கு பின் கோப்பை இளம் வீரர்கள் கையில் வழங்கப்படுவது மரபாக மாறி வருகிறது. இது அவர்களை சிறப்பாக செயல்பட உத்வேகம் அளிக்கும் செயலாக உள்ளது.

Story first published: Sunday, November 24, 2019, 21:20 [IST]
Other articles published on Nov 24, 2019
English summary
IND vs BAN : IND vs BAN : Reserve Wicket keeper Srikar Bharath hold the test trophy as Kohli made him remember it for his life.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X