தோனியின் முக்கிய ரெக்கார்டை அடித்து உடைத்த கேப்டன் கோலி.. இந்திய கிரிக்கெட்டில் புதிய வரலாறு!

Kohli creates history in Indian test cricket

இந்தூர் : வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இந்தியா வென்றது, இந்த வெற்றி கேப்டனாக கோலியை புதிய உயரத்துக்கு அழைத்துச் சென்றுள்ளது.

இந்திய அளவில் எந்த கேப்டனும் எட்டாத உயரத்தை எட்டினார் கோலி. தோனி, அசாருதீன், கங்குலி ஆகியோரை முந்தி இருக்கிறார்.

இனிமே இப்படிதான்.. எவ்ளோ நாள்தான் டொக்கு வைச்சுகிட்டே இருக்கிறது.. அதிர வைக்கும் டெஸ்ட் மன்னன்!

முதல் டெஸ்ட்

முதல் டெஸ்ட்

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா சிறப்பாக ஆடியது. வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்து 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் பந்துவீச்சு அந்த அளவிற்கு சிறப்பாக இருந்தது.

இந்தியா அபார ஆட்டம்

இந்தியா அபார ஆட்டம்

அடுத்து பேட்டிங் ஆடிய இந்தியா 6 விக்கெட்கள் இழப்பிற்கு 493 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. மயங்க் அகர்வால் 243, ரஹானே 86, ஜடேஜா 60*, புஜாரா 54 ரன்கள் குவித்தனர்.

இன்னிங்க்ஸ் வெற்றி

இன்னிங்க்ஸ் வெற்றி

அடுத்து ஆடிய வங்கதேசம் 213 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் - அவுட் ஆனது. இந்தியா ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது.

ஆறாவது வெற்றி

ஆறாவது வெற்றி

இந்த வெற்றியுடன் இந்தியா தொடர்ந்து ஆறு டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகளை பதிவு செய்துள்ளது. கடந்த சில மாதங்கள் முன்பு இரண்டு வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டிகள், மூன்று தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டிகளை வென்றது இந்தியா. அதைத் தொடர்ந்து வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளது.

தோனி சாதனை

தோனி சாதனை

இந்திய கேப்டன்களில் தோனி மட்டுமே தொடர்ந்து ஆறு டெஸ்ட் போட்டிகளில் வெற்றியை பதிவு செய்து இருந்தார். தற்போது அதை சமன் செய்துள்ளார் கேப்டன் விராட் கோலி. அடுத்த டெஸ்டில் வென்றால், தோனியை முந்தி முதல் இடத்தை பிடிப்பார்.

இன்னிங்க்ஸ் வெற்றி சாதனை

இன்னிங்க்ஸ் வெற்றி சாதனை

மேலும், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்க்ஸ் வெற்றி பெற்ற இந்தியா, தொடர்ந்து இந்தப் போட்டியிலும் இன்னிங்க்ஸ் வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்தியா இன்னிங்க்ஸ் வெற்றி பெறுவது மூன்றாவது முறை ஆகும்.

கோலி முதல் இடம்

கோலி முதல் இடம்

இது கோலியின் 10வது இன்னிங்க்ஸ் வெற்றி ஆகும். இதன் மூலம், கோலி இந்திய கேப்டன்களில் அதிக இன்னிங்க்ஸ் வெற்றி பெற்றுக் கொடுத்த கேப்டன் என்ற வரலாற்று சாதனையை செய்துள்ளார்.

அடுத்த இடத்தில் யார்?

அடுத்த இடத்தில் யார்?

தோனி - 9 இன்னிங்க்ஸ் வெற்றிகள், முகமது அசாருதீன் - 8 இன்னிங்க்ஸ் வெற்றிகள், சௌரவ் கங்குலி - 7 இன்னிங்க்ஸ் வெற்றிகள் பெற்று அடுத்த மூன்று இடங்களில் உள்ளனர்.

அதிக டெஸ்ட் வெற்றிகள்

அதிக டெஸ்ட் வெற்றிகள்

மேலும், உலக அளவில் அதிக டெஸ்ட் வெற்றி பெற்றுக் கொடுத்த கேப்டன்கள் வரிசையில் கோலி நான்காம் இடத்தை ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இருவரும் 32 டெஸ்ட் வெற்றிகள் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IND vs BAN : Virat Kohli creates history in Indian test cricket as a captain. He got his tenth innings victory and beat Dhoni, Azharudin and Ganguly
Story first published: Saturday, November 16, 2019, 19:30 [IST]
Other articles published on Nov 16, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X