For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவரோட அட்வைஸால தான் எல்லாமே நடந்துச்சு...சூர்யகுமார் யாதவனின் ரகசியம்.... நெகிழ்ந்த முன்னாள் வீரர்

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் சூர்யகுமார் யாதவ், தனது முன்னேற்றத்திற்கு காரணமானவர் குறித்து தெரிவித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்துக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று அகமதாபாத்தில் தொடங்கவுள்ளது. இந்த தொடரில் நீண்ட நாட்கள் போராட்டத்திற்கு பிறகு சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த 3 விக்கெட்டுகள் இழப்பு... அக்சர், சிராஜ் அதிரடி... இங்கிலாந்து திணறல்! அடுத்தடுத்த 3 விக்கெட்டுகள் இழப்பு... அக்சர், சிராஜ் அதிரடி... இங்கிலாந்து திணறல்!

இந்நிலையில் தனது பேட்டிங் முன்னேற்றத்திற்கு இலங்கை வீரர் மஹிலா ஜெயவர்தனே தான் காரணம் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

போராட்டம்

போராட்டம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ் ஐபிஎல்-ல் 2018ம் ஆண்டு முதல் அனைத்து சீசனிலும் சிறப்பாக ஆடி வருகிறார். கடந்த சீசனில் மட்டும் 480 ரன்கள் குவித்தார். விஜய் ஹசாரே போட்டியில் 5 இன்னிங்ஸ்களில் ஆடி 332 ரன்கள் எடுத்துள்ளார். எனினும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் அவருக்கு இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னேற்றம்

முன்னேற்றம்

இது குறித்து பேசியுள்ள சூர்யகுமார் யாதவ், பேட்டிங்கில் எனக்கு மஹிலா ஜெயவர்தனே மிகவும் உதவியாக இருந்தார். 2019ம் ஆண்டு என் அருகில் அமர்ந்து பவர் ப்ளேவில் எப்படி ஆட வேண்டும், மற்ற ஓவர்களில் எப்படி ஆட வேண்டும் என அறிவுறுத்தினார். பவர் ப்ளேவில் முடிந்த அளவிற்கு கேப்களில் அடித்து ஆட முயற்சிக்க வேண்டும். அதிகளவில் இரட்டை ரன்களை எடுக்க வேண்டும். அப்போதுதான் ஸ்ட்ரைக் ரேட் அதிகமாகும் என எனக்கு கூறினார்.என்னை ஒரு பெட்டர் கிரிக்கெட்டராக மட்டுமல்லாமல் ஸ்மார்ட் வீரராக உருவாக்க விரும்பினார் என தெரிவித்துள்ளார்.

பயிற்சி

பயிற்சி

நான் முதலில் ஆட வருகின்ற போது எனக்கு ஆஃப் சைட் களில் சரியாக ஆடவில்லை என விமர்சனங்கள் மற்றும் அறிவுரைகள் எழுந்தன. அதன் பின்னர் மைதானத்தின் அனைத்து புறமும் கவர் செய்து ஆடினேன். பின்னர் அந்த விமர்சனங்கள் இல்லாமல் போனது. எனக்கு பல அறிவுரைகள் வந்துக்கொண்டுதான் இருக்கிறது. நான் எனது பேட்டிங் திறனை மேலும் மேம்படுத்தவே முயற்சி செய்து வருகிறேன் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

ப்ளேயிங் 11

ப்ளேயிங் 11

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியில் 4வது விக்கெட்டிற்கு களமிறங்க ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூர்யகுமார் யாதவுக்கு கடும் போட்டி நிலவுகிறது. ஸ்ரேயாஸ் ஐயர் 3வது விக்கெட்டிற்கு களமிறங்குகிறார். ஆனால் சூர்யகுமார் யாதவ்தான் 3வது விக்கெட்டிற்கு களமிறங்க சரியாக இருப்பார் என பிராட் ஹாக் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கோரி வருகின்றனர்.

Story first published: Friday, March 12, 2021, 18:11 [IST]
Other articles published on Mar 12, 2021
English summary
Suryakumar Yadav reveals how improve his batting Skills
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X