For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹார்ட் பீட்டை எகிற வைத்த டி20 போட்டி.. மீண்டும் சூப்பர் ஓவர்.. நியூசி. பெப்பே காட்டிய இந்தியா!

Recommended Video

INDvsNZ T20|Highlights|நான்காவது போட்டியிலும் இந்தியா வெற்றி

வெல்லிங்டன் : நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவர் போட்டியை எடுத்துச் சென்று வெற்றி பெற்றது.

மூன்றாவது டி20 போட்டி டை ஆகி சூப்பர் ஓவர் வரை சென்ற நிலையில், மீண்டும் நான்காவது டி20 போட்டியும் சூப்பர் ஓவர் வரை சென்றது.

நியூசிலாந்து அணிக்கு சூப்பர் ஓவர் ராசி இல்லை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமானது. அதே சமயம், இந்தப் போட்டியில் 20வது ஓவரிலேயே அந்த அணி எளிதாக வெற்றி பெற வேண்டிய நிலையில், சொதப்பி டை ஆக்கியதும் குறிப்பிடத்தக்கது.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று, தொடரை எளிதாக கைப்பற்றி இருந்தது. இந்த நிலையில், நான்காவது டி20 போட்டியில் இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது.

அணி மாற்றம்

அணி மாற்றம்

அதன் படி, இந்திய அணியில் ரோஹித் சர்மா, முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி அணியில் வாய்ப்பு பெற்றனர். நியூசிலாந்து அணி இந்தப் போட்டியில் டாஸ் வென்றது.

சஞ்சு சாம்சன் ஏமாற்றம்

சஞ்சு சாம்சன் ஏமாற்றம்

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல் துவக்க வீரர்களாக களமிறங்கினர். சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டம் ஆட முயற்சி செய்து ஒரு சிக்ஸ் அடித்து, பின் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ராகுல் சிறப்பான ஆட்டம்

ராகுல் சிறப்பான ஆட்டம்

ராகுல் ஒருபுறம் சிறப்பாக ஆடினார். அதே சமயம், விராட் கோலி 11 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் ராகுல் 26 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

விக்கெட் வீழ்ச்சி

விக்கெட் வீழ்ச்சி

அடுத்து வந்த சிவம் துபே 12 ரன்கள் எடுத்தும், வாஷிங்டன் சுந்தர் ரன் ஏதும் எடுக்காமலும் தங்கள் விக்கெட்டை பறி கொடுத்தனர். அப்போது மனிஷ் பாண்டே தனி ஆளாக அணியைக் காப்பாற்ற போராடினார். 11.3 ஓவர்களில் இந்திய அணி 88 ரன்கள் எடுத்து 6 விக்கெட்களை இழந்து இருந்தது.

மனிஷ் பாண்டே அரைசதம்

மனிஷ் பாண்டே அரைசதம்

மனிஷ் பாண்டே பொறுப்பாக ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று அரைசதம் அடித்தார். ஷர்துல் தாக்குர் 20, சாஹல் 1, சைனி 11* ரன்கள் எடுத்தனர். மனிஷ் பாண்டே 36 பந்துகளில் 50 ரன்கள் அடித்து இருந்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்து இருந்தது.

நிதான துவக்கம்

நிதான துவக்கம்

நியூசிலாந்து அணி 166 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது. துவக்கத்தில் மிக நிதான ஆட்டம் ஆடிய அந்த அணி பின்னர் வேகம் எடுத்தது. துவக்க வீரர் மார்ட்டின் கப்தில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார்.

அதிரடி ஜோடி

அதிரடி ஜோடி

அடுத்து ஜோடி சேர்ந்த கோலின் மன்றோ, செய்பர்ட் இணைந்து அபார ஆட்டம் ஆடினர். இருவரும் அரைசதம் கடந்தனர். மன்றோ 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த டாம் ப்ரூஸ் டக் அவுட் ஆனார். ராஸ் டெய்லர், செய்பர்ட் இணைந்து போட்டியை கடைசி ஓவர் வரை எடுத்துச் சென்றனர்.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

கடைசி ஓவரில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. ஷர்துல் தாக்குர் பந்து வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் டெய்லர் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மிட்செல் பவுண்டரி அடித்தார். மூன்றாவது பந்தில் செய்பர்ட் ரன் அவுட் ஆனார்.

போட்டி டை ஆனது

போட்டி டை ஆனது

நான்காவது பந்தில் 1 ரன் எடுக்க, ஐந்தாவது பந்தில் மற்றொரு விக்கெட்டை இழந்தது நியூசிலாந்து. கடைசி பந்தில் 2 ரன் எடுக்க வேண்டும் என்ற நிலையில், சான்ட்னர் 1 ரன் மட்டுமே எடுத்தார். இரண்டாவது ரன் ஓட முயன்ற போது ராகுல் ரன் அவுட் செய்தார். இதையடுத்து போட்டி டை ஆனது.

சூப்பர் ஓவர் வெற்றி

சூப்பர் ஓவர் வெற்றி

சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 13 ரன்கள் குவித்தது. பும்ரா அபாரமாக வீசினார். அடுத்து இந்திய அணியில் ராகுல், கோலி ஐந்து பந்துகளில் இந்த இலக்கை எட்டினர். இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது. மூன்றாவது டி20 போட்டியை அடுத்து, நான்காவது டி20 போட்டியிலும் இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

Story first published: Friday, January 31, 2020, 18:05 [IST]
Other articles published on Jan 31, 2020
English summary
IND vs NZ : India vs New Zealand 4th T20 match tied and India won the second consecutive super over in this series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X