For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பக்காவாக பிளான் போட்டு காலி பண்ணிட்டாங்க.. வலை விரித்த நியூசி. வீரர்.. வசமாக சிக்கிய கோலி!

வெல்லிங்டன் : நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் சொற்ப ரன்களே எடுத்தார்.

Recommended Video

IND vs NZ 1st Test | பவுல்ட் விரித்த வலை.. சிக்கிய கோலி

அவரை இரண்டாம் இன்னிங்க்ஸில் எப்படி வலை விரித்து வீழ்த்தினோம் என்பது பற்றி நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ட்ரென்ட் பவுல்ட் கூறி உள்ளார்.

இந்தப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

நியூசிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆடிய இந்திய அணி, டாஸில் தோற்று முதலில் பேட்டிங் செய்தது. கடினமான ஆடுகளம் என்பதால் துவக்கம் முதலே விக்கெட்டை இழந்து முதல் இன்னிங்க்ஸில் 165 ரன்கள் மட்டுமே எடுத்தது இந்திய அணி.

முதல் இன்னிங்க்ஸ்

முதல் இன்னிங்க்ஸ்

முதல் இன்னிங்க்ஸில் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் ஆக அறியப்படும் விராட் கோலியும் மோசமான முறையில் அவுட் ஆனார். நியூசிலாந்து வீரர் ஜேமிசன் வீசிய அவுட்சைடு ஆஃப் பந்தை அடிக்க ஆசைப்பட்டு, ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து 2 ரன்களில் ஆட்டமிழந்தார் கோலி.

இரண்டாம் இன்னிங்க்ஸ் நிலை

இரண்டாம் இன்னிங்க்ஸ் நிலை

இரண்டாம் இன்னிங்க்ஸில் இந்திய அணி 183 ரன்கள் பின் தங்கிய நிலையில் பேட்டிங் செய்து வந்தது. 78 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து இருந்த நிலையில், விராட் கோலி பேட்டிங் செய்ய களமிறங்கினார். அவர் பெரிய அளவில் ரன் குவித்தால் மட்டுமே இந்திய அணியால் தோல்வியில் இருந்து தப்ப முடியும் என்ற நிலை இருந்தது.

பவுன்சர் தாக்குதல்

பவுன்சர் தாக்குதல்

அப்போது கோலி நிதான ஆட்டம் ஆடினார். அவர் ரன் குவிக்க முடியாத படி நியூசிலாந்து வீரர்கள் தொடர்ந்து ஷார்ட் பால் வீசி, பவுன்சர் தாக்குதல் நடத்தினர். அதனால், அவரால் எளிதாக ஸ்ட்ரோக் அடித்து ரன் குவிக்க முடியவில்லை.

வீழ்ந்த கோலி

வீழ்ந்த கோலி

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த விராட் கோலி ட்ரென்ட் பவுல்ட் வீசிய பவுன்சர் பந்தில் ஹூக் ஷாட் அடிக்க முயற்சி செய்தார். ஆனால், பந்து எட்ஜ் ஆகி, விக்கெட் கீப்பர் கைகளுக்கு சென்றது. கோலி 43 பந்துகளை சந்தித்து 19 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

வலை விரித்து வீழ்த்தினர்

வலை விரித்து வீழ்த்தினர்

கோலி எப்போதுமே அவசரப்பட்டு தவறான ஷாட்களை அடிப்பவர் இல்லை. எனினும், அவரின் பொறுமையை சோதிக்கும் வகையில் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் குழுவாக இணைந்து ஷார்ட் பால் வீசினர். அவர்கள் விரித்த வலையில் பொறுமை இழந்த நிலையில் கோலி சிக்கினார்.

பவுல்ட் என்ன சொன்னார்?

பவுல்ட் என்ன சொன்னார்?

கோலியை வீழ்த்தியது குறித்து பேசிய ட்ரென்ட் பவுல்ட், "விராட் பேட், பந்தில் பட வேண்டும் என விரும்புபவர். நாங்கள் நிச்சயம் தவறு செய்வோம். அவர் அப்போது பந்தை அடிப்பார். பலமாக அடித்து பவுண்டரி எடுப்பார். நாங்கள் அதை குறைக்க முடிவு செய்தோம்" என்றார்.

என்ன செய்தேன்?

என்ன செய்தேன்?

மேலும், "நான் தனிப்பட்ட முறையில், கிரீஸ் மற்றும் ஷார்ட் பந்தை பயன்படுத்தினேன். அதன் மூலம் முயற்சி செய்து அவரது ரன் ரேட்டை குறைத்தேன்" என்றார். அப்படி ஒரு பவுன்சர் பந்தில் தான் பவுல்ட், கோலியின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

உதவிய ஜேமிசன்

உதவிய ஜேமிசன்

"அவரை தவறு செய்ய வைத்தது சிறப்பான விஷயம். அதே சமயம், கைல் ஜேமிசன் அவருக்கு இந்த போட்டி முழுவதும் பந்து வீசிய விதம், குறிப்பாக அவர் துவக்கத்தில் பெரிதாக ரன் குவிக்காமல் இருக்கும் படி செய்தது, மிகப் பெரிய பங்களிப்பு" என்று சக இளம் வீரர் ஜேமிசனையும் பாராட்டினார் ட்ரென்ட் பவுல்ட்.

புஜாராவும் வீழ்ந்தார்

புஜாராவும் வீழ்ந்தார்

விராட் கோலி வீழ்ந்த அதே வழியில் தான் புஜாராவும் வீழ்ந்தார். முதல் இன்னிங்க்ஸில் அவுட்சைடு ஆஃப் திசை பந்தை அடிக்க ஆசைப்பட்டு கேட்ச் கொடுத்தார். இரண்டாம் இன்னிங்க்ஸில் ரன்னே எடுக்காமல், நியூசிலாந்து வீசி வந்த ஷார்ட் பந்துகளை தடுத்து ஆடி வந்த அவர், ஸ்டம்ப்பை நோக்கி வந்த பந்தை அடிக்க ஆசைப்பட்டு, இரண்டாம் இன்னிங்க்ஸில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

Story first published: Monday, February 24, 2020, 12:35 [IST]
Other articles published on Feb 24, 2020
English summary
IND vs NZ : This is how Trent Boult executed Virat Kohli’s wicket
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X