For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டுட்டீங்களே.. யார் இந்த வேலையை செஞ்சது? கடும் கோபத்தில் பிசிசிஐ!

Recommended Video

மழை காரணமாக ஆட்டம் ரத்து #INDvSL

கவுஹாத்தி : இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி மழையால் பாதிக்கப்பட்ட ஆடுகளத்தால் கைவிடப்பட்டது.

அசாம் மாநில கிரிக்கெட் அமைப்பால் நிர்வகிக்கப்பட்டு வரும் கவுஹாத்தி கிரிக்கெட் மைதானத்தில் தான் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

மைதான நிர்வாகிகள், ஊழியர்கள் மற்றும் பிட்ச் சீரமைப்பாளர் ஆகியோரின் தவறுகளால் தான் மாலைமலர் நீர் பிட்ச்சிற்குள் புகுந்தது என புகார் கூறப்பட்டு உள்ளது. பிசிசிஐ இந்த விஷயத்தில் கடும் கோபத்தில் உள்ளது.

போட்டியில் டாஸ்

போட்டியில் டாஸ்

முதல் டி20 போட்டியில் டாஸ் கூட போடப்பட்டது. இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து இருந்தது. போட்டி துவங்க சில நிமிடங்கள் இருந்த நிலையில் தான் கடும் மழை பெய்தது.

பிட்ச் மூடப்பட்டது

பிட்ச் மூடப்பட்டது

மழை பெய்த போது வழக்கம் போல பிட்ச்சை பாதுகாக்க பெரிய பிளாஸ்டிக் உறைகள் கொண்டு பிட்ச் மற்றும் அதை சுற்றி இருந்த பகுதிகள் முழுவதுமாக மூடப்பட்டன.

பிட்ச்சில் புகுந்த மழை நீர்

பிட்ச்சில் புகுந்த மழை நீர்

மழையால் போட்டி சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டது. மழை நின்றவுடன் பிட்ச்சை சுற்றி இருக்கும் அவுட் பீல்டில் தேங்கிய நீர் மிக விரைவாக அகற்றப்பட்டது. எனினும், பிட்ச்சில் மழை நீர் புகுந்து பிட்ச்சின் தன்மை மாறி இருந்தது.

காய வைக்க முயற்சி

காய வைக்க முயற்சி

பிளாஸ்டிக் உறைகளால் மூடப்பட்டும் பிட்ச்சில் நீர் இறங்கியது வியப்பை ஏற்படுத்தியது. பின்னர், பிட்ச்சை காய வைக்கும் முயற்சிகள் வேக, வேகமாக நடந்தது. அதனால், போட்டி மேலும் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

அயர்ன் பாக்ஸ் காமெடி

அயர்ன் பாக்ஸ் காமெடி

சூப்பர் சாப்பர், வாக்குவம் கிளீனர் போன்றவை மூலம் முயற்சி செய்தும், பிட்ச் காயவில்லை என்பதால் அயர்ன் பாக்ஸ், ஹேர் டிரையர் ஆகியவை மூலம் முயற்சி செய்து காமெடி செய்தனர் ஊழியர்கள். அது கடும் விமர்சனத்தை சந்தித்தது.

முன்னெச்சரிக்கை இல்லை

முன்னெச்சரிக்கை இல்லை

அசாம் மாநில கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் பிட்ச் சீரமைப்பாளர் மழை வரும் முன்பே அடிப்படை பாதுகாப்பு விஷயங்களில் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளவில்லை என பிசிசிஐ கடும் கோபம் அடைந்தது.

ஓட்டை தான் காரணமா?

ஓட்டை தான் காரணமா?

குறிப்பாக, பிட்ச்சை மூட பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் உறைகளில் ஓட்டை இருந்திருக்கலாம். அதனால், தான் பிட்ச்சில் மழை நீர் இறங்கி இருக்கலாம் என கருதும் பிசிசிஐ, இந்த சம்பவம் குறித்து பிட்ச் சீரமைப்பாளரிடம் அறிக்கை கேட்டுள்ளது.

ஐபிஎல் போட்டி

ஐபிஎல் போட்டி

கவுஹாத்தி மைதானத்தில் சில ஐபிஎல் போட்டிகளை நடத்தலாம் என திட்டமிட்டு இருந்தது பிசிசிஐ. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கவுஹாத்தியில் தங்கள் சொந்த மைதான போட்டிகளை விளையாட ஆர்வமாக இருந்தது.

முன்னேற்பாடுகள் மோசம்

முன்னேற்பாடுகள் மோசம்

அதற்கு ஒரு முன் மாதிரிப் போட்டியாக இந்தியா - இலங்கை டி20 போட்டி நடத்தப்படுவதாக கூறப்பட்ட நிலையில், மழைக்கான முன்னேற்பாடுகள் கூட அந்த மைதானத்தில் சரியாக இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இனி சந்தேகம்

இனி சந்தேகம்

இனி கவுஹாத்தி மைதானத்தில் அடுத்த சில ஆண்டுகளுக்கு சர்வதேச போட்டிகள் நடப்பது கூட சந்தேகம் தான். 2020 ஐபிஎல் தொடரிலும் அங்கே போட்டிகள் நடத்த பிசிசிஐ ஒப்புக் கொள்ளாது என்றே தெரிகிறது.

Story first published: Monday, January 6, 2020, 17:05 [IST]
Other articles published on Jan 6, 2020
English summary
IND vs SL : BCCI is unhappy after match abandoned due to damp pitch
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X