For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மைதானத்தை விட்டு நைஸாக கிளம்பிய வீரர்கள்.. சொல்லக் கூடாத ரகசியத்தை போட்டு உடைத்த அந்த நபர்!

Recommended Video

IND vs SL : Resons why First T20 match has been cancelled

இந்தூர் : இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்படுவதாக அறிவிக்கப்படும் முன்னரே இந்தியா மற்றும் இலங்கை அணி வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறி விட்டதாக ஒரு அதிர வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

வீரர்கள் வெளியேற பின்னர், அம்பயர்கள் ஆடுகளத்தை பரிசோதனை செய்து, போட்டி நடத்த முடியாது என்பதால் கைவிடுவதாக அறிவித்தனர்.

இந்த ரகசிய தகவல்களை அசாம் மாநில கிரிக்கெட் அமைப்பு செயலாளர் தேவஜித் சைகியா வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

கேள்விகள்

கேள்விகள்

வீரர்கள் முன்பே கிளம்பிய நிலையிலும், அம்பயர்கள் ஏன் பரிசோதனை செய்தனர்? அம்பயர் குழு மற்றும் மேட்ச் ரெப்ரீக்கு தெரியாமல் வீரர்கள் கிளம்பினார்களா? ஏன் அப்படி செய்தனர் என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

மழையால் பாதிப்பு

மழையால் பாதிப்பு

முதல் டி20யில் மழையால் பாதிப்பு ஏற்பட்டது. மழைநீரை வெளியேற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதனால், போட்டி நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. மேலும், பிட்ச்சில் நீர் இறங்கியது.

முறையற்ற சீரமைப்பு

முறையற்ற சீரமைப்பு

மைதான ஊழியர்கள் கவனக்குறைவால், ஓட்டையான பிளாஸ்டிக் உறைகள் வழியாக மழை நீர் பிட்ச்சில் இறங்கியதாக கூறப்பட்டது. அதனால், குறிப்பிட்ட நேரத்திற்குள் பிட்ச்சை காயவைக்க முடியவில்லை.

அம்பயர்கள் அறிவிப்பு

அம்பயர்கள் அறிவிப்பு

இதையடுத்து, 9.30 மணிக்கு ஆடுகளத்தை கடைசியாக பரிசோதனை செய்வதாக அம்பயர்கள் அறிவித்தனர். அப்போதும் மைதானம் தயாராகவில்லை என்றால் போட்டியை கைவிடுவதாக அறிவித்தனர்.

போட்டி கைவிடப்பட்டது

போட்டி கைவிடப்பட்டது

ஊழியர்கள் வாக்குவம் கிளீனர், சூப்பர் சோப்பர் உள்ளிட்ட உபகரணங்களோடு, அயர்ன் பாக்ஸ், ஹேர் டிரையர் எல்லாம் பயன்படுத்தி பிட்ச்சை காய வைக்க முயற்சி செய்து காமெடி செய்தனர். எனினும், எந்த மாற்றமும் நடக்கவில்லை.

புகார்கள் எழுந்தது

புகார்கள் எழுந்தது

போட்டி நடக்காமல் போனதற்கு அசாம் மாநில கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் அதன் ஊழியர்கள் மீது புகார் கூறப்பட்டு வந்தது. அதனால், தங்கள் பக்க நியாயத்தை கூறி வருகிறார் அசாம் மாநில கிரிக்கெட் அமைப்பின் செயலாளர் சைகியா.

செயலாளர் சொன்ன ரகசியம்

செயலாளர் சொன்ன ரகசியம்

போட்டி கைவிடப்படும் முடிவை அம்பயர்கள் 9.54 மணிக்கு அறிவித்தனர். எனினும், அதற்கு முன் 9 மணிக்கே வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறி விட்டதாக கூறி பரபரப்பை கிளப்பி இருக்கிறார் சைகியா.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

அம்பயர்கள் 9.30 மணிக்கு ஆடுகளத்தை பரிசோதிப்பதாக கூறி இருந்தனர். ஆனால், 9 மணிக்கே இந்தியா மற்றும் இலங்கை அணி வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறி விட்டனர். அந்த மர்மம் தனக்கு புரியவில்லை என கூறி இருக்கிறார் அவர்.

நேரம் இல்லை

நேரம் இல்லை

மேலும், 8.45க்குள் மைதானம் சரியாகவில்லை என்றால் போட்டி நடத்த முடியாது என்று அம்பயர்கள் கூறியதாகவும், அதனால், தங்களுக்கு 54 நிமிடங்கள் மட்டுமே இருந்ததாகவும், கூடுதல் நேரம் கிடைத்து இருந்தால் தாங்கள் மைதானத்தை சீர் செய்து இருக்க முடியும் என கூறி உள்ளார்.

நீர் தேங்கக் காரணம் என்ன?

நீர் தேங்கக் காரணம் என்ன?

மைதானத்தில் நீர் தேங்க முக்கிய காரணம், "ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ்" முறையில் நீர் வெளியேறியது தான். மற்றபடி, வர்ணனையாளர்கள் அப்போது கூறியது பற்றி நான் கருத்து சொல்ல முடியாது என்றும் கூறினார் சைகியா.

Story first published: Tuesday, January 7, 2020, 14:33 [IST]
Other articles published on Jan 7, 2020
English summary
IND vs SL : Players left the stadium at 9pm, before the inspection of the pitch says reports.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X