2019 வோர்ல்ட் கப்.. வெற்றி பெறும் வரை இந்தியா படு பிசி!

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN

டெல்லி: 2019ல் நடக்க உள்ள பார்லிமென்ட் தேர்தலுக்கு கட்சிகள் தற்போதே தயாராகி கொண்டிருப்பதுபோல், அந்த ஆண்டு நடக்க உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு, நமது அணியும் தயாராகி வருகிறது.

உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி, 30 ஒருதினப் போட்டிகள், 21 டி-20 மற்றும் 12 டெஸ்ட் போட்டிகள் என, 63 போட்டிகளில் விளையாட உள்ளது.

வரும் ஏப்ரல் மாதம் முதல் துவங்கி, 2019 மார்ச் மாதம் வரையிலான ஓர் ஆண்டில், இந்திய அணி விளையாட உள்ள போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில், 30 ஒருதினப் போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது.

முத்தரப்பு போட்டியில் பங்கேற்பு

முத்தரப்பு போட்டியில் பங்கேற்பு

இந்த 2017-18 சீசனில், தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடி வரும் இந்திய அணி, அடுத்ததாக, இலங்கையில் நடக்க உள்ள முத்தரப்பு டி-20 போட்டித் தொடரில் விளையாட உள்ளது. அதில் வங்கதேசமும் விளையாடுகிறது.

ஆப்கானிஸ்தானுடன் முதல் டெஸ்ட்

ஆப்கானிஸ்தானுடன் முதல் டெஸ்ட்

அதன்பிறகு, ஏப்ரல், மே மாதங்களில் ஐபிஎல் போட்டிகளில் நமது வீரர்கள் கெத்து காட்ட உள்ளனர். அது முடிந்த உடன் ஜூன் மாதம் முதல் சுற்றுப் பயணம் துவங்குகிறது. அயர்லாந்துக்கு எதிராக, இரண்டு டி-20 போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி, அந்த மாதத்தில் பெங்களூரில் நடக்க உள்ள, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பெறகு ஆப்கானிஸ்தான் விளையாடும் முதல் போட்டி இதுவாகும்.

ஆசியக் கோப்பையும் கிடைக்குமா

ஆசியக் கோப்பையும் கிடைக்குமா

அதை முடித்துக் கொண்டு ஜூலை முதல் செப்டம்பர் மாதம் துவக்கம் வரை இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய அணி, அங்கு 5 டெஸ்ட்கள், 3 ஒருதினப் போட்டிகள், 3 டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. அதற்குப் பிறகு ஆசியக் கோப்பையில் 9 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இடம் மற்றும் அட்டவணை இன்னும் வெளியாகவில்லை.

நவம்பரில் ஆஸ்திரேலேயா பறக்கிறது

நவம்பரில் ஆஸ்திரேலேயா பறக்கிறது

அதன் பிறகு, இங்கு வரும் வெஸ்ட் அணியுடன், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2 டெஸ்ட்கள், 5 ஒருதினப் போட்டிகள், 3 டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. நவம்பர், டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு பறந்து சென்று, அங்கு 4 டெஸ்ட்கள், 3 ஒருதினப் போட்டி, 3 டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது.

நியூசிலாந்தில் புத்தாண்டு

நியூசிலாந்தில் புத்தாண்டு

அதை முடித்துக் கொண்டு, அடுத்தாண்டு ஜனவரி, பிப்ரவரியில் நியூசிலாந்து செல்கிறது. அங்கு நடைபெறுவதாக இருந்த டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 5 ஒருதினப் போட்டிகள், 5 டி-20 போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது.

ஆஸி, ஜிம்ப்பாவே வருகிறது

ஆஸி, ஜிம்ப்பாவே வருகிறது

அடுத்த ஆண்டு பிப்ரவரியில், ஆஸ்திரேலியா இங்கு வருகிறது. 5 ஒருதினப் போட்டிகள், 2 டி-20 போட்டிகள் நடக்க உள்ளன. கடைசியாக இங்கு வரும் ஜிம்பாப்வே அணியுடன், 3 டி-20 போட்டித் தொடர் நடக்கிறது. அதன்பிறகு, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில், அடுத்த ஆண்டு மே மாதம் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது.

Story first published: Monday, February 19, 2018, 10:56 [IST]
Other articles published on Feb 19, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற