For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

5வது டெஸ்ட் முதல் நாள் - இந்தியா பௌலிங் ஆதிக்கம்.. பொறுமையை சோதித்த இங்கிலாந்து

லண்டன் : இந்தியா, இங்கிலாந்து இடையே ஐந்தாவது டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது. இந்தியா தொடரை 1-3 என இழந்துள்ள நிலையில் ஆறுதல் வெற்றி கிடைக்குமா என்ற கேள்வியோடு இந்தியா களம் இறங்கியது.

இங்கிலாந்து தொடரை வென்ற நிலையில், அந்த அணியின் துவக்க வீரர் அலஸ்டர் குக் இந்த போட்டியோடு ஓய்வு பெற உள்ளதால், இந்த போட்டியில் வெற்றி பெற்று அவரை மகிழ்ச்சியாக வழியனுப்ப வேண்டிய நிலையில் இருக்கிறது.

அதே சமயம் இந்தியா சார்பாக புதிய வீரரான ஹனுமா விஹாரி அணியில் இடம் பிடித்தார். அஸ்வின், பண்டியா நீக்கப்பட்டு ஹனுமா விஹாரி, ஜடேஜா வாய்ப்பு பெற்றனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ப்ரித்வி ஷாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இங்கிலாந்து துவக்கம்

இங்கிலாந்து துவக்கம்

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து, பேட்டிங் தேர்வு செய்தது. தன் கடைசி போட்டியில் ஆடும் அலஸ்டர் குக் மற்றும் ஜென்னிங்க்ஸ் ஆட்டத்தை துவக்கினர். இருவரும் நல்ல துவக்கம் அளித்தனர். 60 ரன்கள் இருந்த நிலையில் ஜென்னிங்க்ஸ் 23 ரன்களில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார்.

பொறுமையை சோதித்த அலி, குக்

பொறுமையை சோதித்த அலி, குக்

அடுத்து வந்த மொயீன் அலி, குக் இணைந்து மிகவும் பொறுமையாக ஆடினர். அலஸ்டர் குக் 190 பந்துகளை சந்தித்து 71 ரன்கள் எடுத்து பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மொயீன் அலி - அலஸ்டர் குக் இணைந்து 241 பந்துகளை சந்தித்து 73 இனங்கள் மட்டுமே எடுத்திருந்தனர். இந்திய பந்துவீச்சாளர்களை கடுமையாக சோதித்தது இந்த இணை.

வரிசையாக வீழ்ந்த விக்கெட்கள்

வரிசையாக வீழ்ந்த விக்கெட்கள்

குக் சென்ற பின், கேப்டன் ஜோ ரூட், பேர்ஸ்டோ அடுத்ததடுத்து ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அவர்களை அடுத்து ஸ்டோக்ஸ் 11, சாம் கர்ரன் 0 ரன்களிலும் மற்றும் அரைசதம் அடித்த மொயீன் அலி 50 ரன்னிலும் வெளியேறினர். ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 198 ரன்களுக்கு 7 விக்கெட்கள் இழந்து இருந்தது. பட்லர், அதில் ரஷித் களத்தில் நிற்கின்றனர். நேற்று மொத்தம் 90 ஓவர்கள் ஆடிய இங்கிலாந்தின் ரன் ரேட் ஓவருக்கு 2.2 ரன்கள் மட்டுமே.

இஷாந்த், பும்ரா, ஜடேஜா கலக்கல்

இஷாந்த், பும்ரா, ஜடேஜா கலக்கல்

நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் இஷாந்த் சர்மா 3, பும்ரா 2, ஜடேஜா 2 என விக்கெட்கள் வீழ்த்தி இந்தியாவை ஆட்டத்தில் முன்னிலையில் இருக்க உதவினர். ஹனுமா விஹாரி பகுதி நேர சுழல் பந்துவீச்சாளர் ஆவார். அவர் நேற்று ஒரே ஒரு ஓவர் மட்டுமே வீசினார். அதில் ஒரு ரன் மட்டும் விட்டுக் கொடுத்தார்.

Story first published: Saturday, September 8, 2018, 10:05 [IST]
Other articles published on Sep 8, 2018
English summary
India - England 2018 5th test day 1 match update, scores and wickets. Ishant and Bumrah bowled well on day 1
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X