டேய் பிங்க் சட்டை போட்டு வருவாங்க… ஏமாந்துடாத’

By: SRIVIDHYA GOVINDARAJAN

ஜோகன்னஸ்பர்க்: இந்தியா, தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான நான்காவது ஒருதினப் போட்டி இன்று நடக்க உள்ளது. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வழக்கமான பச்சை நிற உடைகள் இல்லாமல், பிங்க் நிற உடைகளில் விளையாட உள்ளது.

இந்தியா, தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான 6 ஒரு தினப் போட்டித் தொடரில், முதல் மூன்று ஆட்டங்களிலும் வென்று, இந்தியா 3-0 என முன்னிலையில் உள்ளது. நான்காவது போட்டி இன்று ஜோகன்னஸ்பர்க்கில் நடக்க உள்ளது.

India looking for series win

இந்தப் போட்டியில் வென்றால், தொடரை வெல்ல முடியும் என்பதுடன், தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக ஒருதினப் போட்டித் தொடரை வென்ற பெருமை கோஹ்லி அண்ட் கோவுக்கு கிடைக்கும். அதைத் தவிர, ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 இடத்தை, பெபிகால் போட்டி ஒட்டிக் கொள்ளலாம்.

இந்த நிலையில், இன்று நடக்கும் நான்காவது போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர்கள், பிங்க் நிற உடைகளுடன் விளையாட உள்ளனர். ஹெல்மெட், கிளவுஸ், பேட் என, அனைத்தும் பிங்க் நிறத்தில் இருக்கும்.

பெண்களுக்கான மார்ப்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இவ்வாறு பிங்க் உடையுடன் அவர்கள் விளையாட உள்ளனர். இதற்காக மைதானம் முதல், நகரமே பிங்க் நிறத்துக்கு மாறியுள்ளது. போட்டியை பார்க்க வரும் ரசிகர்களையும் பிங்க் உடையுடன் வரும்படி கூறியுள்ளனர்.

இதற்கு முன், ஐந்து முறை இவ்வாறு பிங்க் உடையுடன் தென்னாப்பிரிக்கா விளையாடியுள்ளது. அந்த ஐந்திலும் அந்த அணி வென்றுள்ளது. இந்தியாவுடன் 2013 டிசம்பரில் நடந்த போட்டியில் பிங்க் உடையுடன் விளையாடிய தென்னாபிரிக்கா, 141 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

மூன்று போட்டிகளில் விளையாடத டிவில்லியர்ஸ் இன்றைய போட்டியில் களமிறங்குகிறார். 2015ல் வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிராக பிங்க் உடையில் விளையாடிய டிவில்லியர்ஸ், வெறும் 44 பந்துகளில் 149 ரன்கள் குவித்து திணறடித்தார். 2013ல் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில், 47 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, தொடரை வெல்லும் வெறியுடன் உள்ள இந்திய அணி வீரர்களுக்கு புதிய அட்வைஸ் கொடுக்கப்பட்டுள்ளது. பச்சை சட்டையுடன் வருவான், அடித்து துவம்சம் செய்யலாம் என்று நினைத்திருப்பீர்கள். பிங்க் சட்டையுடன் வருவது வேறு யாரோ என்று நினைத்து விடாதீர்கள். அதுதான் தென்னாப்பிரிக்க அணி. உஷாராக இருக்கணும் என்று வீரர்களுக்கு அட்வைஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

Story first published: Saturday, February 10, 2018, 11:10 [IST]
Other articles published on Feb 10, 2018
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற