For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND VS SL: இந்தியாவின் கடைசி நேர திட்டம்... பிளான் ஏ நஹி... பிளான் பி தான் ஓகே

லண்டன்: இலங்கைக்கெதிரான ஆட்டத்தில், துவக்க வீரர், மிடில் ஆர்டர், இடது கை பேட்டிங் வரிசை ஆகியவற்றை மனதில் கொண்டு, பிளான் பி-யை செயல்படுத்த இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

கோலி தலைமையிலான இந்திய அணி 8 ஆட்டத்தில் 6 வெற்றி, ஒருதோல்வி, ஒரு ஆட்டம் ரத்து என 13 புள்ளிகளுடன் ஏற்கெனவே அரை இறுதிக்குள் நுழைந்து விட்டது. புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. உறுதி செய்துள்ள இந்தியா, இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்துடன் லீக் சுற்றை முடித்துக் கொள்கிறது.

இலங்கையை வீழ்த்தினால் முதலிடத்துடன் லீக் சுற்றை நிறைவு செய்ய வாய்ப்பு உள்ளது. இது நடக்க வேண்டுமானால் 14 புள்ளிகளுடன் உள்ள ஆஸ்திரேலிய அணி இன்றுநடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவிடம் தோற்க வேண்டும்.

பாதுகாப்பான ஆட்டம்

பாதுகாப்பான ஆட்டம்

ஒருவேளை இந்தியா, லீக் சுற்றில் முதலிடத்தை பிடித்தால் அரை இறுதியில் நியூசிலாந்தை சந்திக்கும். இங்கிலாந்து அணியை ஒப்பிட்டு பார்க்கும் போது, இந்தியாவுக்கு பாதுகாப்பான ஆட்டம் இது என்று கூறலாம்.

முடிவுக்கு வராத பிரச்னை

முடிவுக்கு வராத பிரச்னை

அரை இறுதி நெருங்கி வரும் சூழலில் இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்டிங் பிரச்சினை முடிவுக்கு வராமல் இருக்கிறது. பிளான் ஏ-வையே ( அதாவது சக்சஸ் ரேட் அதிகமுள்ள டாப் ஆர்டர் பேட்டிங் வரிசை) பெரிதும் நம்பி இருக்கிறது. ஆனால், இன்றைய ஆட்டத்தில் ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படுவது குறித்து அணி நிர்வாகம் ஆலோசிக்கலாம்.

கேதர் ஜாதவுக்கு வாய்ப்பு?

கேதர் ஜாதவுக்கு வாய்ப்பு?

ஏனெனில், புதிய வீரர் மயங்க் அகர்வாலை தவிர மற்ற அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில் இலங்கையில் இடது கை பேட்ஸ் மேன்கள் பலர் உள்ளதால் ஜடேஜாவுக்கு பதிலாக கேதர் ஜாதவை மீண்டும் அணிக்குள் கொண்டு வருவது குறித்தும் பரிசீலிக்கப்படலாம்.

4வது வீரர் யார்?

4வது வீரர் யார்?

இன்றைய ஆட்டத்தில் தோனி 4வது வீரராக களமிறங்குவது நல்லது. அப்போது தான், அதிரடி வீரர்களான, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா ஆகியோர் கீழ் வரிசையில் இயல்பான ஆட்டத்தை விளையாட முடியும்.

ரோகித் ஜோடி

ரோகித் ஜோடி

ஓப்பனிங் பேட்ஸ்மெனாக ரோகித்துக்கு ஜோடி யார் என்பது கொஞ்சம் குழப்பத்தில் உள்ள கதை. இடது,வலது காம்பினேஷன் அவசியம் என்பதால், அவருக்கு ஜோடியாக ரிஷப் பன்ட் வரலாம். ராகுலுக்கு இடம் கிடைக்காது.

இடது,வலது காம்பினேஷன்

இடது,வலது காம்பினேஷன்

விஜய் சங்கருக்கு மாற்றாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு கிடைப்பது அரிதுதான். ஏனெனில் தொடக்க வீரராக கே.எல்.ராகுல் சீரான ஆட்டத்தை வழங்கி வருகிறார். மேலும் ஒரு மாற்றமாக துவக்க வீரராக செயல்பட்டு வந்த ராகுலுக்கு பதில் ரிஷப் பண்ட் களமிறக்கப்படலாம் ஏனெனில் இடது-வலது என ரோகித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆடுவதால் இந்திய அணிக்கு அது ஒரு பாசிட்டிவ் ஆக அமையும்

ஒருவருக்கு ஓய்வு

ஒருவருக்கு ஓய்வு

பவுலிங்கில், பும்ரா, முகமது ஷமி ஆகியோர் அற்புதமான பார்மில் உள்ளனர். இருவரும் தலா 14 விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர். அரை இறுதி சுற்றை கணக்கில் கொண்டு இன்றைய ஆட்டத்தில் இவர்களில் யாரேனும் ஒருவருக்கு ஓய்வு வழங்கப்படக்கூடும்.

உத்தேச அணி

உத்தேச அணி

போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பட்டியல்: ரோகித் சர்மா, ரிஷப் பன்ட், கோலி (கேப்டன்), ராகுல், தோனி, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி, பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

Story first published: Saturday, July 6, 2019, 12:45 [IST]
Other articles published on Jul 6, 2019
English summary
India may use plan b for today's match against srilanka.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X