
சம பலத்தில் பந்துவீச்சு
பிராட் ஹாட்ஜ் கூறுகையில், புஜாரா தான் இரு அணிகளிடையே உள்ள வித்தியாசம். இரு அணிகளின் பந்துவீசும் சம பலத்துடனே உள்ளது. ஆனால், பேட்டிங்கில் இரண்டு அணிகளிடையே உள்ள வித்தியாசம் புஜாரா தான் என கூறினார்.

துவக்க வீரர்கள் சரியில்லை
இந்திய அணியிலும், ஆஸ்திரேலிய அணியிலும் துவக்க வீரர்கள் சரியாக ஆடவில்லை. மூன்றாவது டெஸ்டில் அறிமுகம் ஆன மாயன்க் அகர்வால் மட்டுமே இதில் விதி விலக்கு. இந்திய துவக்க வீரர்கள் சொதப்பினாலும் 3வது இடத்தில் பேட்டிங் செய்யும் புஜாரா நிலைத்து நின்று ஆடி அந்த குறையை போக்கினார்.

புஜாரா சதம் அடித்தார்
இந்திய அணி வெற்றி பெற்ற முதல் மற்றும் மூன்றாவது டெஸ்டில் அதிக ரன்கள் அடித்த புஜாரா தான் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். இந்த இரண்டு போட்டிகளிலும் புஜாரா சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பும்ரா கெட்ட கனவு
பும்ரா பேட்ஸ்மேன்களின் கெட்ட கனவு போன்றவர். அவர் மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளர். எனினும், புஜாரா தான் இரு அணிகளிடையே உள்ள வித்தியாசம் என கூறினார் ஹாட்ஜ்.


Click it and Unblock the Notifications