For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னய்யா இது? ஒரே ஒரு இன்னிங்க்ஸ் தான் பௌலிங் போட்டார்.. அதுக்கே 64 வருட சாதனையா? குல்தீப் அசத்தல்

Recommended Video

India vs Australia test Series | தொடரை வென்று சாதனை படைத்த இந்தியா | Oneindia Tamil

சிட்னி : இந்திய அணியின் இளம் வீரர் குல்தீப் யாதவ் சிட்னி டெஸ்டில் குறிப்பிடத்தக்க சாதனை ஒன்றை செய்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்டில் மட்டுமே ஆடிய குல்தீப் யாதவ், அந்த ஒரு போட்டியிலேயே தன் முத்திரையை அழுத்தமாக பதித்தார்.

ஐந்து விக்கெட் வீழ்த்தினார்

ஐந்து விக்கெட் வீழ்த்தினார்

சிட்னி டெஸ்டில் இந்திய அணி 300 ரன்களுக்கு ஆஸ்திரேலியாவை முதல் இன்னிங்க்ஸில் ஆட்டமிழக்கச் செய்தது. அதில் குல்தீப் யாதவ் தான் முக்கிய பங்கு வகித்தார். முதல் இன்னிங்க்ஸில் மட்டுமே பந்துவீசிய குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்களை சாய்த்தார்.

64 ஆண்டு சாதனை

64 ஆண்டு சாதனை

குல்தீப் 99 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்கள் சாய்த்து அசத்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் ஒருவர் சுமார் 64 ஆண்டுகள் கழித்து ஒரே இன்னிங்க்ஸில் 5 அல்லது அதற்கும் மேற்பட்ட விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

இதற்கு முன் யார்?

இதற்கு முன் யார்?

இதற்கு முன் 1955இல் இங்கிலாந்தை சேர்ந்த ஜானி வார்டில் என்ற இடது கை ரிஸ்ட் சுழற்பந்துவீச்சாளர் 79 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அந்த அளவுகோலை சுமார் 64 ஆண்டுகள் கழித்து எட்டியுள்ளார் குல்தீப் யாதவ்.

முதல் ஆசிய இடது கை சுழற்பந்துவீச்சாளர்

முதல் ஆசிய இடது கை சுழற்பந்துவீச்சாளர்

முன்னதாக சிட்னி டெஸ்டில் பங்கேற்றதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் போட்டி ஆடும் ஆசிய இடது கை சுழற்பந்துவீச்சாளர் என்ற பெயரை பெற்றார் குல்தீப் யாதவ்.

உலக சாதனை செய்த குல்தீப்

உலக சாதனை செய்த குல்தீப்

இந்தியாவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் 5 விக்கெட்கள் வீழ்த்திய குல்தீப், உலகளவில் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஒரே இன்னிங்க்ஸில் 5 விக்கெட்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தி இருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஸ்பின்னர் இவர் தான்

அடுத்த ஸ்பின்னர் இவர் தான்

இந்தியாவில் அஸ்வின், ஜடேஜாவுக்கு பின் டெஸ்ட் போட்டிகளில் குல்தீப் யாதவ் தான் ஆதிக்கம் செலுத்தப் போகிறார் என்ற பேச்சு இப்போதே துவங்கி விட்டது. வாழ்த்துக்கள் குல்தீப் யாதவ்!!

Story first published: Monday, January 7, 2019, 13:26 [IST]
Other articles published on Jan 7, 2019
English summary
India vs Australia : Kuldeep Yadav achieved records in Australia by playing in only one test match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X