For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலியை முந்தி ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை மழை பொழியும் புஜாரா.. டிராவிடை முந்துவாரா?

Recommended Video

ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை மழை பொழியும் புஜாரா, டிராவிடை முந்துவாரா?- வீடியோ

சிட்னி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்டில் புஜாரா சதம் அடித்தார். அத்தோடு பல சாதனைகளையும் செய்துள்ளார் புஜாரா.

இந்தியா நான்காவது டெஸ்டில் வென்று தொடரை 3-1 என கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

18வது டெஸ்ட் சதம்

18வது டெஸ்ட் சதம்

புஜாரா தன் நிதான ஆட்டம் மூலம் தன் 18வது டெஸ்ட் சதத்தை கடந்தார். இந்த டெஸ்ட் தொடரில் இது புஜாராவின் மூன்றாவது சதம் ஆகும். கடந்த வருடம் கோலி மட்டுமே டெஸ்ட் தொடர்களில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற பெருமையை பெற்று வந்தார். அதை ஆஸ்திரேலிய தொடரில் முறியடித்துள்ளார் புஜாரா.

புஜாரா முதல் இடம்

புஜாரா முதல் இடம்

இந்த தொடரில் புஜாரா நான்காவது டெஸ்டின் முதல் நாள் இறுதி வரை 458 ரன்கள் அடித்து முதல் இடத்திலும், கோலி 282 ரன்கள் அடித்து இரண்டாம் இடத்திலும் இருக்கின்றனர். இந்த தொடரில் சதம் அடித்த இரு வீரர்கள் இவர்கள் மட்டுமே.

அதிக சதம் அடித்தவர்கள்

அதிக சதம் அடித்தவர்கள்

புஜாரா மூன்று சதங்களும், கோலி ஒரு சதமும் அடித்துள்ளனர். ஆஸ்திரேலிய மண்ணில் ஒரே டெஸ்ட் தொடரில் மூன்று சதம் அடித்த புஜாரா ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அதிக சதம் அடித்தவர்கள் சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார்.

மூன்று சதம் அடித்தவர்கள்

மூன்று சதம் அடித்தவர்கள்

கவாஸ்கர், அலஸ்டர் குக், மைக்கேல் வான், கிறிஸ் பிராடு, எடி பார்லோ, ஜாக் ஹாப்ஸ் உள்ளிட்ட வீரர்கள் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற ஒரே டெஸ்ட் தொடரில் மூன்று சதம் அடித்தவர்கள் ஆவர். நான்கு சதம் அடித்த வீரர்களும் உண்டு.

நான்கு சதங்கள் அடித்த வீரர்கள்

நான்கு சதங்கள் அடித்த வீரர்கள்

விராட் கோலி, வாலி ஹம்மன்ட், ஹெர்பர்ட் சட்கிளிப் ஆகியோர் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற ஒரே டெஸ்ட் தொடரில் நான்கு சதங்கள் அடித்துள்ளனர். புஜாரா நான்காவது டெஸ்டின் இரண்டாம் இன்னிங்க்ஸில் சதம் அடிக்கும் பட்சத்தில் இந்த பட்டியலில் இணைவார்.

அதிக பந்துகள் சந்தித்த இந்தியர்கள்

அதிக பந்துகள் சந்தித்த இந்தியர்கள்

மேலும், ஆஸ்திரேலிய மண்ணில் ஒரே டெஸ்ட் தொடரில் அதிக பந்துகள் சந்தித்த இந்தியர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கிறார் புஜாரா. ராகுல் டிராவிட் 2003-04 டெஸ்ட் தொடரில் 12௦3 பந்துகள், விஜய் ஹசாரே 1947-48 டெஸ்ட் தொடரில் 1192 பந்துகள் சந்தித்து உள்ளனர்.

முதல் இடத்தை எட்ட வாய்ப்பு

முதல் இடத்தை எட்ட வாய்ப்பு

புஜாரா நான்காம் டெஸ்டின் முதல் நாள் வரையில் 1135 பந்துகள் சந்தித்துள்ளார். இன்னும் முதல் இன்னிங்க்ஸ் மற்றும் இரண்டாம் இன்னிங்க்ஸ் பேட்டிங் மீதமிருப்பதால், அவர் விரைவில் டிராவிடை முந்தி முதல் இடத்தை எட்ட வாய்ப்புள்ளது.

புஜாரா இரட்டை சதம் அடிப்பார்

புஜாரா இரட்டை சதம் அடிப்பார்

நான்காம் டெஸ்டின் முதல் நாள் முடிவில் புஜாரா 130 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இரண்டாம் நாள் ஆட்டத்தில் புஜாரா இரட்டை சதம் அடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Story first published: Thursday, January 3, 2019, 15:15 [IST]
Other articles published on Jan 3, 2019
English summary
India vs Australia : Pujara achieves elite records for most number of balls in Australia and test centuries in one series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X