For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முயல் வேகத்தில் ரன் ஓடிய கோலி.. ஆமை வேகத்தில் ஓடிய புஜாரா.. ஆனா ஜெயிச்சது ஆமை தான்.. எப்படி?

மெல்போர்ன் : இந்தியா - ஆஸ்திரேலியா மூன்றாவது போட்டியில் கோலி - புஜாரா இடையே சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடந்தது.

கோலி நான்கு ரன்கள் ஓட, புஜாராவை அழைத்த போது புஜாரா மூன்று ரன்களே போதும் என ஓட மறுத்தார். என்ன நடந்தது என பார்க்கலாம்.

120வது ஓவரில் ஓட்டம்

120வது ஓவரில் ஓட்டம்

மூன்றாவது டெஸ்டில் இந்தியா முதலில் பேட்டிங் ஆடியது. 120வது ஓவரில் இந்திய பேட்ஸ்மேன்கள் கோலி - புஜாரா பேட்டிங் செய்த போது கோலி பந்தை தட்டி விட, இரண்டு பேட்ஸ்மேன்களும் ரன் ஓட ஆரம்பித்தனர்.

கோலி முன்னே, புஜாரா பின்னே

கோலி மூன்றாவது ரன் ஓடி முடிக்கும் போது தான் புஜாரா தன் மூன்றாவது ரன்னை ஓடவே ஆரம்பித்தார். இதற்கு பின்னும், கோலி நான்காவது ரன் ஓடலாம் என காத்துக் கொண்டு இருந்தார்.

ஓட முடியாது என்ற புஜாரா

ஓட முடியாது என்ற புஜாரா

அதற்குள் பந்து விக்கெட் கீப்பர் வசம் வந்து சேர்ந்தது. அதன் பின் கோலியை பார்த்த புஜாரா, என்னால் ஓட முடியாது என்பது போல தலையை அசைத்தார். கோலியின் உடற்தகுதி எந்தளவிற்கு இருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு ஒன்றே போதும்.

ஆஸ்திரேலிய வர்ணனையாளர்கள்

ஆஸ்திரேலிய வர்ணனையாளர்கள்

கோலி முயல் வேகத்தில் ஓட, புஜாரா ஆடி அசைந்து ஓடிய இந்த காட்சியை கண்ட ஆஸ்திரேலிய வர்ணனையாளர்கள் குய்யோ, முறையோ என சிரித்து ரசித்தனர். இது ஒரு வகையில் முயல் - ஆமை கதை போல இருந்தது.

புஜாரா முன்னே, கோலி பின்னே

புஜாரா முன்னே, கோலி பின்னே

எப்படி என்றால், இந்த ஆஸ்திரேலிய தொடரில் புஜாரா, கோலியை விட அதிக ரன்கள் எடுத்துள்ளார். விக்கெட்களுக்கு இடையே கோலி வேகமாக ஓடலாம். ஆனால், இந்த தொடரில் புஜாரா தான் ரன்கள் எடுப்பதில் முன்னணியில் இருக்கிறார். ஒட்டு மொத்தமாக 883 பந்துகள் சந்தித்துள்ள புஜாரா 328 ரன்கள் சேர்த்துள்ளார். கோலி 628 பந்துகள் சந்தித்து 259 ரன்கள் எடுத்துள்ளார்.

Story first published: Thursday, December 27, 2018, 19:12 [IST]
Other articles published on Dec 27, 2018
English summary
India vs Australia : Pujara say no to a 4th run when Kohli asks him to run during the third test.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X