For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நிச்சயம் அடுத்த போட்டியில் செஞ்சுரி, டபுள் சென்சுரி தான்.. கெத்தா சொன்ன ரஹானே

மெல்போர்ன் : இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே தடுமாறி வந்த தன் பார்மை ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் நிலைப்படுத்தியுள்ளார்.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ரன் குவித்த ரஹானே, மூன்றாவது டெஸ்டில் சதம் அடிப்பேன் என நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

நிலையாக ஆடும் ரஹானே

நிலையாக ஆடும் ரஹானே

ரஹானே முதல் இரண்டு டெஸ்ட்களில் இரண்டு அரைசதம் அடித்துள்ளார். மொத்தமாக 164 ரன்கள் குவித்துள்ளார். முதல் போட்டியில் சதம், அரைசதம் அடித்து கலக்கிய புஜாரா இரண்டாவது டெஸ்டில் சரியாக ஆடவில்லை. அதே போல இரண்டாவது போட்டியில் சதம் அடித்த கோலி முதல் போட்டியில் சரியாக ஆடவில்லை. ஆனால், ரஹானே இரண்டு போட்டிகளிலும் ரன் அடித்து நம்பிக்கை அளித்தார்.

கவுன்டர்-அட்டாக் ஆட்டம்

கவுன்டர்-அட்டாக் ஆட்டம்

ரஹானே இரண்டு டெஸ்ட்களிலும் ஏதாவது ஒரு இன்னிங்ஸில் அரைசதம் அடித்து நிலையாக ரன் குவித்தார். தான் தற்போது திருப்பி அடிக்கும் "கவுன்டர்-அட்டாக்" பாணியில் ஆடி வருவதாகவும், இதே போல தான் ஆடினால், நிச்சயம் அடுத்த போட்டியில் 100 அல்லது 20௦ வரும் என நம்பிக்கையாக கூறினார் ரஹானே. ரஹானே கடைசியாக இலங்கை டெஸ்ட் தொடரில் கடந்த ஆண்டு சதம் அடித்து இருந்தார். அதன் பின் இன்னும் அவர் சதம் அடிக்கவில்லை.

தொடரை வெல்வதில் சிக்கல்

தொடரை வெல்வதில் சிக்கல்

இரண்டு போட்டிகளின் முடிவில் இந்தியா - ஆஸ்திரேலியா இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருக்கின்றன. அதனால், மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியா தொடரை கைப்பற்ற முடியும்.

பேட்டிங் கை கொடுக்க வேண்டும்

பேட்டிங் கை கொடுக்க வேண்டும்

இந்த நிலையில், பேட்ஸ்மேன்கள் பந்துவீச்சாளர்களுக்கு கை கொடுத்தால் இந்தியா வெற்றி பெறும் என கூறினார் துணை கேப்டன் ரஹானே. சிறு சிறு சந்தர்ப்பங்களை பயன்படுத்தினால் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற முடியும் எனவும் தெரிவித்தார்.

Story first published: Monday, December 24, 2018, 17:02 [IST]
Other articles published on Dec 24, 2018
English summary
India vs Australia : Rahane is confident that he would hit a 100 or 200 at Melbourne, considering his recent form.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X