For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி செய்றது தப்பில்லை.. ஆஸ்திரேலியாவில் இதெல்லாம் சகஜம்.. ஜால்ரா அடிக்கும் ஷோயப் அக்தர்

Recommended Video

ஆஸி.கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி.கேப்டன்- வீடியோ

மெல்போர்ன்: இந்தியா - ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கோலி தன் ஆக்ரோஷ மனோபாவத்தால் ஆஸ்திரேலிய கேப்டனை சீண்டி வருகிறார்.

இது தவறு என்றும் சரி என்றும் பல கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷோயப் அக்தர் கோலியை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளார்.

ஆஸி. அமைதி

ஆஸி. அமைதி

ஆஸ்திரேலிய வீரர்கள் பந்து சேத விவாகரத்திற்கு முன்பு எந்த அணியுடன் ஆடினாலும் பிரச்சனை செய்யாமல் இருக்க மாட்டார்கள். ஆனால், ஸ்மித், வார்னர் தடைக்கு பின்னர் அமைதியை கடைபிடித்து வருகிறது அந்த அணி. அதே சமயம், கோலி ஆஸ்திரேலிய அணியுடன் ஆடினாலே ஏதாவது சீண்டலில் ஈடுபடுவார்.

கோலி சீண்டல்

கோலி சீண்டல்

நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில், முதல் டெஸ்ட் போட்டியில் அமைதியாக இருந்தார் கோலி. ஆனால், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன்-ஐ தேவையில்லாமல் சீண்டினார். அது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.

முன்னாள் வீரர்கள் விமர்சனம்

முன்னாள் வீரர்கள் விமர்சனம்

இந்திய முன்னாள் வீரர் கவாஸ்கர் இது தவறு என கூறினார். இது மற்ற இந்திய வீரர்களை பாதிக்கும் எனவே கோலி இதை நிறுத்த வேண்டும் என கூறினார். முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஜான்சன் "கோலி ஸில்லியாக நடந்து கொள்கிறார்" என கூறினார்.

அக்தர் ஜால்ரா

அக்தர் ஜால்ரா

ஆனால், முன்னாள் பாகிஸ்தான் அக்தர், ஆஸ்திரேலியா சென்றால் இதெல்லாம் சகஜம். கோலி போன்ற பெரிய வீரரிடம், இதெயெல்லாம் பெரிதாக்கக் கூடாது என கருத்து தெரிவித்துள்ளார். இது கோலிக்கு ஜால்ரா அடிப்பது போல தான் இருக்கிறது. அக்தர் போட்ட பதிவு இதுதான்.

அக்தர் போட்ட பதிவு

"கோலி தற்காலத்தில் இந்த விளையாட்டின் சிறந்த வீரர். போட்டி மிகுந்த கிரிக்கெட்டில் எல்லை மீறாத வரை ஆக்ரோஷம் ஒரு அங்கம். அதிலும், ஆஸ்திரேலியாவில் ஆடினால் இது சகஜம். கோலி செய்ததை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது" என பதிவிட்டுள்ளார் அக்தர்.

Story first published: Friday, December 21, 2018, 14:30 [IST]
Other articles published on Dec 21, 2018
English summary
India vs australia : Shoaib Akthar supports Kohli’s aggression over Australian players
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X