For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs BAN : தோனி, ராகுல் சதம்.. பும்ரா, சாஹல், குல்தீப் கலக்கல்.. வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா!

Recommended Video

World cup 2019 | IND vs BAN | ராகுல், தோனியின் அதிரடியால் வங்கதேசத்துக்கு 360 ரன்கள் இலக்கு

கார்டிப் : இந்தியா - வங்கதேசம் இடையே ஆன பயிற்சிப் போட்டியில் இந்திய வீரர் தோனி, கேஎல் ராகுல் அபாரமாக ஆடி சதம் அடித்தனர். இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2019 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அனைத்து அணிகளும் பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்று வருகின்றன. கடைசி பயிற்சிப் போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோத திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்தப் போட்டியின் அணி வீரர்கள், டாஸ், மற்றும் ஸ்கோர் விவரம் -

ICC World Cup 2019: இந்த 4 அணிகளில் ஒரு அணிக்கு உலக கோப்பை.. எப்படி..? ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம்ICC World Cup 2019: இந்த 4 அணிகளில் ஒரு அணிக்கு உலக கோப்பை.. எப்படி..? ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம்

விஜய் ஷங்கர் உள்ளே

விஜய் ஷங்கர் உள்ளே

இந்தப் பயற்சிப் போட்டியில் இந்திய அணியில் கேதார் ஜாதவ் தவிர 14 வீரர்களும் ஆடவுள்ளனர் என தெரிவித்தார் கேப்டன் கோலி. கடந்த பயிற்சிப் போட்டியில் காயத்தால் பங்கேற்காத, விஜய் ஷங்கர் இந்த பயிற்சிப் போட்டியில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்பட்டது. வங்கதேச அணியில் அனைத்து வீரர்களும் பயிற்சிப் போட்டியில் பங்கேற்றனர்.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

இந்திய அணி வீரர்கள் : ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, ராகுல், விஜய் ஷங்கர், ஹர்திக் பண்டியா, தோனி, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், சாஹல், குல்தீப் யாதவ், ஷமி, பும்ரா

வங்கதேச அணி விவரம்

வங்கதேச அணி விவரம்

வங்கதேச அணி வீரர்கள் : தமிம் இக்பால், சௌம்யா சர்க்கார், லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன், முஹம்மது மிதுன், முஷ்பிகுர் ரஹீம், மக்மதுல்லா, மொசாடேக் ஹுசைன், சபீர் ரஹ்மான், முஹம்மது சைபுதீன், மெஹதி ஹாசன், மஷ்ராபே மொர்டாசா, முஸ்தாபிசூர் ரஹ்மான், ரூபல் ஹுசைன், அபு ஜாயேத்

தாமதம்

தாமதம்

இந்தப் போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அப்போது லேசாக மழை பெய்ததால், போட்டி சில நிமிடங்கள் தாமதமாக துவங்கியது. பின்னர், ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆடத் துவங்கினர்.

ரோஹித் - தவான்

ரோஹித் - தவான்

இரண்டு பந்துகள் மட்டுமே சந்தித்த நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டது. அதனால், போட்டி தடைபட்டு, பின் அரைமணி நேரம் கழித்து மீண்டும் துவங்கியது. இந்திய அணியின் தவான் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். ரோஹித் 42 பந்துகளை சந்தித்து 19 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

கோலி பேட்டிங்

கோலி பேட்டிங்

தொடர்ந்து விராட் கோலி - ராகுல் சிறப்பாக பேட்டிங் செய்து அணியை மீட்டனர். கோலி 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விஜய் ஷங்கர் தனக்கு கிடைத்த மிக முக்கிய வாய்ப்பில் சொதப்பி, 2 ரன்களில் வெளியேறினார்.

ராகுல் - தோனி அபாரம்

ராகுல் - தோனி அபாரம்

ராகுல் - தோனி இணைந்து அபாரமாக ரன் குவித்தனர். அதிரடியாக ரன் சேர்த்த தோனி அவ்வப்போது சிக்ஸர் விளாசினார். ராகுல் அபாரமான ஆட்டம் ஆடி சதம் கடந்து, 108 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆடிய தோனி சிக்ஸர் அடித்து, சதம் கடந்து தெறிக்கவிட்டார்.

இந்தியா அபார ஸ்கோர்

இந்தியா அபார ஸ்கோர்

ஹர்திக் பண்டியா 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தோனி 113 ரன்கள் குவித்து 50வது ஓவரில் ஆட்டமிழந்தார். இறுதியில் தினேஷ் கார்த்திக் 7, ஜடேஜா 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 359 ரன்கள் குவித்தது. வங்கதேச அணியின் முஸ்தாபிசூர் ரஹ்மான் 1, ரூபல் ஹுசைன் 2, சைபுதின் 1, சபீர் ரஹ்மான் 1, ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட் வீழ்த்தினர்.

வங்கதேசம் பேட்டிங்

வங்கதேசம் பேட்டிங்

இந்தியா நிர்ணயித்த 360 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி ஆடத் துவங்கிய வங்கதேச அணிக்கு 10வது ஓவரில் பும்ரா அதிர்ச்சி அளித்தார். அந்த ஓவரின் கடைசி இரு பந்துகளில் துவக்க வீரர் சௌம்யா சர்க்கார் 25, ஷகிப் அல் ஹசன் 0 விக்கெட்களை வீழ்த்தினார். லிட்டன் தாஸ் - முஷ்பிகுர் ரஹீம் இருவரும் பொறுப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். லிட்டன் தாஸ் 73 ரன்கள் எடுத்து சாஹல் பந்துவீச்சில், தோனியின் ஸ்டம்பிங்கால் வெளியேறினார். அடுத்த பந்திலேயே முஹம்மது மிதுன் சாஹலிடம் வீழ்ந்தார். அடுத்து மக்மதுல்லா 9, சபீர் ரஹ்மான் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். முஷ்பிகுர் ரஹீம் 90 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

வங்கதேச அணி 49.3 ஓவர்களில் 264 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து, 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணியில் பும்ரா 2, ஜடேஜா 1, குல்தீப் 3, சாஹல் 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.

Story first published: Tuesday, May 28, 2019, 23:50 [IST]
Other articles published on May 28, 2019
English summary
India vs Bangladesh World cup 2019 Warm up match live score update
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X