For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஏன் அந்த ஷாட்டை தேவையில்லாமல் அடித்தார் ஜடேஜா?.. பாயும் கங்குலி

டெல்லி: ஸ்டூவர்ட் பிராட் வீசிய பந்தை தேவையில்லாமல் தூக்கி அடித்த ரவீந்திர ஜடேஜாவின் செயல் மிகவும் தவறானது. பொறுப்பில்லாமல் ஆடியுள்ளார் ஜடேஜா. இதுகுறித்து அணி நிர்வாகம் அவரிடம் கடுமையான குரலில் கேட்க வேண்டும். இப்படியா பொறுப்பில்லாமல் ஆடுவார் ஜடேஜா என்று கோபத்துடன் விமர்சித்துள்ளார் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி.

இங்கிலாந்துடன் நேற்று நடந்த முக்கியமான போட்டியின்போது இந்தியா மிகக் கேவலமாக ஆடி தோல்வியுற்றது. முதலில் ஆடி 200 ரன்களை மட்டுமே எடுத்த இந்தியா, பின்னர் தனது பந்து வீச்சால் இங்கிலாந்து வீரர்களை நிலை குலைய வைக்கத் தவறியது.

India vs England: Ravindra Jadeja's Poor Batting Angers Sourav Ganguly

இந்தத் தோல்வியின் மூலம் இந்தியா முத்தரப்புத் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறவும் தவறியது. இத்தொடரில் ஒரு வெற்றியைக் கூட இந்திய அணியால் பெற முடியவில்லை. இந்த லட்சணத்தில் அது இன்னும் சில வாரங்களில் உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ளது.

நேற்றைய போட்டியில் ரவீந்திர ஜடேஜா இடம் பெற்றார். ஆனால் அவரது ஆட்டம் மகா கேவலமாக இருந்தது. என்ன செய்கிறார் என்பதே ரசிகர்களுக்குப் புரியவில்லை. அப்படி ஒரு மட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஜடேஜா.

5 ரன்களில் ஆட்டமிழந்தார் ஜடேஜா. அவரை நன்றாகக் குழப்பி அவுட்டாக்கினர் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள். இதை கங்கலியும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து கங்குலி கூறுகையில், ஜடேஜா இப்படி ஒரு ஷாட்டை ஆட வேண்டிய அவசியம் என்ன? அவர் ஏன் அப்படி ஆடினார் என்று அவரிடம் கேட்பது அவசியம். 7 ஒவர் விளையாட வேண்டி இருக்கும் போது அவர் அப்படி ஆடியது தவறாகும்.

இது மாதிரியான போட்டிகளில் அவர் பொறுப்புடன் ஆட கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் அவர் ஒரு நல்ல வீரராக திகழமுடியும். இந்த ஷாட் குறித்து ஜடேஜாவிடம் அணி நிர்வாகம் விளக்கம் கேட்க வேண்டும்.

டோணி வெளியேறியதுமே ஜடேஜாவும் அவுட்டானது அணியை பலவீனமாக்கி விட்டது. அவர் பொறுப்புடன் நிதானித்து ஆடியிருக்கலாம். இன்னும் 20 ரன்கள் கூடுதலாக சேர்த்திருந்தால் இந்தியாவுக்கு பலமாக அமைந்திருக்கும். ஆட்டத்தின் போக்கையும் அது மாற்றியிருக்கும். ரன்னுக்காக போராட வேண்டும். சாதாரணமாக விளையாடக் கூடாது என்றார் கங்குலி.

Story first published: Saturday, January 31, 2015, 12:27 [IST]
Other articles published on Jan 31, 2015
English summary
Ravindra Jadeja made a hash of his return to international cricket playing a poor stroke to add to India's batting woes in a crucial tri-nation match against England at Perth on Friday. Jadeja's approach in an important game angered former India captain Sourav Ganguly, who said the team management should demand an explanation for the stroke the Saurashtra all-rounder played.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X