For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Ind vs NZ 5th ODI : ஆதிக்கம் செலுத்திய பந்துவீச்சு.. காப்பாற்றிய மிடில் ஆர்டர் பேட்டிங்!

வெல்லிங்டன் : இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன ஒருநாள் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டியில் இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக, இந்தியா முதல் மூன்று போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது. நான்காவது போட்டியில் மிக மோசமாக 92 ரன்கள் மட்டுமே அடித்து பேட்டிங்கில் படு மோசமாக செயல்பட்டது. அந்த மோசமான பேட்டிங் செயல்பாட்டில் இருந்து மீளும் வகையில் இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெற்றது.

தினேஷுக்கு பதில் தோனி

தினேஷுக்கு பதில் தோனி

ஐந்தாவது போட்டிக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்குக்கு பதில் தோனி இடம் பெற்றார். தோனி காயம் காரணமாக மூன்றாவது மற்றும் நான்காவது ஒருநாள் போட்டியில் ஆடவில்லை. காயத்தில் இருந்து மீண்ட அவர் ஐந்தாவது போட்டியில் களமிறங்கினார்.

விஜய் ஷங்கர் இடம் பெற்றார்

விஜய் ஷங்கர் இடம் பெற்றார்

பந்துவீச்சில், குல்தீப் யாதவ்-வுக்கு பதில் விஜய் ஷங்கர், கலீல் அஹ்மதுக்கு பதில் ஷமி ஆகியோர் அணியில் இடம் பெற்றனர். கோலி இல்லாத நிலையில், இளம் வீரர் ஷுப்மன் கில் மூன்றாவது இடத்தில் பேட்டிங்கை தொடர்ந்தார்.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

ரோஹித் (கேப்டன்), தவான், ஷுப்மன் கில், அம்பதி ராயுடு, தோனி, கேதார் ஜாதவ், விஜய் ஷங்கர், ஹர்திக் பண்டியா, புவனேஸ்வர் குமார், சாஹல், ஷமி.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

ஐந்தாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் கேப்டன் ரோஹித் பரிதாபமாக 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து தவான், ஷுப்மன் கில், தோனி தொடர்ந்து ஆட்டமிழக்க இந்திய அணி 18 ரன்களில் 4 விக்கெட்களை இழந்து தவித்தது.

அம்பதி ராயுடு அசத்தல்

அம்பதி ராயுடு அசத்தல்

அடுத்து அம்பதி ராயுடு, விஜய் ஷங்கர் 98 ரன்களுக்கு கூட்டணி அமைத்து சரிவில் இருந்து அணியை மீட்டனர். மிடில் ஆர்டரில் விஜய் ஷங்கர் 45, அம்பதி ராயுடு 90, கேதார் ஜாதவ் 34 ரன்கள் சேர்த்தனர். கடைசி நேரத்தில் பண்டியா 22 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்தார். அவர் ஹாட்ரிக் சிக்ஸ் உட்பட 5 சிக்ஸர் மற்றும் 2 ஃபோர் அடித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இந்தியா 252 ரன்கள் எடுத்து 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

நியூசிலாந்து அணி பேட்டிங்

நியூசிலாந்து அணி பேட்டிங்

நியூசிலாந்து அணிக்கு 253 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்த அணி பேட்டிங்கில் தடுமாறியது. இந்தியா பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தி தொடர்ந்த இடைவெளிகளில் விக்கெட்களை வேட்டையாடியது. அந்த அணி 44.1 ஓவர்களில் 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து, 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணியில் ஷமி 2, பண்டியா 2, புவனேஸ்வர் குமார் 1, ஜாதவ் 1, சாஹல் 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.

Story first published: Sunday, February 3, 2019, 16:00 [IST]
Other articles published on Feb 3, 2019
English summary
India vs Newzealand 5th ODI : India won the toss and elected to Bat first. Dhoni, Vijay Shankar, Shami replaces Dinesh Karthik, Kuldeep Yadav and Khaleel Ahmed.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X