For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐந்து ஆண்டுகள் கழித்து விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக்.. எல்லாத்துக்கும் தோனி தான் காரணம்!!

Recommended Video

ஐந்து ஆண்டுகள் கழித்து கீப்பரான தினேஷ் கார்த்திக்- வீடியோ

மவுன்ட் மௌங்கனி : இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன மூன்றாவது ஒருநாள் போட்டியில் தோனி காயம் காரணமாக இடம் பெறவில்லை.

அவருக்கு பதில் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பிடித்துள்ளார். தினேஷ் கார்த்திக் இந்திய ஒருநாள் அணியில் சுமார் ஐந்து வருடங்கள் கழித்து இப்போது தான் விக்கெட் கீப்பராக இடம் பெற்றார்.

தோனி இல்லை

தோனி இல்லை

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா இரண்டு போட்டிகளில் வென்று மூன்றாம் போட்டியை சந்தித்தது. இந்த போட்டியில் இந்திய அணியில் காயம் காரணமாக தோனி இடம் பெறவில்லை.

தினேஷ் கார்த்திக் உள்ளே

தினேஷ் கார்த்திக் உள்ளே

மூன்றாவது ஒருநாள் போட்டியில் தோனிக்கு மாற்றாக இந்திய அணியில் விக்கெட் கீப்பராக இடம் பெற்றார் தினேஷ் கார்த்திக். தினேஷ் கார்த்திக் கடைசியாக 2014 ஆசிய கோப்பை தொடரில் விக்கெட் கீப்பிங் செய்தார். கிட்டதட்ட 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒருநாள் அணியில் விக்கெட் கீப்பிங் செய்கிறார் தினேஷ் கார்த்திக்.

கீப்பிங் வாய்ப்பு இல்லை

கீப்பிங் வாய்ப்பு இல்லை

தினேஷ் கார்த்திக் 2017 முதல் தொடர்ந்த இடைவெளிகளில் இந்திய ஒருநாள் அணியில் இடம் பெற்று வருகிறார். எனினும், அவருக்கு அணியில் விக்கெட் கீப்பிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கு காரணம் தோனி அந்த காலகட்டத்தில் எந்த சந்தர்ப்பத்திலும், காயம் காரணமாக போட்டிகளில் இருந்து விலகவில்லை.

தோனி விலகல்

தோனி விலகல்

தோனி இது வரை மூன்று முறை மட்டுமே உடல்நலக் குறைவு அல்லது காயம் காரணமாக ஒரு போட்டியில் இருந்து விலகியுள்ளார். 2013ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் காயம் காரணமாக தோனி மூன்று போட்டிகளில் இருந்து விலகினார். அதற்கு முன் 2007இல் காய்ச்சல் காரணமாக அயர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டிகளில் இருந்து விலகினார்.

தினேஷ் அசத்தல்

தினேஷ் அசத்தல்

தோனிக்கு பதிலாக அணியில் இடம் பெற்ற தினேஷ் கார்த்திக், மூன்றாவது ஒருநாள் போட்டியில் கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றி பெறச் செய்தார். தினேஷ் கார்த்திக் இந்த போட்டியில் நான்கு கேட்ச்கள் பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

நியூசிலாந்து அணி நிர்ணயித்த 244 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்தியா அடியது. கோலி, ரோஹித் சர்மா அரைசதம் அடித்து வெளியேறினர். அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக் கடைசி வரை களத்தில் நின்று 77 ரன்கள் கூட்டணியாக எடுத்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தனர்.

Story first published: Monday, January 28, 2019, 15:20 [IST]
Other articles published on Jan 28, 2019
English summary
India vs Newzealand : After 5 years Dinesh Karthik became Wicket Keeper in ODI
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X