For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதிர்ஷ்டம்னா இப்படி இருக்கணும்! இந்த வீரர் அணியில் இருந்தா இந்தியாவுக்கு தோல்வியே கிடையாது!

Recommended Video

கேதர் ஜாதவ் அணியில் இருந்தா இந்தியாவுக்கு தோல்வியே கிடையாது- வீடியோ

மவுன்ட் மௌங்கனி : இந்திய அணி ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரை கைப்பற்றிய கையோடு, நியூசிலாந்து ஒருநாள் தொடரிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் நிலையில், கேதார் ஜாதவுக்கும், இந்திய அணியின் வெற்றிகளுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

ஜாதவ்வின் 17 போட்டிகள்

ஜாதவ்வின் 17 போட்டிகள்

கேதார் ஜாதவ் இந்திய அணியில் கடைசியாக ஆடிய 17 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா தோல்வி அடையவில்லை. இந்த 17 போட்டிகளில் இந்தியா 16 வெற்றிகளும், ஆப்கன் அணிக்கு எதிராக ஆசிய கோப்பையில் டையும் பெற்றுள்ளது.

அணியின் சமநிலை

அணியின் சமநிலை

இந்திய அணியின் சமநிலையை சரியாக வைத்திருக்கும் வீரர் என சமீபத்தில் கோலி, பண்டியாவை பாராட்டினார். ஆனால், இந்த வெற்றி தொடர்பு மூலம், கேதார் ஜாதவ் தான் இந்திய அணியை சமநிலையில் வைத்திருக்கும் ஆல்-ரவுண்டரோ என தோன்றுகிறது.

தோனியின் கண்டுபிடிப்பு

தோனியின் கண்டுபிடிப்பு

தோனி கேப்டனாக இருந்த போது கேதார் ஜாதவ்வின் பந்துவீச்சு திறமையை கண்டு பிடித்தார். உள்ளூர் போட்டிகளில் அதிகளவு பந்து வீசி இராத ஜாதவ் 2016 நியூசிலாந்து ஒருநாள் தொடரில் ஒரே ஓவரில் 2 விக்கெட்கள் எடுத்தார். அப்போது முதல் இந்திய அணியின் பகுதி நேர சுழற் பந்துவீச்சாளர் என்ற அந்தஸ்தில் இருக்கிறார் ஜாதவ்.

தேவையான நேரத்தில் விக்கெட்

தேவையான நேரத்தில் விக்கெட்

கேதார் ஜாதவ் பேட்ஸ்மேன் என்றாலும், பகுதி நேர பந்துவீச்சில் தொடர்ந்து விக்கெட்கள் எடுக்கவும் தவறுவதில்லை. அவரது பந்துவீச்சில் அதிக நுணுக்கங்கள் இல்லை என்றாலும், ரன்களை கட்டுப்படுத்தவும், தேவையான நேரத்தில் விக்கெட் வீழ்த்தவும் பயன்படுகிறது.

நியூசிலாந்து தொடரில் ஜாதவ்

நியூசிலாந்து தொடரில் ஜாதவ்

நியூசிலாந்து தொடரில் கேதார் ஜாதவ் மூன்று போட்டிகளில் 12 ஓவர்கள் பந்து வீசி 2 விக்கெட்கள் எடுத்துள்ளார். மூன்று போட்டிகளில் ஒரு முறை மட்டுமே பேட்டிங் வாய்ப்பு பெற்ற அவர் 10 பந்துகளில் 22 ரன்கள் அடித்து அசத்தினார். ஜாதவ்வுக்கு அதிக களத்தில் தன் திறமையை காட்ட குறைந்த வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தாலும், அதில் தன்னை நிரூபித்து வருகிறார்.

உலகக்கோப்பையில் ஜாதவ்

உலகக்கோப்பையில் ஜாதவ்

கேதார் ஜாதவ் உலகக்கோப்பை அணியிலும் கிட்டதட்ட உறுதி ஆகி உள்ள நிலையில், அவரது அதிர்ஷ்டம் உலகக்கோப்பையிலும் இந்திய அணிக்கு உதவுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Story first published: Tuesday, January 29, 2019, 19:23 [IST]
Other articles published on Jan 29, 2019
English summary
India vs Newzealand : India never lost last 17 games while Kedhar Jadhav included in the playing XI.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X