For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

5வது மேட்ச்ல இந்தியாவுக்கு வெற்றி.. ஆனா கோலி தோத்துப் போயிட்டாரே.. சாதனையும் போச்சே

திருவனந்தபுரம் : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்தியா ஒன்பது விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆனால், கேப்டன் கோலி ஒரு விஷயத்தில் இந்த போட்டியில் தோல்வி அடைந்துள்ளார். அதனால், ஒரு அரிய சாதனை நிகழ்வும் நடைபெறாமல் போய் விட்டது.

டாஸ் வெல்ல ராசி இல்லாத கேப்டன் என சமீபத்தில் பெயர் பெற்ற கோலி, டாஸ் வெல்வதில் தான் ஒரு சாதனையை தவறவிட்டுள்ளார்.

இதுக்கு கூடவா அவர் காரணம்?

இதுக்கு கூடவா அவர் காரணம்?

கோலி பேட்டிங்கில் கில்லியாக இருந்தாலும், கேப்டன் பதவியில் சொதப்புகிறார் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது. டாஸ் வெல்வதிலும் கோலிக்கு சில காலமாக அதிர்ஷ்டம் இல்லை. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தொடர்ந்து டாஸில் தோற்று, தொடர் தோல்வியோடு, அதற்கும் சேர்த்து விமர்சிக்கப்பட்டார். ஆனால், டாஸ் வெல்லாமல் போவதற்கு அவர் எப்படி காரணமாக முடியும் என அவரது ரசிகர்கள் சமாளித்து வந்தனர்.

கோலியின் அரிய சாதனை

கோலியின் அரிய சாதனை

அதற்கெல்லாம் சேர்த்து வைத்து இந்தியா வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் தொடர்ந்து நான்கு போட்டிகளில் டாஸ் வென்று அசத்தினார். தொடரின் கடைசி போட்டியிலும் அவர் டாஸ் வென்றால், ஒரு தொடரின் ஐந்து போட்டிகளிலும் டாஸ் வென்ற கேப்டன் என்ற அரிய சாதனைப் பட்டியலில் இடம் பிடிப்பார் என கருதப்பட்டது.

வெ.இண்டீஸ் டாஸ் வென்று தவறான முடிவு

வெ.இண்டீஸ் டாஸ் வென்று தவறான முடிவு

ஆனால், அதற்கு மாறாக ஐந்தாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். அவரது முடிவு மிகவும் தவறு என நிரூபிக்கும் வகையில், வெஸ்ட் இண்டீஸ் அணி 104 ரன்களுக்கு சுருண்டது. அடுத்து ஆடிய இந்தியா 15வது ஓவரிலேயே இலக்கை எட்டி பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்தியா வென்றாலும், கேப்டன் கோலி டாஸில் தோல்வி அடைந்தார்.

[டீ குடிச்சுட்டு வர்ற கேப்பில் இந்தியா வெற்றி.. கோலியை ஓரங்கட்டி அரைசதம் அடித்த ரோஹித் ]

டாஸ் வென்ற இந்தியர்கள்

டாஸ் வென்ற இந்தியர்கள்

ஒருவேளை கோலி ஐந்தாவது போட்டியில் டாஸ் வென்று இருந்தால், இந்திய மண்ணில் இருதரப்பு கிரிக்கெட் தொடரில் அனைத்து போட்டியிலும் டாஸ் வென்ற கேப்டன் என்ற பெருமையை பெற்று இருக்க முடியும். இந்திய கேப்டன்களில் இதுவரை ஒரு தொடரின் அனைத்து போட்டி டாஸ்களையும் வென்று இருப்பது அசாருதீன், டிராவிட் மற்றும் தோனி ஆவர்.

Story first published: Thursday, November 1, 2018, 21:03 [IST]
Other articles published on Nov 1, 2018
English summary
India won the 5th ODI against West Indies but kohli lost in the the 5th game
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X