For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டீ குடிச்சுட்டு வர்ற கேப்பில் இந்தியா வெற்றி.. கோலியை ஓரங்கட்டி அரைசதம் அடித்த ரோஹித்

திருவனந்தபுரம் : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன ஐந்தாவது ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் நான்கு போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முன்னிலையில் இருந்தது. இரண்டாம் போட்டி டையில் முடிந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்றால் தொடரை 2-2 என சமன் செய்து இந்தியாவுக்கு அதிர்ச்சி அளிக்கலாம். இந்தியா வென்றால் தொடரை 3-1 என வெல்லலாம் என்ற நிலை இருந்தது. எனினும், வெஸ்ட் இண்டீஸ் மிகவும் மோசமாக பேட்டிங் செய்தது.

இந்திய அணியில் மாற்றம் இல்லை

இந்திய அணியில் மாற்றம் இல்லை

முன்னதாக, நான்காவது ஒருநாள் போட்டியில் ஆடிய அதே இந்திய அணி ஐந்தாவது போட்டியிலும் ஆடியது. இந்திய அணியில் முக்கிய நிகழ்வாக தோனி இந்திய அணிக்காக பத்தாயிரம் ரன்களை கடக்க உள்ளார் என்பதால், அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. எனினும், ரோஹித், கோலி இணைந்தே போட்டியை முடித்து வைத்தனர். இதனால், தோனிக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் வீரர் காயம்

வெஸ்ட் இண்டீஸ் வீரர் காயம்

வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை அந்த அணியின் வீரர் நர்ஸ்-க்கு காயம் ஏற்பட்டு போட்டியில் இருந்து விலகினார். அவருக்கு பதில் தேவேந்திர பிஷூ அணியில் இணைந்தார். சரியாக ரன் குவிக்காத ஹேமராஜ் நீக்கப்பட்டு, ஒஷேன் தாமஸ் அணியில் சேர்க்கப்பட்டார்.

அணி வீரர்கள் விவரம்

அணி வீரர்கள் விவரம்

இந்திய அணி - ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, அம்பதி ராயுடு, தோனி, கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், கலீல் அஹ்மது, பும்ரா

வெஸ்ட் இண்டீஸ் அணி - கீரன் போவெல், ஷாய் ஹோப், மர்லான் சாமுவேல்ஸ், ஷிம்ரோன் ஹெட்மையர், ரோவ்மன் போவெல், ஜேசன் ஹோல்டர், ஃபாபியன் ஆலன், தேவேந்திர பிஷூ, கீமர் ரோச், கீமோ பால், ஓஷேன் தாமஸ்

வெஸ்ட் இண்டீஸ் மிக மோசம்

வெஸ்ட் இண்டீஸ் மிக மோசம்

ஐந்தாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பேட்டிங் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு வரிசையாக அவுட்டாகி சென்றனர். கேப்டன் ஜேசன் ஹோல்டர் 25 ரன்கள் எடுத்ததே அந்த அணியின் தனி ஒரு வீரரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள். இப்படி பரிதாபமாக பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 31.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 104 ரன்கள் மட்டுமே எடுத்தது இந்தியா அசத்தலாக பந்துவீசியது. ஜடேஜா 4, பும்ரா 2, கலீல் அஹ்மது 2 புவனேஸ்வர் குமார் 1, குல்தீப் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பட்டையைக் கிளப்பிய ரோஹித்

பட்டையைக் கிளப்பிய ரோஹித்

அடுத்து 105 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் துவக்க வீரர் தவான் 6 ரன்களில் வெளியேறி மீண்டும் ஏமாற்றினார். அடுத்து ரோஹித், கோலி சேர்ந்தனர். ரோஹித் முதலில் நிதானமாக ஆடி வந்தார். இடையே திடீரென அதிரடிக்கு மாறிய அவர் சிக்ஸராக வெளுக்க ஆரம்பித்தார். கோலி ஒரு பக்கம் நின்று வேடிக்கை பார்க்க, ரோஹித் 4 சிக்ஸர்களோடு அரைசதம் கடந்தார். இந்தியா 14.5 ஓவர்கள் முடிவில் 105 ரன்கள் எடுத்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில், 219 பந்துகள் மீதமிருந்த நிலையில், ஐந்தாம் போட்டியை வென்றது. கோலி 33, ரோஹித் 63 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது இந்தியா.

Story first published: Thursday, November 1, 2018, 17:57 [IST]
Other articles published on Nov 1, 2018
English summary
India vs West Indies 5th ODI - Live score update in tamil
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X