For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எப்படி இருந்த கொல்கத்தா இப்படி ஆகிப் போச்சே.. அடி மேல் அடி.. காரணம் இதுதான்!

கொல்கத்தா : 2019 ஐபிஎல் தொடரின் முதல் ஐந்து போட்டிகளின் முடிவில் நான்கு வெற்றிகளை பெற்று மற்ற அணிகளை அச்சுறுத்தி வந்தது கொல்கத்தா.

ஆனால், அதன் பின் தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. அடுத்த போட்டியில் தோல்வி அடைந்தால் புள்ளிப்பட்டியலில் பெரும் சரிவை சந்திக்க வாய்ப்புள்ளது.

பதற்றம்

பதற்றம்

கொல்கத்தா அணி தன் முதல் ஐந்து போட்டிகளை, டெல்லி அணியுடனான முதல் லீக் மோதலில் சூப்பர் ஓவர் வரை சென்று தோற்றது. எனவே, முதல் ஐந்து போட்டிகள் முடிவு வரை கொல்கத்தா அணி என்றாலே மற்ற அணிகளுக்கு பதற்றம் இருந்தது.

பலத்த அடி

பலத்த அடி

ஆனால், சென்னை மண்ணில் கொல்கத்தா அணி பலத்த அடி வாங்கியது. தோனி வகையாக சுழற் பந்துவீச்சாளர்களை களமிறக்கி, 200 ரன்களை எல்லாம் அசால்ட்டாக அடித்து வந்த கொல்கத்தா அணியை வெறும் 106 ரன்களில் சுருட்டினார். அந்த போட்டியில் சென்னை எளிதாக வென்றது.

2வது டெல்லி போட்டி

2வது டெல்லி போட்டி

சரி, சென்னை மண்ணில் தான் தோற்றார்கள், அடுத்த போட்டி கொல்கத்தாவில் நடப்பதால் எளிதாக டெல்லி கேபிடல்ஸ் அணியை வெல்வார்கள். முதல் லீக் போட்டியில் டெல்லி அணியிடம் தோல்வி அடைந்ததற்கு பழி தீர்ப்பார்கள் என்ற எண்ணம் இருந்தது.

வித்தியாசமான சரிவு

வித்தியாசமான சரிவு

ஆனால், டெல்லி அணியிடம் தோல்வி அடைந்தது. அடுத்து மீண்டும், சென்னை அணியிடம் தன் சொந்த மண்ணில் தோல்வி அடைந்தது கொல்கத்தா. இரு அணிகளிடம் இரண்டு லீக் போட்டிகளில் தோல்வி அடைந்து வித்தியாசமான சரிவை சந்தித்துள்ளது கொல்கத்தா.

முக்கிய காரணம் இதுதான்

முக்கிய காரணம் இதுதான்

கொல்கத்தா அணி தொடர் தோல்விகளை சந்திக்க முக்கிய காரணம் ஒவ்வொரு போட்டியிலும் ஒன்றிரண்டு பேட்ஸ்மேன்களையே நம்பி உள்ளது அந்த அணி. குறிப்பாக கிறிஸ் லின், சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகிய அதிரடி வீரர்களையே நம்பி உள்ளது.

குல்தீப் மோசம்

குல்தீப் மோசம்

பந்துவீச்சில் குல்தீப் யாதவ் இதுவரை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மற்ற பந்துவீச்சாளர்களும் நிலையான செயல்பாட்டை அளிப்பதில்லை. கேப்டன் தினேஷ் கார்த்திக் போட்டிக்கு போட்டி குறைந்தது 6-7 பந்துவீச்சாளர்களை பயன்படுத்துகிறார். ஆனால், அது எதிரணிக்கு சாதகமான நிலையாகவே இருக்கிறது.

என்ன செய்ய வேண்டும்?

என்ன செய்ய வேண்டும்?

பேட்டிங்கில் வெறும் அதிரடி வீரர்களை மட்டும் நம்பி இருக்காமல், அனைத்து பேட்ஸ்மேன்களும் போட்டியை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு ஆடவேண்டும். குல்தீப் யாதவ் செயல்படாத நிலையில், அவரது இடத்தை வேறு வீரர்களுக்கு அளித்துப் பார்க்கலாம். கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சுக்கு சரியாக திட்டமிட வேண்டும். கொல்கத்தா அணி ஏப்ரல் 19 அன்று, தன் அடுத்த போட்டியில் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது.

Story first published: Sunday, April 14, 2019, 23:34 [IST]
Other articles published on Apr 14, 2019
English summary
IPL 2019 KKR vs CSK : KKR loses three matches in row
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X