மாப்பிள்ளையோட சீப்பை எடுத்து ஒளிச்சு வைச்சுட்டா.. ஐபிஎல்-ஐ நடத்த பிசிசிஐ போட்ட டகால்டி திட்டம்!

மும்பை : 2020 ஐபிஎல் தொடரை எப்படியாவது நடத்த வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் பிசிசிஐ, எதிர்ப்பு தெரிவித்து வருபவர்களின் வாயை அடைக்க டகால்டி திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஐபிஎல் தொடர் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், தொடரையே ரத்து செய்ய வேண்டும் என பல தரப்பினரும் கூறி வருகின்றனர். அதை சமாளிக்கத் தான் பிசிசிஐ ஒரு உத்தியை கையில் எடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவில் 100க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் 5,000க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

விளையாட்டுப் போட்டிகள்

விளையாட்டுப் போட்டிகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு துவங்கிய நேரத்தில் ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் போட்டிகள் நடைபெற்றன. ஆனால், அதன் வீரியம் அதிகரிக்கத் துவங்கி இருப்பதால் அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஐபிஎல் 2020 சிக்கல்

ஐபிஎல் 2020 சிக்கல்

இந்தியாவின் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் நடைபெறுவதும் தடைபட்டுள்ளது. மார்ச் 29 அன்று துவங்க இருந்த ஐபிஎல் தொடரை நடத்தக் கூடாது என ரசிகர்களும், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

ஐபிஎல் தள்ளி வைப்பு

ஐபிஎல் தள்ளி வைப்பு

இந்த நிலையில், பிசிசிஐ உயர் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. கங்குலி தலைமையில் நடந்த அந்தக் கூட்டத்தில் ஐபிஎல் தொடரை ஏப்ரல் 15 வரை தள்ளி வைக்க முடிவு எடுக்கப்பட்டது. இது தற்காலிகமான முடிவாக கருதப்படுகிறது.

ஐபிஎல் நடக்குமா?

ஐபிஎல் நடக்குமா?

ஏப்ரல் 15க்கு பின் ஐபிஎல் தொடர் துவங்குமா? என்ற சந்தேகம் உள்ளது. காரணம், அப்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறையுமா என்பது தெரியாத நிலை உள்ளது. ஆனால், ஐபிஎல் தொடரை நடத்துவதில் பிசிசிஐ உறுதியாக உள்ளது.

கூட்டத்தில் முடிவு

கூட்டத்தில் முடிவு

இதற்கிடையே நடந்த பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் கூட்டத்தில் ஐபிஎல் தொடரை எப்படி நடத்துவது என்பது குறித்து விவாதம் நடந்துள்ளது. அதன் முடிவில் தொடரை முழுமையாக நடத்துவதில் அனைவரும் உறுதியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கொரோனா விளம்பரம்

கொரோனா விளம்பரம்

ஒருவேளை கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில் ஐபிஎல் தொடர் நடந்தால் அதற்கு பலத்த எதிர்ப்பு இருக்கும். அதை சமாளிக்க ஒரு யோசனை அந்த கூட்டத்தில் முன் வைக்கப்பட்டுள்ளது. அதுதான், கொரோனா வைரஸ் விளம்பரம்.

எதிர்ப்பாளர்களை சமாளிக்க திட்டம்

எதிர்ப்பாளர்களை சமாளிக்க திட்டம்

ஐபிஎல் போட்டிகளுக்கு இடையே கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த ஒரு திட்டம் வைத்துள்ளது பிசிசிஐ. இதன் மூலம், ஐபிஎல் போட்டிகளை எதிர்த்து வரும் மாநிலங்கள், மக்கள் என பலரையும் சமாளிக்க உள்ளது. ஐபிஎல் போட்டிகளுக்கு இடையே கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த ஒரு திட்டம் வைத்துள்ளது பிசிசிஐ. இதன் மூலம், ஐபிஎல் போட்டிகளை எதிர்த்து வரும் மாநிலங்கள், மக்கள் என பலரையும் சமாளிக்க உள்ளது.

வேலைக்கு ஆகுமா?

வேலைக்கு ஆகுமா?

மாப்பிளையோட சீப்பை எடுத்து ஒளிச்சு வைச்சுட்டா, மாப்பிள்ளை எப்படி தலை சீவுவாரு? கல்யாணம் எப்படி நடக்கும்? என்ற நகைச்சுவையை போலத்தான் உள்ளது இந்த டகால்டி யோசனை. கொரோனா வைரஸ் ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் வீரர்களுக்கு பரவும் அபாயம் இருக்கும் நிலையில் ஐபிஎல் தொடரை ரத்து செய்வதே சிறப்பான முடிவாகும். என்ன விளம்பரம் போட்டாலும், ஐபிஎல் நடந்தால் நிச்சயம் கடும் எதிர்ப்பு இருக்கும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL 2020 : BCCI planned to spread Corona awareness in between the matches and nullify the opposition for IPL.
Story first published: Sunday, March 15, 2020, 14:51 [IST]
Other articles published on Mar 15, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X