For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு நிமிடம் கூட நிற்க முடியாது.. மொத்தமாக சிக்கிய சிஎஸ்கே டாப் ஆர்டர்.. என்ன செய்ய போகிறார் தோனி?

துபாய்: டெல்லிக்கு எதிராக இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு நிறைய சிக்கல்கள் காத்து இருக்கிறது. டெல்லி அணியின் பவுலிங் இதில் மிகவும் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கே அணிக்கும் டெல்லிக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி இன்று நடக்க உள்ளது. சார்ஜாவில் நடக்கும் இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது.

சார்ஜா சின்ன மைதானம் என்பதால் இங்கு முதலில் ஆடும் அணி அதிக ரன்கள் எடுக்க வாய்ப்புள்ளது. அதேபோல் இங்கு இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி எளிதாக சேசிங் செய்யவும் முடியாது.

பவுலிங் எப்படி

பவுலிங் எப்படி

இங்குதான் சிஎஸ்கே அணிக்கு மிக முக்கியமான சிக்கல் காத்து இருக்கிறது. ஐபிஎல்லில் இருக்கும் 8 அணிகளில் மிகவும் வலிமையான பவுலிங் ஆர்டர் கொண்ட அணியாக டெல்லி அணி இருக்கிறது. ஸ்பின் பவுலிங், ஸ்பீட் பவுலிங் என்று இரண்டிலும் டெல்லி அணி சமமான பலத்தோடு இருக்கிறது.

டாப் பவுலர்கள்

டாப் பவுலர்கள்

உலகில் இருக்கும் ஜாம்பவான் பவுலர்களை எல்லாம் டெல்லி அணி தங்கள் டீமில் எடுத்து அவர்களை முறையாக தயார் செய்துள்ளது. ஒரு பக்கம் ஸ்பின் பவுலிங் என்று பார்த்தாலே அஸ்வின், அக்சர் பட்டேல் இருக்கிறார்கள். அக்சர் பட்டேல் இந்த சீசனில் சிறப்பாக பந்து வீசி வருகிறார். இவரின் பவுலிங் தொட கூட முடியாமல் மும்பை பேட்ஸ்மேன்கள் திணறினார்கள்.

திணறல்

திணறல்

இன்னொரு பக்கம் ஸ்பீட் பவுலிங் செய்ய ராபாரா, அன்ரிச் நோர்ட்ச் இருக்கிறார்கள். இவர்கள் நான்கு பேரை சிஎஸ்கே எப்படி சமாளிக்க போகிறது என்று கேள்வி எழுந்துள்ளது. அதிலும் அன்ரிச் சாதாரணமாக 150 கிமீக்கும் அதிகமான வேகத்தில் மிக எளிதாக பந்து வீசுகிறார். ராஜஸ்தானுக்கு எதிரான கடந்த போட்டியில் இவர் 156.22 கிமீ வேகத்தில் பந்து வீசினார்.

செமயான வேகம்

செமயான வேகம்

இதுதான் ஐபிஎல் தொடரில் அதிக வேகமான பந்தாகும். அதே போட்டியில் இவர் 154, 155 கிமீ வேகத்திலும் பந்து வீசினார். இவரை சிஎஸ்கே எப்படி சமாளிக்க போகிறது என்று தெரியவில்லை.அதிலும் சிஎஸ்கேவின் டாப் ஆர்டரில் இருக்கும் சாம் கரன் அதிவேக பந்துகளில் ஆடும் திறமை கொண்டவர் கிடையாது. இன்னொரு பக்கம் வாட்சன் அக்சர் பட்டேல், அஸ்வின் பந்துகளில் எளிதாக அவுட்டாக கூடியவர்.

ராயுடு

ராயுடு

சரியான லென்தில் வேகமாக வந்தால் ராயுடுவும் அவுட்டாகி விடுவார். அதனால் இன்று அன்ரிச் - ராயுடு இடையே கடுமையான மோதல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் பவுலிங் முன் சிஎஸ்கே டாப் ஆர்டர் ஒரு நிமிடம் கூட நிற்க முடியாது என்று கணிக்கப்பட்டுள்ளது. சிஎஸ்கே இதனால் கடுமையான பயிற்சியோடு களத்திற்கு வரவேண்டும்.. கடந்த போட்டியிலும் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் டெல்லி பவுலர்கள் ஓவர்களில் கடுமையாக திணறினார்கள்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

அப்போது சிஎஸ்கே 200 ரன்கள் எடுத்தது. ஆனால் அப்போது டெல்லி அணியில் அஸ்வின் இல்லை. இன்று சிஎஸ்கே விற்கு எதிராக அஸ்வின் வேறு இருக்கிறார். இதனால் சிஎஸ்கே பேட்ஸ்மேன்களை தோனி எப்படி தயார் செய்ய போகிறார், என்ன செய்ய போகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது. டாப் ஆர்டர் சொதப்பினால் வேறு திட்டம் சிஎஸ்கேவிடம் இருக்கிறதா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Saturday, October 17, 2020, 17:19 [IST]
Other articles published on Oct 17, 2020
English summary
IPL 2020: CSK top order has to face the strong Delhi bowlers today
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X