“மீண்டும் வருகிறேன்”.. சிஎஸ்கேவுக்காக தோனி 2023 ஐபிஎல்- இருப்பாரா?.. களத்தில் கூறிய முக்கிய தகவல்!

மும்பை: சிஎஸ்கே கேப்டன் தோனி அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா என்பது குறித்து முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 68வது லீக் போட்டியில் இன்று சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியுள்ளன.

இந்த போட்டி தான் நடப்பாண்டில் சென்னை அணி ஆடப்போகும் கடைசி லீக் போட்டியாகும்.

6 பேருக்கு காயம்..நட்சத்திர வீரர்களும் இன்றி தவிக்கும் இந்திய அணி..தென்னாப்பிரிக்க தொடரில் பின்னடைவு6 பேருக்கு காயம்..நட்சத்திர வீரர்களும் இன்றி தவிக்கும் இந்திய அணி..தென்னாப்பிரிக்க தொடரில் பின்னடைவு

தோனி ஓய்வா?

தோனி ஓய்வா?

இந்தாண்டு சென்னை அணிக்கு மிகவும் மோசமாக அமைந்துள்ளது. கேப்டன்சி குழப்பத்தால் இதுவரை 4 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. எனவே அடுத்தாண்டு சென்னை அணிக்காக தோனி மீண்டும் விளையாடுவாரா என்பது தான் பெரிய கேள்வியாக இருந்து வந்தது. ஏனென்றால் அவர் இந்தாண்டுடன் ஓய்வு பெறுவார் என தகவல் வெளியானது.

குழப்பத்தில் ரசிகர்கள்

குழப்பத்தில் ரசிகர்கள்

தற்போது 41வயதை எட்டி வரும் தோனி, நடப்பாண்டு நல்ல ஃபிட்னஸுடன் தான் இருந்தார். அவரின் பழைய ஆக்ரோஷமான ஷாட்களை பார்க்க முடிந்தது. எனினும் இதுகுறித்து பேசியிருந்த அவர், அடுத்தாண்டு மஞ்சல் நிற ஜெர்ஸியில் வருவேன், ஆனால் எப்படி வருவேன் என குழப்பத்தை ஏற்படுத்தி சென்றார்.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

இந்நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடைத்துள்ளது. இன்று பேசிய அவர், கண்டிப்பாக அடுத்த வருடம் விளையாடுகிறேன். சென்னையில் விளையாடாமல் விடைபெறுகிறேன் எனக்கூறுவது நியாயமாக இருக்காது. எங்களுக்கு நிறைய அன்பு கிடைத்த இடங்களில் மும்பையும் ஒன்று தான். ஆனால் இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்காது.

கம்பேக் தருவோம்

கம்பேக் தருவோம்

அடுத்த வருடம் அனைத்து அணிகளும் வெவ்வேறு மைதானங்களில் விளையாட வாய்ப்பு கிடைக்கலாம். அப்போது ஒவ்வொரு மைதானத்திலும் நான் நன்றி கூறலாம். அடுத்த வருடம் தான் என்னுடைய கடைசி ஐபிஎல்- ஆக இருக்கலாம். ஆனால் என்ன நடக்கிறது என்பது யாரும் கணிக்க முடியாது. தற்போதைக்கு, நான் அடுத்தாண்டு நிச்சயம் கம்பேக் கொடுப்போம் எனக்கூறியுள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2022: CSK Captain Dhoni Opens up on the question that "will Dhoni is play IPL 2023?
Story first published: Friday, May 20, 2022, 19:51 [IST]
Other articles published on May 20, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X