For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெயிலில் நிக்க வேண்டாம்.. ஐபிஎல் ரசிகர்களே..! இந்த ஐடியாவை யூஸ் பண்ணுங்க.. டிக்கெட்டை வாங்குங்க

மும்பை:ஐபிஎல் போட்டிக்கான நாள் நெருங்கி வரும் நிலையில் டிக்கெட்டுகளை வாங்க ரசிகர்கள் ஆர்வமுடன் களம் இறங்கி உள்ளனர். அவர்கள் எப்படி எல்லாம் டிக்கெட் வாங்கலாம் என்று சில எளிதான வழிகளை காணலாம்.

இந்தியாவில் 2008ம் ஆண்டு முதல் வருடந்தோறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் வரும் மார்ச் 23ல் துவங்குகிறது.

அதற்காக வரும் ஏப்ரல் 5ம் தேதி வரையிலான போட்டி அட்டவணையை வெளியிடப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்னும் சில தினத்தில் ஐபிஎல் தொடருக்கான முழு அட்டவணை வெளியிடப்படும்.

நான் சொல்றேங்க... செமி பைனலில் இந்தியாவோட 4 அணிகள் வரும்... பைனலில் இந்த அணிகள் மோதும் நான் சொல்றேங்க... செமி பைனலில் இந்தியாவோட 4 அணிகள் வரும்... பைனலில் இந்த அணிகள் மோதும்

சென்னை போட்டி

சென்னை போட்டி

இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள அட்டவணைப்படி, சென்னையின் 2 போட்டிகள் நடக்கவுள்ளது. வரும் மார்ச் 23ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

டிக்கெட் விற்பனை

டிக்கெட் விற்பனை

சென்னையில் நடக்கும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது. டிக்கெட்டை மைதானத்திற்கு நேரில் சென்று வாங்கலாம், புக் மை ஷோ, சென்னை அணியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வாங்கலாம்.

புக் மை ஷோவில் பெறலாம்

புக் மை ஷோவில் பெறலாம்

மும்பையில் நடக்கும் போட்டிகளுக்கான டிக்கெட்டை புக் மை ஷோ ஆப்பில் வாங்கலாம். முதல் போட்டியை டெல்லி அணியுடன் எதிர்கொள்கிறது.

மார்ச் 28ல் போட்டி

மார்ச் 28ல் போட்டி

பெங்களூரு அணி மும்பை அணியை மார்ச் 28-ம் தேதி எதிர்கொள்கிறது. பெங்களூருவில் நடக்கும் போட்டிகளுக்கான டிக்கெட்டை பெங்களூரு அணியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வாங்கலாம்.

இணையதளத்தில் விற்பனை

இணையதளத்தில் விற்பனை

டெல்லி அணி தமது போட்டிகளுக்கான டிக்கெட்டை அந்த அணியின் அதிகாரப் பூர்வ இணையதள பக்கத்தில் விற்பனை செய்கிறது. பஞ்சாப் அணி தனது போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையை இன்சைடர் என்ற ஆன்லைன் டிக்கெட் தளத்தில் வாங்கலாம் என்று அறிவித்துள்ளது.

பஞ்சாப், ஹைதராபாத்

பஞ்சாப், ஹைதராபாத்

கொல்கத்தா அணி மார்ச் 24-ம் தேதி ஹைதராபாத் அணியுடனும், மார்ச் 27-ம் தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனும் மோதுகிறது.போட்டிக்கான டிக்கெட்டை அந்த அணியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம், புக் மை ஷோ-வில் பெறலாம்.

ஆன்லைனில் டிக்கெட்

ஆன்லைனில் டிக்கெட்

ஹைதராபாத் அணி தனது போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையை eventsnow.com என்ற ஆன்லைன் டிக்கெட் தளத்தில் வாங்கலாம் என்று அறிவித்துள்ளது. ஹைதராபார்த் அணி மார்ச் 29-ம் தேதி ராஜஸ்தான் அணியுடன் மோதுகிறது.

வழிமுறைகள்

வழிமுறைகள்

ராஜஸ்தான் அணி பஞ்சாப் அணியுடன் மார்ச் 24-தேதி மோதுகிறது. இந்த டிக்கெட்டை புக் மை ஷோ-வில் பெறலாம் என்று அறிவித்துள்ளது. ஆக இந்த வழிமுறைகளை பயன்படுத்தி ரசிகர்கள் எளிதாக ஐபிஎல் டிக்கெட்டுகளை பெறலாம்.

Story first published: Saturday, March 16, 2019, 14:44 [IST]
Other articles published on Mar 16, 2019
English summary
Ipl teams announced their website addresses to get tickets very easily.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X