For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நம்ம இஷாந்த் சர்மாவா? எப்படிப்பா? சாதனைப் பட்டியலில் கபில் தேவோடு சேர்ந்த இஷாந்த்

லண்டன் : இஷாந்த் சர்மா இங்கிலாந்தில் ஒரு புதிய சாதனை செய்துள்ளார். இங்கிலாந்து மண்ணில் அதிக விக்கெட் எடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில், கபில் தேவோடு முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

நீண்ட காலமாக இந்திய அணியில் ஆடி வரும் இஷாந்த் சர்மா, சத்தமில்லாமல் இந்த சாதனையை செய்துள்ளார். இதன் மூலம் தன் மீதான விமர்சனங்களுக்கும் விடை கொடுத்துள்ளார்.

நேற்று இஷாந்த் சர்மா, இங்கிலாந்தின் சாம் கர்ரன் விக்கெட்டை வீழ்த்திய போது இந்த சாதனையை நிகழ்த்தினார். இன்னும் ஒரு விக்கெட் எடுக்கும் பட்சத்தில் இஷாந்த், கபில் தேவை இந்த பட்டியலில் முந்துவார்.

சீரற்ற பந்துவீச்சு

சீரற்ற பந்துவீச்சு

இஷாந்த் சர்மா இந்திய அணியில் 19 வயதில் இருந்து ஆடி வருகிறார். எனினும், பல ஆண்டுகளாக அவரால் ஒரே சீராக பந்து வீச முடியாமல் இருந்தது. ஒரு போட்டியில் நன்றாக வீசுவதும், அடுத்த போட்டியில் தன் பந்துவீச்சு அளவுகளை தவறவிடுவதுமாக இருந்தார். இந்திய அணியிலும் இடம் உறுதியாக இல்லாத நிலையும் இருந்தது. எனினும், இஷாந்தின் உயரம் மற்றும் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் பற்றாக்குறை காரணமாக அணியில் இடம் பிடித்து வந்தார்.

வித்தையை பிடித்தார்

வித்தையை பிடித்தார்

தற்போது இங்கிலாந்து தொடரில் தனக்கு கைவராத வித்தையை எப்படியோ பிடித்துவிட்டார். கவுன்டி போட்டிகளில் அவர் ஆடியதும் ஒரு காரணம். அதன் விளைவாக இந்த தொடரில் மட்டும், 18 விக்கெட்கள் அள்ளியுள்ளார். இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் 21 விக்கெட்கள் எடுத்து இவருக்கு முன்னே இருக்கிறார். ஐந்தாம் போட்டியில் இதுவரை 3 விக்கெட்கள் எடுத்துள்ளார் இஷாந்த். இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆட்டம் இன்னும் இருக்கிறது.

கபில் தேவ் சாதனை

கபில் தேவ் சாதனை

தற்போது இந்திய பந்துவீச்சாளர் ஒருவர் இங்கிலாந்து மண்ணில் எடுத்த அதிக விக்கெட்கள் பட்டியலில் கபில் தேவோடு முதல் இடத்தில் இருக்கிறார். கபில் தேவ் 13 டெஸ்ட்களில், 22 இன்னிங்க்ஸ்களில் 43 விக்கெட்கள் எடுத்து இருக்கிறார். இஷாந்த் 12 டெஸ்ட்களில், 18 இன்னிங்க்ஸ்களில் 43 விக்கெட்கள் எடுத்து இருக்கிறார். இவர்களுக்கு அடுத்த இடத்தில் அனில் கும்ப்ளே 36 விக்கெட்களோடு இருக்கிறார்.

ஒரே சீரிஸில்..

ஒரே சீரிஸில்..

அடுத்து ஒரே இங்கிலாந்து தொடரில் அதிக விக்கெட்கள் எடுத்த இந்தியர்கள் பட்டியலில் புவனேஸ்வர் குமார் மற்றும் ஜாகிர் கானுக்கு பின்னே இருக்கிறார். புவி 19 விக்கெட்களும், ஜாகிர் 18 விக்கெட்களும் எடுத்துள்ளனர். இஷாந்த் 18 விக்கெட்கள் எடுத்துள்ள நிலையில், இன்னும் இரண்டு விக்கெட்கள் எடுத்து விட்டால் அவர்களை முந்தி விடுவார். அதோடு கபில் தேவ் சாதனையையும் முறியடிப்பார்.

Story first published: Sunday, September 9, 2018, 16:27 [IST]
Other articles published on Sep 9, 2018
English summary
Ishant Sharma equals Kapil Dev record for most number of wickets in England
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X