பந்தை சேதப்படுத்திய குற்றத்தில் எனக்கும் பங்குண்டு.. டேவிட் வார்னரின் மனைவி திடுக்கிடும் பேட்டி!

Posted By:

கேப்டவுன்: ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்கு தானும் ஒரு காரணம் என்று வார்னர் மனைவி கேண்டீஸ் வார்னர் பேட்டி அளித்துள்ளார். இந்த பிரச்சனை தன்னால்தான் ஆரம்பித்தது என்றுள்ளார்.

கிரிக்கெட் பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஒருவருடம் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய வீரர் கேமரூனுக்கு 9 மாதம் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

வாழ்நாள் முழுக்க இனி வார்னர் கேப்டன், துணை கேப்டன் போன்ற தலைமை பொறுப்புகளை வகிக்க முடியாது. தடை முடிந்து மேலும் ஒருவருடம் ஸ்மித் கேப்டனாக இருக்க முடியாது.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஸ்மித், கேமரூன் ஆகிய இருவரும் உப்புத்தாள் போன்ற சாதனம் கொண்டு பந்தை தேய்த்து இருக்கிறார்கள். இதை பாக்கெட்டில் மறைமுகமாக வைத்து கொண்டு வந்துள்ளனர். பந்தை மாற்றும் போது, உப்புத்தாளை வைத்து தேய்த்து இருக்கிறார்கள். பந்து நன்றாக சுழல வேண்டும் என்று இப்படி செய்துள்ளார்கள்.

காரணம்

காரணம்

இதற்கு தானும் ஒரு காரணம் என்று வார்னரின் மனைவி கேண்டீஸ் வார்னர் தெரிவித்துள்ளார். அதில் ''வார்னர் மிகவும் மன உளைச்சலில் இருந்தார். என்னை பற்றி தென்னாப்பிரிக்க ரசிகர்களும், வீரர்களும் தவறாக பேசியதை அவரால் பொறுத்துக்க கொள்ள முடியவில்லை. அந்த கோபத்தில் இப்படி செய்துவிட்டார். அவரது குற்றத்துக்கு எப்படி பார்த்தாலும் நானும் ஒரு காரணம்'' என்றுள்ளார்.

பிரச்சனை

பிரச்சனை

இந்த தொடரின் டெஸ்ட் போட்டி ஒன்றின் சாப்பாடு இடைவெளியில் வீரர்கள் டிரெஸ்ஸிங் ரூமிற்கு திரும்பி செல்லும் போது வார்னருக்கும் குயிண்டன் டி காக்கும் இடையில் சண்டை வந்து இருக்கிறது. வார்னரின் மனைவி குறித்து குயிண்டன் டி காக் திட்டி இருக்கிறார். இது பெரிய பிரச்சனை ஆனது.

எதனால் சண்டை

எதனால் சண்டை

வார்னரின் மனைவி கேண்டீஸ் வார்னர் 2007ல் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த ரக்பி வீரர் ஒருவரை காதலித்து வந்தார். அவருடன் சேர்த்து வைத்து கேண்டீஸ் வார்னரை தவறாக சித்தரித்து தென்னாப்பிரிக்க வீரர்கள், ரசிகர்கள் பேசி இருக்கிறார்கள். இதனால் கோபமடைந்த வார்னர் இப்படி தவறாக முடிவெடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
A day after disgraced Australia former vice-captain David Warner addressed media in Sydney in the wake of the ball-tampering scandal, his wife Candice said on Sunday (April 1) she blamed herself for the bad phase the cricketer is going through. She added that the taunts they faced in South Africa took a huge toll.
Story first published: Sunday, April 1, 2018, 12:49 [IST]
Other articles published on Apr 1, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற