கடைசி ஓவர் வரை திக், திக்.. பும்ரா புயலால் தொடரை வென்றது இந்தியா

Posted By:

கான்பூர்: நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஜஸ்ப்ரிட் பும்ரா வீசிய அந்த கடைசி ஓவரை நினைத்து நெஞ்சம் உருகிக் கிடக்கிறார்கள் ரசிகர்கள்.

இப்படி ஒரு கடைசி ஓவர் த்ரில்லரை பார்த்து ரொம்ப நாளாகிவிட்டதால், நேற்றைய 'பைனல்' போட்டி, ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. விருந்தில் இறுதியில் சாப்பிடும் பாயாசம் போல அமைந்தது பும்ராவின் அசத்தல் பந்து வீச்சு.

ரோகித் ஷர்மாவும், கேப்டன் கோஹ்லியும் சதம் அடித்து நொறுக்கியதன் காரணமாக 50 ஓவர்களில் 337 ரன்களை குவித்தது இந்தியா. ஆனால் நியூசிலாந்தும் சளைக்கவில்லை.

ஆரம்பத்திலும் அசத்தல்

ஆரம்பத்திலும் அசத்தல்

மார்டின் கப்திலை 10 ரன்களிலேயே பும்ரா வெளியேற்றியபோதிலும், கோலின் முன்ரோ, கேப்டன் கனே வில்லியம்சன் முறையே 75, 64 ரன்களை குவித்து அடித்தளம் அமைத்தனர். ரோஸ்ஸ டெய்லர் 39, விக்கெட் கீப்பர் டோம் லதாம் 65 ரன்கள் அடிக்க வெற்றி இலக்கை கிட்டத்தட்ட நெருங்கியது நியூசிலாந்து.

இலக்கு குறைவு

இலக்கு குறைவு

இந்த நிலையில்தான், கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. பேட்டிங் சொர்க்கபுரியாக இருந்த கான்பூர் மைதானத்தில் நியூசிலாந்து வீர்கள் இந்த ரன்களை எட்டிவிடுவார்களோ என்ற பதற்றம் இந்திய ரசிகர்களை தொற்றிக்கொண்டது.

கடைசி ஓவர் பும்ரா கையில்

கடைசி ஓவர் பும்ரா கையில்

கடைசி ஓவரை வீச 'இந்தியாவின் மலிங்கா' என்று புகழப்படுபவரான பும்ரா அழைக்கப்பட்டார். அவர் 9 ஓவர்கள் வீசி 39 ரன்களைதான் கொடுத்திருந்தார் என்பதால் அவரை தவிர அந்த ஓவரை வீசச் செய்வதற்கு கேப்டனுக்கு வேறு ஆப்ஷன் இல்லை.

த்ரில் போட்டி

த்ரில் போட்டி

ரசிகர்கள் நகத்தை கடிக்க ஆரம்பித்தனர். பும்ரா வீசிய முதல் பந்தை கிராண்ட்டோம் எதிர்கொண்டார். யார்க்கராக வீசிய அந்த பந்தில் ரன் ஏதுமில்லை. அடுத்த பந்தும் யார்க்கர். இம்முறை லாங்ஆப் திசையில் 1 ரன் எடுதத்தார் கிராண்ட்சம். முந்தைய புவனேஸ்வர்குமார் ஓவரில் சிக்சர் விளாசியிருந்த சான்ட்னர் 3வது பந்தை சந்தித்தார். ஓடிவந்த கீப்பர் டோணி,பும்ராவின் ஷூலேசை கட்டிவிட்டபடி சில டிப்ஸ்கள் கொடுத்தார்.

அபார பந்து வீச்சு

அபார பந்து வீச்சு

3வது பந்தில் சான்ட்னர் 2 ரன்கள் எடுத்தார். 4வது பந்தில் தவானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் சான்ட்னர். இந்திய ரசிகர்கள் நீண்ட பெருமூச்சு விட்டனர். அடுத்த பந்தில் 1 ரன்னும், கடைசி ஓவரில் 4 ரன்னும் கொடுத்து வெற்றிகரமாக போட்டியை நிறைவு செய்து வைத்தார் பும்ரா. ஸ்டேடியமே மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தது. 7 விக்கெட்டுளை இழந்து 331 ரன்களைதான் எடுக்க முடிந்தது நியூசிலாந்தால். 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்தியா. பும்ரா மீண்டும் ஒருமுறை சிறந்த பவுலர் என்பதை நிரூபித்தார். ஹை-ஸ்கோர் போட்டியில் 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு 47 ரன்களைத்தான் கொடுத்திருந்தார் பும்ரா.

Story first published: Monday, October 30, 2017, 8:42 [IST]
Other articles published on Oct 30, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற