இந்த ஐபிஎல் சீசனின் நான்காவது டபுள் சென்சுரி அடித்தது கொல்கத்தா

Posted By:
கொல்கத்தா அதிரடி.... டெல்லிக்கு 201 ரன்கள் இலக்கு

கொல்கத்தா: இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை 12 ஆட்டங்கள் முடிந்துள்ளன. அதில் 24 இன்னிங்ஸ் விளையாடப்பட்டுள்ளது. டெல்லிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா 200 ரன்கள் எடுத்தது. இது இந்த சீசனில் எடுக்கப்படும் நான்காவது டபுள் சென்சுரி ஆகும். கொல்கத்தாவுக்கு இது இரண்டாவது இரட்டை சதம்.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டி சீசன் 11 நடந்து வருகிறது. இதுவரை 12 ஆட்டங்கள் முடிந்துள்ளன. டெல்லி, கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது.

KKR scored fourth double century in this IPL season

இதுவரை 12 போட்டிகளில், 24 இன்னிங்ஸ் நடந்துள்ளது. சென்னையில் நடந்த சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. 19.5 ஓவர்களில் சிஎஸ்கே 5 விக்கெட்களை மட்டும் இழந்து 205 ரன்கள் எடுத்து வென்றது.

ராஜஸ்தான் மற்றும் பெஙகளூரு அணிகளுக்கு இடையே நேற்று நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. டெல்லிக்கு எதிராக நடக்கும் ஆட்டத்தில் கொல்கத்தா எடுத்த 200 ரன்கள் இந்த சீசனில் நான்காவது டபுள் சென்சுரி ஆகும்.

கொல்கத்தா அணி இதற்கு முன் 5 முறை மட்டும் 200 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளளது. 2008ல் பெங்களுருக்கு எதிராக 222 ரன்கள் எடுத்ததே அதிகமாகும். அதே 2008ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக 204 ரன்கள் எடுத்தது. 2010 மற்றும் 2014ல் பஞ்சாபுக்கு எதிராக தலா 200 ரன்கள் எடுத்தது. தற்போது நடக்கும் இந்த சீசனில் சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் 202 ரன்கள் எடுத்தது.

சிஎஸ்கே 16 முறை டபுள் சென்சுரி அடித்துள்ளது. பஞ்சாப் 12, ராஜஸ்தான் 7, மும்பை 10, கொல்கத்தா 6, ஐதராபாத் 6, டெல்லி 4 முறை டபுள் சென்சுரி அடித்துள்ளன.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
KKR scored second and seasons' fourth double century. CSK with 16 double centuries on top of the list.
Story first published: Monday, April 16, 2018, 23:21 [IST]
Other articles published on Apr 16, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற