For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இலங்கைத் தமிழ் பேசப் போகும் ஐபிஎல் போட்டிகள்.. ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-இன் அதிரடி திட்டம்!!

கொல்கத்தா : 2019 ஐபிஎல் தொடரின் ஆறாவது போட்டியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் போட்டி முதல் ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒரு புதிய முயற்சி செய்யப்பட உள்ளது.

இதுவரை தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே கிரிக்கெட் வர்ணனை செய்து வந்த நிலையில், இலங்கை வீரர் ஒருவரை இலங்கைத் தமிழில் பேச அழைத்து வந்துள்ளது ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸ்.

டீம்ல அவரு இல்லை... ரொம்ப கஷ்டம் தான்...என்ன பண்றது... யோசிக்கும் தோனி டீம்ல அவரு இல்லை... ரொம்ப கஷ்டம் தான்...என்ன பண்றது... யோசிக்கும் தோனி

ரஸ்ஸல் அர்னால்டு

அந்த வீரர் ரஸ்ஸல் அர்னால்டு. இலங்கை அணியில் 1997 முதல் 2007 வரை பல்வேறு டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் ஆடியுள்ளார் அர்னால்டு. இவர் ஏற்கனவே, கிரிக்கெட் போட்டிகளுக்குஆங்கில வர்ணனை செய்து வரும் நிலையில், அவரை தமிழில் இறக்கி விட முயற்சி எடுத்துள்ளது ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

வித்தியாசமான உணர்வு

இலங்கைத் தமிழில் கிரிக்கெட் வர்ணனை பார்வையாளர்களுக்கு வித்தியாசமான உணர்வை அளிக்கும் என்பதால் இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. தற்போதைய தமிழ் வர்ணனை சிலருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதிக ஆங்கில வார்த்தைகளில் தான் வர்ணனை இருக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது.

தேவையற்ற பதிவுகள்

ரஸ்ஸல் அர்னால்டு சில சமயம் ட்விட்டரில் தேவையற்ற பதிவுகளைப் போட்டு இந்திய ரசிகர்களிடம் திட்டு வாங்கியவர். இவரது தமிழ் வர்ணனையில் சர்ச்சை எழாமல் இருந்தால் நல்லது.

இப்போது ஏன்?

இப்போது ஏன்?

ஐபிஎல் தொடரின் முதல் போட்டி முதல் இவரை அறிமுகம் செய்யாமல், இரு தமிழ்நாட்டு வீரர்கள் கேப்டன்களாக இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி அன்று களமிறக்குகிறது ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

Story first published: Wednesday, March 27, 2019, 20:09 [IST]
Other articles published on Mar 27, 2019
English summary
KKR vs KXIP IPL 2019 : Russel Arnold joins Tamil commentary in StarSports
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X