For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வரலாற்று வெற்றியை அள்ளித் தந்த அந்த 3 உத்திகள்...!! கோலிக்கு குவியும் பாராட்டுகள் #INDvsPAK

Recommended Video

WORLD CUP 2019 IND VS PAK | சுத்தி சுத்தி அடித்த இந்தியா, பாகிஸ்தான் படுதோல்வி!

மான்செஸ்டர்: பாகிஸ்தானுக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் அதே வேளையில் இதை எப்படி சாதித்தார் கோலி என்ற கேள்வியும் பலருக்கு எழுந்துள்ளது. மொத்தம் மூன்றே மூன்று உத்திகள் தான் அவருக்கு வெற்றியை தந்தது. அதை விரிவாக பார்ப்போம்.

மழையின் காரணமாக போட்டியே நடைபெறாது என்ற செய்திகள் அதிகளவில் பகிரப்பட்டன. ஆனால், கடைசி நேரத்தில் மழையும் வழிவிட போட்டி தொடங்கியது. முதலில் டாசில் தோற்றதே பெரிய சறுக்கல் என்று அதிகமாக பேசப்பட்டது.

வீரர்கள் தேர்வு

வீரர்கள் தேர்வு

மழை, அதனை தொடர்ந்து.... வீரர்கள் தேர்வு என அடுத்தக்கட்ட படலம் தொடரந்தது. இந்த இடத்தில் தான், தமது முதல் உத்தியை பயன்படுத்தி இருக்கிறார் கோலி. மான்செஸ்டரில் பெய்த கடும் மழை, ஈரப்பதம் ஆகியவற்றை மனதில் கொண்டு தான் பவுலர்கள் தேர்ந்தெடுப்பது வழக்கம். அதில் தான் சற்று சமயோசிதமாக செயல்பட்டிருக்கிறார் கோலி.

கேட்காத யோசனைகள்

கேட்காத யோசனைகள்

அதாவது, 3வது வேகப்பந்து வீச்சாளரை அணியில் இணைக்கலாம் என பலரும் கூறி வந்தனர். ஆனால் அந்த யோசனைகளை புறந்தள்ளிவிட்டு, இரு ரிஸ்ட் சுழற் பந்து வீச்சாளர்களுடன் விஜய் சங்கரையும் அணியில் இணைத்தது அனைவருக்கும் மில்லியன் டாலர் ஆச்சரியம்.

முதல் பந்தில் விக்.

முதல் பந்தில் விக்.

பவுலிங்கின் போது, இடது தொடையில் ஏற்பட்ட தசை பிடிப்பால் போட்டியில் இருந்து புவனேஸ்குமார் விலக, பந்துவீச்சு டீமில் கூடுதல் வலு சேர்க்கும் பொருட்டு, விஜய் ஷங்கரை அழகாக பயன்படுத்தினார். அவர் வீசிய முதல் பந்திலே வெற்றி கிடைத்தது.. விக்கெட்டும் வீழ்ந்தது. இந்த இடத்தில் வேறு ஒரு முக்கிய விஷயத்தை உற்று நோக்க வேண்டும். நேற்றைய ஆட்டத்தில் தோனியின் ஏகோபித்த ஆதரவை பெற்ற கேதர் ஜாதவ், ஒரு ஓவர் கூட வீசவில்லை. விஜய் சங்கரை பயன்படுத்தியதில் தமது முதல் உத்தியின் மூலம் வெற்றியை பெற்றிருக்கிறார் கோலி.

ஹர்திக் வந்தார்

ஹர்திக் வந்தார்

விஜய் சங்கரை போலவே மற்றொரு ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவையும் அவர் பயன்படுத்திக் கொண்ட விதம் அழகு. அவ்வப்போது அவரை ஓவர் வீச செய்து, பாக். ரன் விகிதத்தை மேலும் முன்னேற விடாமல் பார்த்து கொண்டார்.

சாய்ந்த 2 விக்.

சாய்ந்த 2 விக்.

இது தவிர, இரு சுழல் பந்து வீச்சாளர்களையும் முழுமையாக பயன்படுத்தி ஆட்டத்தின் போக்கை இந்தியாவுக்கு சாதகமாக்கி கொண்டார் கோலி. குறிப்பிட்டு சொல்ல 2 விக்கெட்டுகள் இருக்கின்றன. ஒன்று, முகமது ஹபீஸ் மற்றும் சோயிப் மாலிக்.

முக்கிய விக்கெட்டுகள்

முக்கிய விக்கெட்டுகள்

இவர்கள் இருவரின் விக்கெட்களை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார் ஹர்திக். அவர் வீசி 8 ஓவர்களில் 44 ரன்களை கொடுத்தாலும், 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். விஜய் சங்கரும் 5.2 ஓவர்கள் வீசி 22 ரன்களை கொடுத்து 2 விக்கெட்களை அள்ளியிருக்கிறார்.

வலுவடைந்த பார்ட்னஷிப்

வலுவடைந்த பார்ட்னஷிப்

பாக். அணியின் 2வது விக்கெட் பார்ட்னர்ஷிப் நேற்றைய போட்டியில் அபாரமாக இருந்தது. அவர்களை பிரித்தால் தான் இந்திய அணிக்கு வெற்றியை நோக்கி போகும் வழி கிடைக்கும் என்ற நிலை. 5வது ஓவரில் பாக் தமது முதல் முதல் விக்கெட்டை இழந்தது பாகிஸ்தான்.

ரன்கள் வந்தன

ரன்கள் வந்தன

அதன் பின்னர் இளம் வீரர் பாபர் ஆசம்(கோலி வீடியோவை பார்த்து பேட்டிங் பயிற்சி மேற்கொண்டவர்) மற்றும் பக்கர் ஜமான் ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர். அதே நேரத்தில், பிரதான சுழல் பந்து வீச்சாளர்கள் சஹல் மற்றும் குல்தீப் தொடர்ந்து ரன்களை அள்ளிவிட்டு கொண்டிருந்தனர்.

கிளீன் போல்டு

கிளீன் போல்டு

பாபரும், ஜமானும் சுழற் பந்துவீச்சில் நிலைத்து நிற்க, பவுலிங் சேன்ஞ் என்ற ஆயுதத்தை தான் மற்ற கேப்டனகள் எடுத்திருப்பர். ஆனால், சற்று வித்தியாசமாக, சஹல், குல்தீப் மீது நம்பிக்கை வைத்தார். விளைவு...... குல்தீப் பந்தில் பாபர் ஆசம் ஸ்டம்புகளை பறிகொடுத்தார். பக்கர் ஜமான் 62 ரன்கள் குவித்திருந்த போது தேவையில்லாமல் தனது விக்கெட்டை இழந்தார்.

சரிந்த சீட்டுக்கட்டு

சரிந்த சீட்டுக்கட்டு

நன்கு விளையாடிக் கொண்டிருந்த இந்த இரு பேட்ஸ்மேன்களும் பெவிலியன் திரும்பிய பின்னரே, சீட்டுக்கட்டுகளாய் மாறி சரிந்தது பாக். பேட்டிங் முகாம். கோலி கையாண்ட உத்திகளிலேயே இது தான் அதிக பாராட்டுகளை பெற்றிருக்கிறது. 2 பேரின் விக்கெட்டை காலி செய்து, அதன் தொடர்ச்சியை அணியையே வெற்றியின் பக்கம் கொண்டு பாகிஸ்தானுக்கு எதிராக வரலாற்றில் அழிக்க முடியாத சாதனையை படைத்திருக்கிறார் கோலி.

Story first published: Monday, June 17, 2019, 13:26 [IST]
Other articles published on Jun 17, 2019
English summary
Kohli’s 3 important decisions which helps to get victory against Pakistan.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X