For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி போனாரு.. அதோடு இவர் வாழ்க்கையும் போச்சு.. இந்திய அணியில் புலம்பும் மூத்த வீரர்.. என்னாச்சு?

சென்னை: இந்திய அணியில் தோனி இல்லாத நிலையில் ஸ்பின் பவுலர் குல்தீப் யாதவ் பார்மிற்கு திரும்ப முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்.

இந்திய அணியில் முக்கியமான லெக் ஸ்பின் பவுலராக வலம் வந்தவர் குல்தீப் யாதவ். இரண்டு முறை சர்வதேச போட்டிகளில் ஹாட் டிரிக் எடுத்து அசத்தினார்.

இந்திய அணியில் இன்னும் 7 வருஷம்.. நடராஜனுக்கு முக்கிய அட்வைஸ் தந்த இர்பான் பதான்!இந்திய அணியில் இன்னும் 7 வருஷம்.. நடராஜனுக்கு முக்கிய அட்வைஸ் தந்த இர்பான் பதான்!

பல முறை இந்திய ஒருநாள் அணியில் குல்தீப் சிறப்பாக ஆடி அணியை வெற்றிபெற வைத்துள்ளார். இவரின் ஆட்டம் காரணமாக இந்திய அணியில் அஸ்வினின் வாய்ப்பும், ஜடேஜாவின் வாய்ப்பும் பறிபோனது.

அஸ்வின்

அஸ்வின்

2019 உலகக் கோப்பை போட்டியில் கூட அஸ்வினுக்கு பதிலாக குல்தீப், சாஹல் என்று இரண்டு லெக் ஸ்பின் பவுலர்களை கோலி களமிறங்கினார். அந்த அளவிற்கு குல்தீப் சிறப்பாக பவுலிங் செய்தார் .ஆனால் 2019 உலகக் கோப்பை தொடரில் இருந்தே குல்தீப் யாதவ் பார்மன்றி தவித்து வருகிறார். கடந்த ஐபிஎல் தொடரிலும் இவர் மோசமான பார்மில் இருந்தார்.

பார்ம் இல்லை

பார்ம் இல்லை

சர்வதேச போட்டிகளில் குல்தீப் ஆடி இரண்டு வருடம் ஆக போகிறது. அந்த அளவிற்கு இவரின் பவுலிங் மிக மோசமாக மாறியுள்ளது. இந்திய அணியில் தோனி இல்லாததும் இதற்கு முக்கிய காரணம் என்று கூறுகிறார்கள். தோனி இந்திய அணியில் இருந்த போது குல்தீப் யாதவிற்கு ஆலோசனை வழங்குவார்.

விக்கெட்

விக்கெட்

குல்தீப் விக்கெட் எடுக்க திணறும் போது தோனிதான் கீப்பிங்கில் நின்று கொண்டு குல்தீப் யாதவிற்கு வழி நடத்துவார். தோனி சொன்னபடி குல்தீப் யாதவ் பந்து வீசுவார்.இதில் சரியாக விக்கெட் விழும். பல முறை தோனியின் ஐடியா காரணமாக குல்தீப் யாதவ் விக்கெட் எடுத்துள்ளார் .

திணறல்

திணறல்

ஆனால் இப்போதெல்லாம் அணியில் தோனி இல்லை. கீப்பிங் நிற்க கூடிய கே.எல் ராகுல், பண்ட் என்று யாருமே குல்தீப் யாதவை வழி நடத்துவது இல்லை. எப்படி பவுலிங் போட வேண்டும் என்று குல்தீப் யாதாவிற்கு யாரும் ஆலோசனை வழங்குவது இல்லை. இதனால் களத்தில் எப்படி ஆடுவது என்று தெரியாமல் குல்தீப் யாதவ் குழம்பி போய் உள்ளார்.

ஓய்வு

ஓய்வு

தோனி ஓய்விற்கு பின் மொத்தமாக குல்தீப் யாதவின் கிராப் சரிந்துள்ளது. இப்படியே ஆடினால் அவரின் கிரிக்கெட் கெரியரே அஸ்தமனம் ஆகும் நிலையில் உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தால் குல்தீப் யாதவ் பார்மிற்கு திரும்ப வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Story first published: Friday, January 29, 2021, 18:34 [IST]
Other articles published on Jan 29, 2021
English summary
Kuldeep Yadav lost his form in Team India due to the absence of Dhoni in Keeping.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X