For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹெய்டன், ஹஸ்ஸி, கோஹ்லியிடம் கற்றது கை கொடுத்தது... ரெய்னா

பெங்களூர்: மாத்யூ ஹெய்டன், மைக் ஹஸ்ஸி, விராத் கோஹ்லியிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அது சென்னை சூப்பர் கிங்ஸுக்காக சிறப்பாக ஆட கை கொடுத்தது என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ், 2014ம் ஆண்டின் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றுள்ளது. இது இந்த அணிக்கு 2வது வது கோப்பையாகும். இதற்கு முன்பு 2010ம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருந்தது சென்னை.

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான நேற்றைய இறுதிப் போட்டியின்போது சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா அபாரமாக ஆடி சதம் போட்டு சென்னையை வெற்றிப் பாதைக்குக் கொண்டு போய் விட்டார். முன்னதாக ஆடிய கொல்கத்தா அணிக்காக கேப்டன் கெளதம் கம்பீர் சிறப்பாக ஆடி 90 ரன்களைக் குவித்தது வீணாகிப் போய் விட்டது.

தொடர் நாயகனாக சுரேஷ் ரெய்னா தேர்ந்தெடுக்கப்பட்டார். இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக 5 விக்கெட் சாய்த்த சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பவன் நேகி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வெற்றிக்குப் பின்னர் ரெய்னா பேசியதாவது...

7 வருடத்தில் நிறைய கற்று விட்டேன்

7 வருடத்தில் நிறைய கற்று விட்டேன்

கடந்த ஏழு வருடங்களில் நான் நிறையக் கற்றுக் கொண்டுள்ளேன். முன்பு மாத்யூ ஹெய்டன் வழி காட்டினார். பின்னர் மைக் ஹஸ்ஸி வழி காட்டினார். பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் என்னை முதிர்ச்சியான வீரராக மாற்ற உதவினார்.

கோஹ்லி மூலம்

கோஹ்லி மூலம்

இந்திய வீரர்களில் விராத் கோஹ்லியைப் பார்த்து நான் நிறையக் கற்றுள்ளேன். நல்ல தொடக்கத்தைக் கொடுத்து ஸ்கோரையும், அணியின் ஸ்கோரையும் பில்டப் செய்வது எப்படி என்பதை அவரிடமிருந்து கற்றேன்.

டோணியை மறக்க முடியாது

டோணியை மறக்க முடியாது

மேலும் நானும் டோணியும் சேர்ந்து கொடுத்த பார்ட்னர்ஷிப்களையும் என்னால் மறக்க முடியாது.

யுவராஜ் சிங்கின் ஹெல்ப்

யுவராஜ் சிங்கின் ஹெல்ப்

இதேபோல யுவராஜ் சிங்கின் பெயரையும் என்னால் மறக்க முடியாது

20 ரன்கள் குறைவாக எடுத்த கொல்கத்தா

20 ரன்கள் குறைவாக எடுத்த கொல்கத்தா

கொல்கத்தா வீரர்கள் நன்றாகவே பேட் செய்தனர். ஆனால் 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டார்கள். அதை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டோம். முக்கியமான நாளில் சிறப்பாக வி்ளையாடுவது என்பது எப்போதுமே திரில்லானது, அற்புதமானது.

அபாரமான வீரர்கள்

அபாரமான வீரர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸில் அபாரமான வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். பிரன்டன் மெக்கல்லம், பாப் டு பிளஸ்ஸிஸ், பிராவோ ஆகியோர் சிறப்பானவர்கள் என்றார் ரெய்னா.

Story first published: Sunday, October 5, 2014, 13:10 [IST]
Other articles published on Oct 5, 2014
English summary
Having guided CSK to their second CLT20 trophy, Suresh Raina said that he has matured as a player taking cues from his contemporaries including Virat Kohli, who has shown the way with big hundred in ODI cricket.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X