For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நல்லா ஆடினாலும் பரவாயில்லை.. இளம் வீரருக்கு 2 ஆண்டுகள் தடை.. அதிரடி முடிவு!

Recommended Video

Age fraud in Cricket | Manjot Kalra banned for 2 years

டெல்லி : டெல்லி மாநில கிரிக்கெட் அணியில் வயது மோசடி செய்த வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக, வயது மோசடி செய்து இடம் பெற்ற வீரர்கள் மீது விசாரணை நடந்து ஒவ்வொருவர் மீதும் தனிப்பட்ட முறையில் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

 தோனி மறுபடி டீமுக்குள்ள வர ஒரே வாய்ப்பு இதுதான்.. அனில் கும்ப்ளே அதிரடி! தோனி மறுபடி டீமுக்குள்ள வர ஒரே வாய்ப்பு இதுதான்.. அனில் கும்ப்ளே அதிரடி!

2 ஆண்டுகள் தடை

2 ஆண்டுகள் தடை

அதன்படி., அண்டர் 19 அணியில் சிறப்பாக ஆடியவரும், தற்போதைய டெல்லி ரஞ்சி அணியில் இடம் பெற்று இருப்பவரும் ஆன மன்ஜோத் கல்ரா என்ற வீரருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்து அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது டெல்லி கிரிக்கெட்.

அண்டர் 19 உலகக்கோப்பை

அண்டர் 19 உலகக்கோப்பை

2018ஆம் ஆண்டு நடந்த அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் இந்தியா சார்பில் கலந்து கொண்டார் மன்ஜோத் கல்ரா. அந்த தொடரில் சிறப்பாக ஆடினார் அவர். அதே தொடரில் தான் ப்ரித்வி ஷா, ஷுப்மன் கில் உள்ளிட்டோரும் ஆடினர்.

இறுதிப் போட்டியில் சதம்

இறுதிப் போட்டியில் சதம்

அந்த தொடரின் இறுதிப் போட்டியில் சதம் அடித்த மன்ஜோத் கல்ரா அப்போது பரபரப்பாக பேசப்பட்டார். டெல்லி கேபிடல்ஸ் ஐபிஎல் அணியால் ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்டார்.

ரஞ்சி ட்ராபி அணி

ரஞ்சி ட்ராபி அணி

தொடர்ந்து டெல்லி ரஞ்சி ட்ராபி அணியில் கூட இடம் பெற்றார். அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாக கணிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் வயது மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

தடை உத்தரவு

தடை உத்தரவு

அதன் மீது டெல்லி கிரிக்கெட் அமைப்பால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி பதார் துராஸ் அஹ்மது விசாரணை மேற்கொண்டார். அதன் முடிவில் அவரை இரண்டு ஆண்டுகள் தடை செய்து உத்தரவிட்டார்.

போட்டியில் பங்கேற்க முடியாது

போட்டியில் பங்கேற்க முடியாது

அதன்படி வயது சார்ந்த அணிகளில் மன்ஜோத் கல்ரா அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பங்கேற்க முடியாது. ஒரு ஆண்டு முழுவதும் எந்த கிரிக்கெட் போட்டியிலும் அவர் பங்கேற்க முடியாது.

ரஞ்சி தொடரில் ஆட முடியாது

ரஞ்சி தொடரில் ஆட முடியாது

இரண்டாவது ஆண்டு முதல் வயது சாராத அணிகளில் அவர் இடம்பெறலாம். கிளப் போட்டிகள் போன்றவற்றில் பங்கேற்கலாம் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதனால், நடப்பு ரஞ்சி தொடரில் அவர் ஆட முடியாது.

நிதிஷ் ராணா மீது புகார்

நிதிஷ் ராணா மீது புகார்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் நிதிஷ் ராணா என்ற வீரர் மீதும் வயது மோசடி புகார் உள்ளது. அவர் ஏற்கனவே 2015இல் தண்டனை பெற்ற நிலையில், அவர் மீது மீண்டும் புகார் எழுந்துள்ளது.

2020 ஐபிஎல் பாதிக்கும்

2020 ஐபிஎல் பாதிக்கும்

இந்த முறை அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக வரும் 2௦20 ஐபிஎல் தொடரில் ஆட முடியாத நிலை ஏற்படும்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

இந்த நடவடிக்கைகள் இளம் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. முன்பு வயது மோசடி செய்தால் பெரிய அளவில் நடவடிக்கை இருக்காது என்ற நிலை இருந்தது. ஆனால், இனி தடை விதிக்கப்படும் என்பதால், இளம் வீரர்கள் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.

Story first published: Thursday, January 2, 2020, 11:19 [IST]
Other articles published on Jan 2, 2020
English summary
Delhi player Manjot Kalra banned for 2 years for age fraud. He scored a century in Under - 19 world cup in 2018.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X