மால்கம் மார்ஷலை நினைவுப்படுத்துகிறார் முகமது ஷமி - சுனில் கவாஸ்கர் மகிழ்ச்சி

கட்டாக் : இந்திய பௌலர் முகமது ஷமி, மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் மால்கம் மார்ஷலை நினைவுப்படுத்துவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஆழ்ந்த தூக்கத்தில் தான் இருந்தாலும் தன்னை எழுப்பிவிடும் திறன் மிக்கவர் மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் கிரிக்கெட் பௌலர் மால்கம் மார்ஷல் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்த ஆண்டில் 42 விக்கெட்டுகளை வீழ்த்தி முகமது ஷமி சாதனை புரிந்துள்ளார். கட்டாக்கில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகளின் முக்கியமான சாய் ஹோப்பின் விக்கெட்டை அவர் வீழ்த்தியுள்ளார்.

கோலி போனா என்ன? நாங்க இருக்கோம்! ஜோடி போட்டு வெளுத்த சிஎஸ்கே வீரர்கள்.. வெற்றிக்கு காரணம் இவங்கதான்!

3வது ஒருநாள் சர்வதேச போட்டி

3வது ஒருநாள் சர்வதேச போட்டி

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் கட்டாக்கில் நேற்று நடைபெற்ற 3வது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஷமியை புகழ்ந்து தள்ளிய மூத்த வீரர்

ஷமியை புகழ்ந்து தள்ளிய மூத்த வீரர்

இந்தியா -மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் வர்ணனையில் ஈடுபட்ட இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், பௌலர் முகமது ஷமியை புகழ்ந்து தள்ளினார்.

ஷமி குறித்து சுனில் கவாஸ்கர்

ஷமி குறித்து சுனில் கவாஸ்கர்

இந்திய பௌலர் முகமது ஷமி தனக்கு எப்போதுமே மேற்கிந்திய தீவுகளின் மால்கம் மார்ஷலை நினைவுப்படுத்துவதாக இந்த வர்ணனையின்போது சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.

மால்கம் மார்ஷல் குறித்து கவாஸ்கர்

மால்கம் மார்ஷல் குறித்து கவாஸ்கர்

ஆழ்ந்த தூக்கத்தில் தான் இருந்தாலும் தன்னை தூங்கவிடாமல் செய்பவர் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த மால்கம் மார்ஷல் என்று சுனில் கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஷமியை பாராட்டிய கவாஸ்கர்

ஷமியை பாராட்டிய கவாஸ்கர்

முகமது ஷமி பௌலிங் குறித்து சுனில் கவாஸ்கர் எப்போதுமே சிறப்பான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். முன்னதாக ஷமி வேட்டைக்கு செல்லும் சிறுத்தை போன்று பௌலிங் செய்யும்போது காணப்படுகிறார் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கபில் குறித்து கவாஸ்கர்

கபில் குறித்து கவாஸ்கர்

உலகக் கோப்பையை வென்ற இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ், இந்தியாவின் வேகப்பந்து வீச்சை மாற்றியவர் என்றும் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Former Cricketer Sunil Gavaskar says that Mohammed Shami reminds Malcolm Marshall
Story first published: Monday, December 23, 2019, 11:29 [IST]
Other articles published on Dec 23, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X