For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி இருக்கும் போது கிரீஸ் கோட்டை தாண்டாதீங்க.. எச்சரித்த ஐசிசி! ஏன் என்ன ஆச்சு?

Recommended Video

வீரர்களை எச்சரித்த ஐசிசி! ஏன் என்ன ஆச்சு?- வீடியோ

வெல்லிங்டன் : நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் தோனி ரன் அவுட் செய்தது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஐசிசி-யும் தன் பங்கிற்கு தோனியின் ரன் அவுட் குறித்து எச்சரிக்கும் வகையில் ஒரு பதிவை ட்விட்டரில் போட்டுள்ளது. அதுவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

ஐந்தாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷம்-ஐ ரன் அவுட் செய்தார் தோனி. ஜேம்ஸ் நீஷம் பந்தை அடிக்க முற்பட்ட போது பந்து காலில் பட்டது. அதற்கு எல்.பி.டபுள்யூ அவுட் கேட்டனர் இந்திய வீரர்கள்.

எளிய ரன் அவுட்

எளிய ரன் அவுட்

அப்போது பந்து தோனி அருகே இருப்பதை பார்க்காத ஜேம்ஸ் நீஷம் ரன் ஓட முற்பட, தோனி அவரை எளிதாக ரன் அவுட் செய்தார். இதை கண்ட ரசிகர்கள் தோனி இருக்கும் போது ரன் ஓடக் கூடாது என நீஷம்-ஐ கிண்டல் செய்து வந்தார்கள்.

ஐசிசி எச்சரிக்கை

ஐசிசி எச்சரிக்கை

ஐசிசி தற்போது தோனி பின்னே இருக்கும் போது கிரீஸ் கோட்டை தாண்டாதீர்கள் என எச்சரிக்கை விடுத்து ட்வீட் போட்டுள்ளது. இதையும் தோனி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

ஜேம்ஸ் நீஷம் நன்றி

இதில் சம்பந்தப்பட்ட நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷம் தனக்கு வரும் அறிவுரைகளை பார்த்து, அதற்கு நன்றி கூறி இனிமேல் பந்து எங்கே இருக்கிறது என பார்த்து ரன் ஓடுகிறேன் என கூறியுள்ளார்.

அடுத்து டி20 தொடர்

நியூசிலாந்து ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இந்தியா, அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. அந்த தொடரில் கோலி இடம் பெறாத நிலையில், ரோஹித் அணிக்கு தலைமை ஏற்க உள்ளார். தோனியும் டி20 தொடரில் பங்கேற்கிறார்.

Story first published: Monday, February 4, 2019, 15:53 [IST]
Other articles published on Feb 4, 2019
English summary
Never leave your crease with Dhoni behind stumps warns ICC
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X