For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்படியா அடி வாங்குவீங்க, குடிச்ச பாலெல்லாம் ரத்தமா வருதே.. இந்த மாதிரி புலம்புறாரே இம்ரான் கான்!

By Veera Kumar

லண்டன்: இப்படி போராட்டமே இன்றி பாகிஸ்தான் சரணடைந்தது வேதனை தருவதாக அந்த நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய அரசியல் புள்ளியுமான இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே, இரு நாட்டு ரசிகர்களும் ஏதோ யுத்தத்தை பார்ப்பதை போலத்தான் வெறியோடு பார்ப்பார்கள். அதிலும் பாகிஸ்தானின் இந்த வெறி மிகவும் அதிகம்.

ஆனால், பாகிஸ்தானின் போதாத காலமோ, அல்லது பதற்றத்தில் ஆடுவதால் ஏற்படும் வினையோ தெரியாது, ஐசிசி நடத்தும் பெரிய போட்டித்தொடர்களில் வரிசையாக இந்தியாவிடம் வாங்கிக் கட்டுவது அந்த நாட்டு வாடிக்கை.

ரசிகர்கள் விரக்தி

ரசிகர்கள் விரக்தி

மிகவும் எதிர்பார்த்து கிரிக்கெட்டை ரசிக்க ஆரம்பித்து தோல்வியில் முடிவடைந்தால் டிவியை போட்டு உடைப்பதும் அந்த நாட்டு ரசிகர்கள் வாடிக்கையாகிவிட்டது. நேற்றும் இதேபோலத்தான் நடந்தது.

ரன் குவித்த இந்தியா

ரன் குவித்த இந்தியா

நடப்பு சாம்பியன்ஸ் டிராபில் இரு அணிகளும் முதன் முதலில் நேற்று மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவர்களில் 319 ரன்களை குவித்தது. மழை காரணமாக ஓவர்கள்48ஆக குறைக்கப்பட்டிருந்தது.

சுருண்ட பாகிஸ்தான்

சுருண்ட பாகிஸ்தான்

இந்த நிலையில் மீண்டும் மழை பெய்ததால், பாகிஸ்தானுக்கு 41 ஓவர்களில் 289 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தனர். ஆனால், பாகிஸ்தானோ, 33.4 ஓவர்களில் 164 ரன்களுக்கே ஆல்அவுட்டானது.

இம்ரான்கான்

இம்ரான்கான்

பாகிஸ்தான் இவ்வாறு படுதோல்வியடைந்த நிலையில், இம்ரான்கான் வருத்தப்பட்டு டிவிட் செய்துள்ளார். இவர் தலைமையில்தான் பாகிஸ்தான் ஒரே ஒருமுறை உலக கோப்பையை வென்றிருந்தது. எனவே பெரிதும் மதிக்கப்படும் மாஜி கிரிக்கெட் வீரரான அவரே மனம் உடைந்து டிவிட் செய்துள்ளார்.

இப்படியா விழுவது

இம்ரான்கான் தனது டிவிட்டில், "ஒரு விளையாட்டு வீரர் என்ற முறையில், வெற்றி மற்றும் தோல்வி என்பது விளையாட்டில் சகஜம் என்பது எனக்கு தெரியும். ஆனால், பாகிஸ்தானை இந்தியா இப்படி அடித்து வீழ்த்தியதை பார்க்கும்போது வேதனையாக உள்ளது. பாகிஸ்தான் தரப்பில் எதிர்த்து போராடவேயில்லையே என்பதுதான் வருத்தத்திற்கு காரணம்" என கூறியுள்ளார்.

இந்தியா பெரிய அண்ணன்

பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டமைப்பு முற்றிலும் மாற்றப்படாவிட்டால், சீரமைக்கப்படாவிட்டால், என்னதான் திறமைசாலிகளை கொண்டிருந்தாலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நடுவேயான இடைவெளி அதிகரித்துக்கொண்டுதான் இருக்கும் என்று மற்றொரு டிவிட்டில் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் இப்படித்தான் பாகிஸ்தான் தோற்றுக்கொண்டே இருக்கும் என இம்ரான்கான் மற்றொரு டிவிட்டில் ஆரூடம் கணித்துள்ளார்.

Story first published: Monday, June 5, 2017, 12:00 [IST]
Other articles published on Jun 5, 2017
English summary
As a sportsman I know winning & losing are part of the game but it's painful to watch Pak being thrashed by India without putting up a fight, says Imran Khan, "Unless Pak cricket structure is totally revamped/reformed, despite an abundance of talent the gap between Pak & India will keep increasing" he added.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X