For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெட்கமா இல்லையா ? சஞ்சு சாம்சனின் வாழ்க்கையை கெடுக்காதீர்கள்.. பாக். முன்னாள் வீரர் கடும் தாக்கு

லாகூர் : இந்திய கிரிக்கெட் அணியில் அம்பத்தி ராயுடு விற்கு வாய்ப்பு கொடுக்காமல் வீணடித்தது போல் சஞ்சு சம்சனுக்கும் செய்ய வேண்டாம் என்று முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் குறித்து விமர்சனத்தை வைப்பதே தொழிலாக தற்போது பாகிஸ்தான் வீரர்கள் செய்து வருகின்றனர். ஆனால், சில சமயம், அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு யோசிக்க வைக்கிறது.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ரிஷப் பண்ட்க்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டது.

ரிஷப் பண்ட்-க்கு வைக்கப்பட்ட செக்.. இனி எந்த சலுகையும் செல்லவே செல்லாது.. 4 சீனியர்களால் வந்த ஆப்பு!ரிஷப் பண்ட்-க்கு வைக்கப்பட்ட செக்.. இனி எந்த சலுகையும் செல்லவே செல்லாது.. 4 சீனியர்களால் வந்த ஆப்பு!

கடும் தாக்கு

கடும் தாக்கு

ஒரே ஒரு போட்டியில் தான் சஞ்சு சாம்சன் விளையாடினார்.அதில் அவர் சிறப்பாக செயல்பட்டு அவருக்கு வாய்ப்பு வழங்காமல் கேப்டன் ஷிகர் தவான் அதிரடியாக நீக்கினார். இதனால் நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். சஞ்சு சாம்சனுக்கு நீதி வேண்டும் என ட்விட்டரில் பிசிசிஐக்கு எதிராக ட்ரண்ட் செய்தனர். இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா ஷிகர் தவானுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அம்பத்தி ராயுடு

அம்பத்தி ராயுடு

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் இந்திய அணியில் தேர்வு செய்யாமல் அம்பத்தி ராயுடு போன்ற சிறந்த வீரரை பிசிசிஐ வீணடித்து இருக்கிறது.இந்திய அணி நிர்வாகம் அம்பத்தி ராயுடுவின் கிரிக்கெட் வாழ்க்கையில் விளையாடியது. இதேபோன்று உன்ம்குந் சந்த் போன்ற வீரர்கள் இந்திய கிரிக்கெட்டை விட்டு விலகி வாய்ப்பு கிடைக்காததால் அமெரிக்காவுக்கு சென்று விளையாடி வருகிறார். இதை போன்று பலவீரர்கள் வாய்ப்பை சரியான நேரத்தில் பெறாமல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தனி இடத்தை பிடித்திருப்பார்

தனி இடத்தை பிடித்திருப்பார்

தற்போது இந்த பட்டியலில் சஞ்சு சாம்சனும் இடம்பெற்றிருக்கிறார். சஞ்சு சம்சனுக்கு மட்டும் பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருந்தால், அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருப்பார். ஆனால் வாய்ப்பு கிடைக்காததால் அவர் பெஞ்சில் உட்கார்ந்து கண்ணீர் விடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டதற்கான சரியான காரணத்தை தவான் கூறவில்லை. சஞ்சு சம்சன் ஏன் நீக்கப்பட்டார் என்று இந்திய அணி நிர்வாகமும் காரணம் சொல்லாதது வெட்கக்கேடானது என்று டேனிஷ் கனேரியா குறிப்பிட்டுள்ளார்.

கடைசி 9 இன்னிங்ஸ்

கடைசி 9 இன்னிங்ஸ்

ரிஷப் பண்ட் கடைசியாக விளையாடிய 9 இன்னிங்ஸில் ஒரு முறை கூட 30 ரன்களை தொடவில்லைம் இதில் ஐந்து முறை ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்திருக்கிறார். 10 ,15 ,11 ,6, 6, 3, 9, 9 மற்றும் 27 இதுதான் அவர் கடைசியாக விளையாடிய 9 இன்னிங்ஸில் ஸ்கோர் ஆகும். ஆனால் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடிய அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் ரிஷப் பண்டிற்கு பிசிசிஐ வாய்ப்பு தருவது கேலிக்கூத்தாக இருக்கிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Thursday, December 1, 2022, 23:23 [IST]
Other articles published on Dec 1, 2022
English summary
Pakistan ex cricketer Danish kaneria hits backs at indian team over sanju samson வெட்கமா இல்லையா ? சஞ்சு சாம்சனின் வாழ்க்கையை கெடுக்காதீர்கள்.. பாக். முன்னாள் வீரர் கடும் தாக்கு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X