For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சதம் போட்ட முதல் இந்தியர் ரெய்னா... சாம்பியன்ஸ் லீக்கில்!

பெங்களூர்: சாம்பியன்ஸ் லீக் டுவென்டி 20 போட்டியில் இதுவரை எந்த ஒரு இந்திய வீரரும் சதம் போட்டதில்லை என்ற நிலைமை இருந்து வந்தது. அதை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா நேற்று தீர்த்து வைத்து விட்டார்.

அவர் போட்ட சதம் இந்தியாவின் பெயரை சாதனையாளர்களின் வரிசையில் சேர்த்ததோடு, சென்னை சூப்பர் கிங்ஸுக்கும் 2வது கோப்பையைப் பெற்றுத் தர வழி வகுத்து விட்டது.

62 பந்துகளை மட்டுமே சந்தித்த ரெய்னா 109ரன்களைக் குவித்து கடைசி வர ஆட்டமிழக்காமலும் இருந்தார்.

கொல்கத்தாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி

கொல்கத்தாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி

மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டுவென்டி 20 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது. அதன் 14 தொடர் வெற்றிகளை நேற்றைய தோல்வி தடுத்து நிறுத்தி விட்டது.

8 விக்கெட் ..9 பந்து மிச்சம் வச்சு

8 விக்கெட் ..9 பந்து மிச்சம் வச்சு

நேற்றைய சேஸிங்கின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எட்டு விக்கெட்களையும், 9 பந்துகளையும் மீதம் வைத்து வெற்றியைத் தொட்டது.

வழக்கம் போல முடித்து வைத்த டோணி

வழக்கம் போல முடித்து வைத்த டோணி

வழக்கம் போல நேற்றைய போட்டியையம் கேப்டன் டோணிதான் சிறப்பாக முடித்து வைத்தார். வெற்றிக்கான ரன்னை அவர் தான் எடுத்தார்.

லாஸ்ட் பால்.. சூப்பர் சிக்ஸ்

லாஸ்ட் பால்.. சூப்பர் சிக்ஸ்

கடைசி பந்தை சூப்பராக தூக்கி அடித்து சிக்ஸருக்கு அனுப்பி வைத்து போட்டியை முடித்தார் டோணி. அவரது ஹெலிகாப்டர் ஷாட் ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கடித்தது.

2011 உலகக் கோப்பைப் போட்டியிலும் இப்படித்தான்

2011 உலகக் கோப்பைப் போட்டியிலும் இப்படித்தான்

இதேபோலத்தான் 2011 உலகக் கோப்பைப் போட்டியிலும் டோணி கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார் என்பது நினைவிருக்கலாம்.

2வது அணி

2வது அணி

இதற்கு முன்பு மும்பை அணிதான் 2 முறை சாம்பியன்ஸ் டிராபியை வென்ற ஒரே அணியாக வலம் வந்து கொண்டிருந்தது. தற்போது சென்னை அந்த சாதனையுடன் இணைந்துள்ளது.

மும்பை சீனியர்

மும்பை சீனியர்

மும்பை அணி இதற்கு முன்பு 2011 மற்றும் 2013 ஆகிய இரு முறை சாம்பியன் ஆனது. சென்னை 2010 மற்றும் 2014 கோப்பையை வென்றுள்ளது.

மூன்றிலும் சதம் போட்ட ரெய்னா

மூன்றிலும் சதம் போட்ட ரெய்னா

சர்வதேச டுவென்டி20, ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி டி20 ஆகிய மூன்று போட்டிகளிலும் சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை நேற்று சுரேஷ் ரெய்னா படைத்தார்.

Story first published: Sunday, October 5, 2014, 13:27 [IST]
Other articles published on Oct 5, 2014
English summary
Suresh Raina blazed his way to an unbeaten 62-ball 109 to power Chennai Super Kings to their second Champions League T20 (CLT20) title here tonight at M Chinnaswamy Stadium. With this triumph, CSK halted Kolkata Knight Riders' (KKR) 14-match unbeaten run.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X