For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டிக்கெட் கலெக்டரை விக்கெட் வேட்டையாட வைத்த மெக்கிராத்.. இந்திய வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம்!

Recommended Video

Ranji trophy 2019-20 | Himanshu Sangwan picks 6 wickets against Mumbai

மும்பை : ரஞ்சி ட்ராபி தொடரில் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் மும்பை அணியை சின்னாபின்னமாக்கி பெயர் பெற்றார் ரயில்வேஸ் அணியின் பந்துவீச்சாளர் ஹிமான்ஷு சங்வான்.

அவருக்கு ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆன கிளென் மெக்கிராத் பல யோசனைகள் கூறி பயிற்சி அளித்துள்ள தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

மும்பை - ரயில்வேஸ் போட்டி

மும்பை - ரயில்வேஸ் போட்டி

மும்பை அணி - ரயில்வேஸ் அணி இடையே ஆன ரஞ்சி ட்ராபி போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் ஆடியது ரயில்வேஸ் அணி. முதல் இன்னிங்க்ஸில் மும்பை அணியை 114 ரன்களில் சுருட்டி வீசியது அந்த அணி.

மும்பை அணியின் நிலை

மும்பை அணியின் நிலை

அடுத்து ரயில்வேஸ் அணியின் கேப்டன் கரன் சர்மா சதம் அடித்து அசத்த அந்த அணி முதல் இன்னிங்க்ஸில் 266 ரன்கள் குவித்தது. அடுத்து பெரிய அளவில் ரன் குவித்தால் மட்டுமே அவமானத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்ற நிலையில் ஆடியது மும்பை அணி.

முக்கிய விக்கெட்டுகள்

முக்கிய விக்கெட்டுகள்

மும்பை அணியில் இந்திய டெஸ்ட் அணி துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே, சர்வதேச அனுபவம் கொண்ட ப்ரித்வி ஷா ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். ஆனால், அவர்களை மிக விரைவாக வெளியேற்றினார் ஹிமான்ஷு.

ரயில்வேஸ் அணி வெற்றி

ரயில்வேஸ் அணி வெற்றி

மும்பை அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் 198 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரயில்வேஸ் அணி 47 ரன்களை சேஸ் செய்து 10 விக்கெட் வித்தியாசத்தில் பெரிய வெற்றி பெற்றது.

6 விக்கெட்கள் வீழ்த்தினார்

6 விக்கெட்கள் வீழ்த்தினார்

இந்தப் போட்டியில் இரண்டாம் இன்னிங்க்ஸில் 5 விக்கெட் வீழ்த்திய ஹிமான்ஷு சங்வான், இந்தப் போட்டியில் 6 விக்கெட்கள் வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

கிளென் மெக்கிராத் அசத்தல்

கிளென் மெக்கிராத் அசத்தல்

எம்ஆர்எஃப் ஃபேஸ் பவுண்டேஷனில் கிளென் மெக்கிராத்திடம் தன் பந்துவீச்சு குறித்து தனிப்பட்ட முறையில் பயிற்சி பெற்றுள்ளார் ஹிமான்ஷு சங்வான். அது பற்றி அவரே கூறி இருக்கிறார்.

சொல்லிக் கொடுத்தார் மெக்கிராத்

சொல்லிக் கொடுத்தார் மெக்கிராத்

"நான் மெக்ராத் மேற்பார்வையில் பல பந்துகளை வீசினேன், அவர் அதை குறிப்புகள் எடுத்தார். ஒவ்வொரு அமர்வுக்குப் பிறகும், அவர் என்னை ஊக்கப்படுத்தி, பந்துவீச்சு தொழில்நுட்பங்களை சொல்லிக் கொடுத்தார்" என்றார் ஹிமான்ஷு.

இரண்டு விஷயங்கள்

இரண்டு விஷயங்கள்

மேலும், "'அடிப்படைகளை கடைபிடி, பொறுமையாக இரு' என்ற இரண்டும் தான் மெக்கிராத் கூறியதில் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் விஷயங்கள். உண்மையில், அவரது வழிகாட்டுதல் ரஞ்சி டிராபியில் எனக்கு நிறைய உதவுகிறது" என்று சங்வான் கூறினார்.

Story first published: Thursday, January 2, 2020, 20:06 [IST]
Other articles published on Jan 2, 2020
English summary
Ranji Trophy : Himanshu Sangwan picks 6 wickets after training from Glenn McGrath.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X